ஷேக் ஹஸீனாவை விரட்டிய பங்களாதேஷ் ‘அரகலய’

0 155

பங்­க­ளா­தேஷில் இந்த வாரம் நடை­பெற்ற நிகழ்­வுகள் அந்­நாட்டின் வர­லாற்­றையே புரட்­டிப்­போட்­டுள்­ளன. வேலை­வாய்ப்­பு­களில் நியா­ய­மான இட ஒதுக்­கீடு கோரி ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம், எதிர்­பா­ராத வித­மாக பிர­தமர் ஷேக் ஹஸீ­னா­வையே நாட்டை விட்டு விரட்­டி­ய­டிக்­கு­ம­ளவு வீரியம் பெற்­றி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 2022 இல் இலங்­கையில் நடந்த அர­க­ல­ய­வுக்கும் இப்­போது பங்­க­ளா­தேஷில் நடக்கும் நிகழ்­வு­க­ளுக்­கு­மி­டையில் பெரி­ய­ளவு வேறு­பா­டுகள் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

கடந்த 1971 ஆம் ஆண்டு பங்­க­ளா­தேஷின் விடு­தலைப் போராட்­டத்தில் உயி­ரி­ழந்த படை­வீ­ரர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு அரசு வேலை வாய்ப்­பு­களில் 30 சத­வீதம் இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்டும் என்ற நீதி­மன்­றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாண­வர்கள் போராட்­டத்தில் குதித்­தனர். போராட்­டக்­கா­ரர்கள் மீது காவல்­து­றை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் 200-க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­தனர்.

இந்­நி­லையில், பொலிஸை ஏவி போராட்­டக்­கா­ரர்­களைக் கொன்­ற­தற்கு நீதி கேட்டு கடந்த ஞாயி­றன்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள், பங்­க­ளா­தேஷ் தலை­நகர் டாக்­காவின் மத்­திய சதுக்­கத்தில் குவியத் தொடங்­கினர். மேலும், பல்­வேறு நக­ரங்­க­ளிலும் போராட்டம் வெடித்­தது. பிர­தமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்­டக்­கா­ரர்கள், இனி மக்கள் யாரும் அர­சுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழி­யர்கள் மற்றும் மற்றும் ஆடைத்துறை தொழி­லா­ளர்கள் வேலை நிறுத்தம் மேற்­கொள்ள வேண்டும் என்றும் நாடு தழு­விய ஒத்­து­ழை­யாமை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­தனர்.

கட்­டி­டங்கள், வாக­னங்­க­ளுக்கு போராட்­டக்­கா­ரர்கள் தீவைத்­தனர். போராட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்த காவல் துறை­யினர் கையெறி குண்­டு­களை வீசினர். போராட்­டக்­கா­ரர்­களும் பொலிஸார் மீது பதில் தாக்­குதல் நடத்­தினர். இதில் 14 பொலிஸார் உயி­ரி­ழந்­தனர்.

ஷேக் ஹஸீனா அர­சுக்கு அர­சுக்கு எதி­ராக மாண­வர்கள் போராட்டம் தீவி­ர­ம­டைந்த நிலையில், ஞாயிறு மாலை நாடு தழு­விய ரீதியில் ஊர­டங்கு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. மேலும், இணைய சேவையும் முடக்­கப்­பட்­ட­துடன் 3 நாள் தேசிய விடு­மு­றையும் அறி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் பங்­க­ளா­தேஷின் பல்­வேறு இடங்­களில் நடை­பெற்ற வன்­மு­றையில் 119 பேர் கொல்­லப்­பட்­ட­தாக அந்த நாட்டு ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­கிது. போராட்­டங்கள் ஆரம்­பித்த கடந்த ஒரு மாத காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற வன்­மு­றை­களுல் மொத்தம் 440 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில், முப்­படை தள­ப­திகள், காவல் துறை தலைவர் உட்­பட பல்­வேறு பாது­காப்பு அதி­கா­ரி­களை சந்­தித்து ஆலோ­சனை நடத்­திய பிர­தமர் ஷேக் ஹசீனா “அர­சுக்கு எதி­ராக போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் மாண­வர்கள் இல்லை. அவர்கள் தீவி­ர­வா­திகள். நாட்டை சீர்­கு­லைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என தெரி­வித்தார்.

எனினும் மாண­வர்கள் முன்­னெ­டுத்த போராட்டம் பெரி­தாகி, இலட்­சக்­க­ணக்­கான மக்கள் தெருக்­களில் இறங்கியதால் அவரால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. பதவியை இராஜினாமாச் செய்து நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அவருக்க வேறு வழி இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிர­தமர் பத­வியை ராஜி­னாமா செய்­தது மட்­டு­மல்­லாமல், தனது சகோ­த­ரி­யுடன் நாட்டை விட்டும் வெளி­யே­றினார்.
ஷேக் ஹசீனா பங்­க­ளா­தேஷில் இருந்து இந்­தி­யா­வின் டெல்லியை ஹெலி­கொப்டர் மூலம் சென்றடைந்தார். இந்­திய விமா­னப்­படை, பலத்த பாது­காப்­புடன் அவரை டெல்­லிக்கு அழைத்து வந்­தது.

“இந்­திய விமா­னப்­படை திங்­கட்­கி­ழமை பிற்­பகல் 3 மணி­ய­ளவில், தாழ்­வாகப் பறக்கும் விமானம் ஒன்று இந்­தி­யாவை நோக்கி வரு­வதைக் கண்­டது. அந்த விமா­னத்தில் வரு­வது யார் என்ற தகவல் விமா­னப்­படை வீரர்­க­ளிடம் இருந்­ததால் விமானம் இந்­தி­யா­வுக்குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­டது” என்று ஏஎன்ஐ முகமை கூறி­யுள்­ளது.

தற்போது இந்தியாவில் தங்கியுள்ள அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் தஞ்சமடைய முயற்சித்து வருவதாக தெரிகிறது. எனினும் மேலும் சில வாரங்களுக்கு அவர் இந்தியாவிலேயே தங்கியிருப்பார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இனி அர­சி­ய­லுக்கு திரும்ப மாட்டார்
ஷேக் ஹசீனா இனி அர­சி­ய­லுக்கு திரும்ப மாட்டார் என்று அவ­ரது மகனும் தலைமை ஆலோ­ச­க­ரு­மான சஜீப் வஜீத் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து தனியார் ஊட­கத்­திடம் தெரி­வித்த அவர், “இவ்­வ­ளவு கடின உழைப்­புக்குப் பிறகும் மக்கள் தனக்கு எதி­ராக திரும்­பி­யதால் ஷேக் ஹசீனா மிகவும் அதி­ருப்­தி­ய­டைந்துள்ளார். ஷேக் ஹசீனா பிர­தமர் பத­வியில் இருந்து வில­கு­வது குறித்து ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஆலோ­சித்து வந்தார். இனி அவர் அர­சி­ய­லுக்கு திரும்பி வர­மாட்டார். அவர் இந்த நாட்­டையே தலை­கீ­ழாக மாற்­றினார். அவர் ஆட்­சிக்கு வரும்­போது இது ஒரு வீழ்ச்­சி­ய­டைந்த நாடாக இருந்­தது. ஏழை நாடாக கரு­தப்­பட்­டது. ஆனால் இப்­போது இந்த நாடு ஆசி­யாவின் அதிகம் வளரும் நாடு­களில் ஒன்­றாக இருக்­கி­றது” எனத் தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் மாளி­கையை சூறை­யா­டிய போராட்­டக்­கா­ரர்கள்
போராட்­டக்­கா­ரர்கள் பங்களாதேஷ் தலை­நகர் டாக்­காவில் உள்ள பிர­த­மரின் அதி­கா­ர­பூர்வ இல்­லத்­துக்குள் நுழைந்து சூறை­யா­டினர். பிர­தமர் பத­வியை ராஜி­னாமா செய்து டாக்­காவில் இருந்து இரா­ணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளி­யே­றிய நிலையில், பிர­த­மரின் அதி­கா­ர­பூர்வ இல்­லத்­துக்குள் நுழைந்து கையில் சிக்­கு­வதை எடுத்­துக்­கொண்டு ஓடினர். சிலர் முக்­கிய ஆவ­ணங்­களை கிழித்­தெறிந்தனர்.

கைகளில் தடி­க­ளுடன் அதி­கா­ரி­களின் பாது­காப்பை மீறி பிர­தமர் இல்­லத்­துக்குள் நுழைந்த போராட்­டக்­கா­ரர்கள் அங்­கி­ருந்து ஆட்­டுக்­குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்­களை எடுத்துச் சென்ற காட்­சிகள் வெளி­யா­கி­யுள்­ளன. சிலர், பிர­த­மரின் நாற்­கா­லியில் அமர்ந்­து­கொண்டு புகைப்­படம் எடுத்­தனர். இன்னும் சிலர் அங்­கி­ருந்த உணவுப் பொருட்­களை எடுத்து சாப்­பிட்­டனர். சிலர் பாத்­தி­ரங்கள், மேசை விரிப்­பு­களை எடுத்துச் சென்­றனர். இன்னும் சிலர் அங்­கி­ருக்கும் புல்­வெளி, அழ­கான இடங்கள் முன் புகைப்­படம் எடுத்­தனர். போராட்­டக்­கா­ரர்­களின் செயல்கள் புகைப்­ப­டங்கள், வீடி­யோக்­க­ளாக வெளி­யாகி இணை­யத்தில் கவனம் பெற்­று­வ­ரு­கின்­றன.

மேலும், அவாமி லீக் கட்­சியின் மத்­திய அலு­வ­லகம், அவாமி லீக் கட்­சியின் பல தலை­வர்­களின் குடி­யி­ருப்­புகள் மற்றும் வணிக நிறு­வ­னங்­களும் ஒரே நேரத்தில் போராட்­டக்­கா­ரர்­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­ன.

இந்து கோயில்கள் மீதும் தாக்­குதல்
தலை­நகர் டாக்­காவில் இந்­திய கலாச்­சார மையம் போராட்­டக்­கா­ரர்­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் நாடு முழு­வதும் 4 இந்துக் கோவில்கள் சேத­ம­டைந்­துள்­ள­ன.

கோயிலுக்கு பாதுகாப்பு வழங்கும் முஸ்லிம்கள்

இது குறித்து தெரி­வித்­துள்ள இந்து பௌத்த கிறிஸ்­தவ ஒற்­றுமை கவுன்சில் தலைவர் கஜோல் தேவ்நாத், டாக்­காவின் தன்­மோந்தி பகு­தியில் அமைந்­துள்ள இந்­திரா காந்தி கலாச்­சார மையம் வன்­முறை கும்­பலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்தார். மேலும் 4 இந்து கோயில்கள் சிறிய அளவில் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இது தவிர டாக்­காவில் உள்ள பங்­க­பந்து நினைவு அருங்­காட்­சி­யகம் உட்­பட பல்­வேறு முக்­கிய கட்­டி­டங்கள் தீவைத்து கொளுத்­தப்­பட்­டுள்­ளன. பங்­க­பந்து அருங்­காட்­சி­யகம், 1975ஆம் ஆண்டு படு­கொலை செய்­யப்­பட்ட முன்னாள் வங்­க­தேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (ஷேக் ஹசீ­னாவின் தந்தை) நினை­வாக கட்­டப்­பட்­டது. சேத­ம­டைந்த இந்­திய கலாச்­சார மையத்தில் 21 ஆயிரம் புத்­த­கங்கள், பல்­வேறு வர­லாற்று ஆவ­ணங்கள் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கோயில்­களை இர­வி­ர­வாக பாது­காத்த முஸ்­லிம்கள்
வன்­மு­றை­க­ளின்­போது இந்து கோயில்­களும் ஆர்ப்­பாட்­டக்­காரர்­களால் இலக்கு வைக்­கப்­பட்­டன. அத­னை­ய­டுத்து நாட்­டி­லுள்ள ஏனைய கோயில்­களும் தாக்­கப்­ப­டலாம் என்ற அச்சம் பர­வி­யதால் முஸ்லிம் மக்கள் முன்­வந்து கோயில்­க­ளுக்கு இர­வி­ர­வாக பாது­காப்பு வழங்­கினர்.

முன்னாள் பிர­தமர் பேகம் காலிதா ஸியா விடு­தலை
பங்களாதேஷ் முன்னாள் பிர­தமர் பேகம் காலிதா ஸியா வீட்டு காவலில் இருந்து விடு­விக்­கப்­பட்டுள்ளார். இதற்­கான உத்­த­ரவை அந்­நாட்டு அதிபர் முக­ம்மது சகா­புதீன் பிறப்­பித்­துள்ளார். மேலும், கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரையும் அதிபர் விடு­தலை செய்­துள்ளார்.

பங்களாதேஷ் தேசி­ய­வாத கட்­சியின் (பி.என்.பி.) தலை­வ­ரான பேகம் காலிதா ஸியா அந்­நாட்டின் முதல் பெண் பிர­தமர் என்ற பெரு­மையை பெற்­றவர்.
அவர், பல ஆண்­டு­க­ளாக அர­சி­யலில் ஈடு­ப­டாமல் வில­கியே இருந்து வரு­கிறார். அவ­ருக்கு நீரி­ழிவு, இரு­தய பாதிப்­புகள் உள்­ளிட்ட பல்­வேறு வியா­திகள் உள்­ளன என மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர்.

கடந்த காலத்தில், ஷேக் ஹசீ­னா­வுடன் இணைந்து பணி­யாற்­றினார். ஆனால், இருவருக்கு இடையேயான ஒத்துழைப்பு நீண்ட நாட்கள் வரை நீடிக்கவில்லை. அதன்பின் நடந்த தேர்தலில் ஹசீனாவை வீழ்த்தி காலிதா ஸியா வெற்றி பெற்றார். முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த சூழலில், ஷேக் ஹசீனா பிர­த­ம­ரான பின், காலிதா ஸியா­வுக்கு எதி­ராக பல்­வேறு ஊழல் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து அவ­ருக்கு 17 ஆண்­டு­கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவர் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்டார். ஏறக்­கு­றைய 6 ஆண்­டு­க­ளாக காவலில் இருந்த நிலையில், ஸியாவை விடு­வித்து அதிபர் சகா­புதீன் உத்­த­ர­விட்டு உள்ளார்.

பின்­ன­ணியில் வெளி­நாட்டு சக்­தியா?
பங்­க­ளா­தேஷில் நடந்த இந்த சடு­தி­யான அர­சியல் மாற்­றத்தின் பின்­ன­ணியில் வெளி­நா­டு­களின் மறை­கரம் இருப்­ப­தாக அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தப் போராட்­டத்தின் பின்­ன­ணியில் இருந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைப்பு
நாட்டில் அர­சியல் ஸ்திர­மின்மை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து பங்­க­ளாதேஷ் நாடா­ளு­மன்­றத்தை கலைத்து அதிபர் முக­மது சஹா­புதீன் உத்­த­ர­விட்­டுள்ளார். இது தொடர்­பாக அதிபர் மாளிகை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில், “கடந்த ஜன­வரி 7 ஆம் திகதி நடை­பெற்ற தேசியத் தேர்­தலின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட 12-வது நாடா­ளு­மன்­றத்தை அதிபர் முக­மது சஹா­புதீன் இன்று (ஆகஸ்ட் 6) கலைத்தார். முப்­ப­டை­களின் தலை­வர்கள், பல்­வேறு அர­சியல் கட்சித் தலை­வர்கள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ரான மாணவர் இயக்கத் தலை­வர்கள் ஆகி­யோ­ருடன் குடி­ய­ரசுத் தலைவர் நடத்­திய ஆலோ­ச­னையைத் தொடர்ந்து நாடா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்­கப்­பட்­டது.

அர­சி­ய­ல­மைப்­பின்­படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு 90 நாட்­க­ளுக்கு முன்­பாக தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் முடி­வ­டையும் முன்­பாக நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­மானால் அடுத்த 90 நாட்­க­ளுக்குள் நாடா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். எனவே, வரும் 90 நாட்­க­ளுக்குள் நாடா­ளு­மன்­றத்­துக்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்­டிய கட்­டாயம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இத­னி­டையே, வங்­க­தே­சத்தில் இடைக்­கால அரசை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை இராணுவம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை, இராணுவத் தளபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இடைக்கால பிரதமராக பேராசிரியர் முகம்மது யூனுஸ்?
நோபல் பரி­சு­பெற்ற பேரா­சி­ரியர் முகம்­மது யூனுஸ், புதிய அரசின் தலைமை ஆலோ­ச­க­ராக இருக்க வேண்டும் என்று மாண­வர்கள் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்தி உள்­ளனர். அவரைத் தவிற வேறு யாரையும் தங்­களால் ஏற்க முடி­யாது என்றும் அவர்கள் கூறி உள்­ளனர். மாண­வர்­களின் கோரிக்­கையை ஏற்று புதிய அரசை வழி­ந­டத்த தயார் என்று முக­மது யூனுஸ் தெரி­வித்­துள்ளார்.

பேராசிரியர் முகம்மது யூனுஸ்

“மாண­வர்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்தி இருக்­கி­றார்கள். அதற்­காக அவர்கள் மிகப் பெரிய விலையை கொடுத்­தி­ருக்­கி­றார்கள். மாண­வர்­களால் இவ்­வ­ளவு பெரிய தியாகம் செய்ய முடி­யு­மானால், எனக்கும் சில பொறுப்­புகள் உண்டு. எனவே, அவர்கள் கோரிக்­கை­யின்­படி நான் பொறுப்பை ஏற்க முடியும் என்று மாண­வர்­க­ளிடம் கூறினேன்” என்று முக­மது யூனுஸ் கூறி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

தற்­போது பிரான்சில் தங்­கி­யி­ருக்கும் முகம்­மது யூனுஸ் ஓரிரு தினங்­களில் பங்களாதேஷை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு கடன் வழங்குமளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வந்த பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. உடனடியாக அங்கு ஸ்திரமான ஆட்சி நிறுவப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.