அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்தார் ரிஷாத் பதியுதீன்

0 118

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொழும்பில் கூடிய அக்கட்சியின் உயர்பீடம் இது தொடர்­பி­லான தீர்­மா­னத்தை அறி­வித்­தது.

ஏற்­க­னவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்­பான தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தற்­கான கடந்த 6 ஆம் தினதி அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீடம் கொழும்பில் கூடி­யது. எனினும், அன்­றைய தினம் தீர்­மானம் எட்­டப்­ப­டா­த­நி­லையில் இது தொடர்­பாக கட்சி அங்­கத்­த­வர்­களின் கருத்­து­களை அறி­வ­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இறுதித் தீர்­மானம் 14 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது.
இதற்­கி­டையில் மாவட்ட மட்­டத்தில் கருத்­த­றியும் வேலைத்­திட்டம் கடந்த ஒரு­வா­ர­கா­ல­மாக இடம்­பெற்­றது.

இந்­நி­லையில் நேற்று மாலை கொழும்பில் மீண்டும் கூடிய அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீடம், கட்­சியின் நிலைப்­பாட்டை அறி­வித்­தது.
இதற்­கி­ணங்க கட்­சியின் பெரும்­பான்மை உறுப்­பி­னரின் அபிப்­பி­ரா­யத்தின் அடிப்­ப­டையில் ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் 10 அம்சக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது. அதற்கு இணங்­கும்­பட்­சத்தில் தமது ஆத­ரவை உறு­திப்­ப­டுத்தும் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

தமது கோரிக்­கை­களை முன்­வைத்து அதற்­கான சாத­க­மான பதில் கிடைக்­கும்­பட்­சத்தில் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில், இந்த கூட்டம் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்காக அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் குழுவொன்று சென்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.