உங்கள் வாக்களிக்கும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப்போகும் சமூக ஊடக பிரசார உத்திகள் குறித்து அவதானம் தேவை

0 136

அபூ ஆஃபியா

இலங்­கையின் அடுத்த ஐந்து ஆண்­டு­களை ஆளப்­போ­வது யார் என்­பதை தீர்­மா­னிக்கும் ஜனா­தி­பதித் தேர்­த­ல் செப்­டம்பர் 21 இல் நடக்கும் என தேர்தல் ஆணைக்­குழு அறி­வித்­துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தின­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு பல மாதங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே வேட்­பா­ளர்கள் தமது பிரச்­சார நட­வ­டிக்­கை­களை முடுக்கி விட்­டி­ருந்­தனர். இதில் குறிப்­பாக சமூக ஊட­கங்­களின் மூலம் மேற்­கொள்­ளப்­படும் பிர­சா­ரங்கள் முக்­கிய இடத்தை பிடிக்­கின்­றது. இலங்­கையின் சனத்­தொ­கையில் 50% அதி­க­மா­ன­வர்கள் இணை­யத்­த­ளத்தை பயன்­ப­டுத்­து­வதை தர­வுகள் மூலம் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதிலும் விஷே­ட­மாக 34.2 வீத­மா­ன­வர்கள் சமூக ஊடக பய­னர்­க­ளாக உள்­ள­தாக இவ்­வ­ருட ஆரம்­பத்தில் எடுக்­கப்­பட்ட தர­வுகள் சுட்டிக் காட்­டு­கின்­றன. அந்த அடிப்­ப­டையில் சமூக ஊட­கங்­களின் பய­னர்­களை இலக்­காகக் கொண்ட தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கை­களை திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் மேற்­கொண்டு வரு­கின்­றதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

அந்த வகையில் எதிர்­வரும் தேர்­தலில் வாக்­கா­ளர்­க­ளா­கிய நாம் இந்த பிரசார உத்­திகள் மற்றும் மூலங்கள் தொடர்­பான சரி­யான புரி­த­லுடன் இருப்­பது முக்­கி­ய­மா­ன­தாகும்.

சமூக ஊடக பிர­சார கட்­ட­மைப்பு
சமூக ஊட­கங்­களில் கட்­டணம் செலுத்தி மேற்­கொள்ளும் பிர­சார முறைகள் ஒரு பிரத்­தி­யேக கட்­ட­மைப்பை கொண்டு இயங்­கு­கின்­றன. சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஊட­கங்­க­ளான தொலைக்­காட்சி, பத்­தி­ரி­கைகள் மற்றும் வானொலி என்­ப­வற்றில் செய்­யப்­படும் விளம்­ப­ரங்­க­ளுக்கும் சமூக ஊடங்­களில் மேற்­கொள்­ளப்­படும் விளம்­ப­ரங்­க­ளுக்கும் இடையே கட்­ட­மைப்பு ரீதி­யான வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. சம்­பி­ர­தாய ஊட­கங்­களில் விளம்­ப­ரங்கள் பொது­வாக அனைத்துத் தரப்­பி­ன­ரையும் இலக்­காகக் கொண்டே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். சம்­பி­ர­தாய ஊட­கங்­களின் இலக்குக் குழுக்­களை வகைப்­ப­டுத்­து­வது கடி­ன­மா­னது. ஆனால் சமூக ஊட­கங்­களில் பய­னர்­களை வகைப்­ப­டுத்­து­வது இல­கு­வா­னது. பய­னர்­களின் வயது, பால், இடம் போன்ற வகைகள் மூலம் சமூக ஊடக பய­னா­ளர்­களை வகைப்­ப­டுத்தும் அதே­வேளை, அவர்­களின் விருப்பு வெறுப்­புகள், சமூக ஊட­கங்­களை அவர்கள் பயன்­ப­டுத்தும் விதம் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டும் வகைப்­ப­டுத்த முடியும்.

சமூக ஊடக நிறு­வ­னங்­களை பொறுத்­த­மட்டில் அவை வர்த்­தக நோக்­கங்­களைக் கொண்ட நிறு­வ­னங்­க­ளாகும். நாம் அதனை எந்­த­வித கட்­ட­ணமும் செலுத்­தாமல் இல­வ­ச­மாக பயன்­ப­டுத்தும் அதே­வேளை எமது தர­வு­களை அந்­தந்த நிறு­வ­னங்கள் அவர்­க­ளது வர்த்­தக நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­கின்­றன. பய­னர்­களின் சமூக ஊடகப் பாவ­னையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவர்­களை பல்­வேறு வகை­யான வகைப்­ப­டுத்­தல்கள் செய்து, அந்தத் தர­வு­களின் அடிப்­ப­டையில் குறிப்­பிட்ட இலக்கு குழுக்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்­கான பிரத்­தி­யே­க­மான விளம்­ப­ரங்­களை காண்­பிக்கும் கட்­ட­மைப்பு காணப்­ப­டு­கின்­றது.

சமூக ஊடகப் பிர­சா­ரங்கள் மீதான வேட்­பா­ளர்­களின் ஆர்வம்
சம்­பி­ர­தா­ய­பூர்வ ஊட­கங்­களைப் போன்­றல்­லாது சமூக ஊட­கங்கள் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பரந்­து­பட்ட மக்­களை சென்­ற­டை­வ­தற்கு இல­கு­வான வழி­யாகக் காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் அவர்­க­ளது செய்­தி­களை பிரத்­தி­யே­க­மான வகைப்­ப­டுத்­தலில் பல்­வேறு குழுக்­க­ளுக்கு சென்­ற­டையச் செய்­கின்­றது. இந்த ஒவ்­வொரு வகை­யி­ன­ருக்கும் அவர்­களின் விருப்பு வெறுப்­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பிரத்­தி­யே­க­மான செய்­திகள் வடி­வ­மைக்­கப்­பட்டு காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இது அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தமது வாக்­கா­ளர்­க­ளு­ட­னான நேர­டி­யான கலந்­து­ரை­யா­டலை அல்­லது தொடர்பு களை­ ஏற்­ப­டுத்த வழி அமைக்கும் அதே­வேளை வாக்­கா­ளர்­களின் கருத்­துக்­கள் மற்றும் பின்­னூட்­டங்­களை நேர­டி­யாகப் பெற்றுக் கொள்­வ­தற்கான ஊட­க­மாகவும் காணப்­ப­டு­கின்­றது. இதனால் அர­சி­யல்­வா­தி­களும் இந்த சிறப்­பி­யல்­பு­களைக் கொண்ட கட்­ட­மைப்­புக்கு ஆர்­வத்தை செலுத்­து­கின்­றனர்.

சமூக ஊடகப் பிர­சா­ரங்கள்
வாக்­கா­ளர்­களின் தீர்­மா­னத்தில் மேற்­கொள்ளும் தாக்கம்
இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சா­ரங்­களில் சமூக ஊட­கங்கள் முக்­கிய பங்கு வகிக்­கிற நிலையில் வாக்­கா­ளர்­களின் தீர்­மா­னத்தில் பல்­வேறு வழி­களில் தாக்கம் செலுத்தும் ஓர் ஊட­க­மாக காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக வாக்­கா­ளர்­களின் கருத்தை வடி­வ­மைக்­கவும் அவர்­களின் தீர்­மா­னங்­களில் மாற்­றங்­களைக் கொண்டு வரவும் சமூக ஊட­கப் பிர­சா­ரங்­க­ளுக்கு முடியும்.

இது இவ்­வாறு இருக்க, வேட்­பா­ளர்­க­ளுக்கு இடை­யி­லான கடு­மை­யான போட்டி இந்த சமூக ஊட­கங்­களை எதிர்­ம­றை­யா­கவும் வேட்­பா­ளர்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் பயன்­ப­டுத்­து­கின்ற சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ளது. தவ­றான தக­வல்கள், திரி­பு­ப­டுத்­தப்­பட்ட புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இந்த பிரசாரங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். அதனால், வாக்காளர்களாகிய எமது திரையில் தோன்றும் புகைப்படங்களோ காணொளிகளோ உண்மையானது என்று நம்ப முடியாது.

திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் அல்லது தவறான தகவல்கள் அடங்கிய செய்திகள் பகிரப்படலாம். எனவே இந்தத் தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய தெளிவுடன் இருந்து எமது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, எம் முன்னே வரும் தகவல்களை சரி பார்த்து, வடிகட்டி எடுக்க வேண்டியதன் பொறுப்பும் எம்மிடமே உள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.