கிழக்கு மாகாணத்தில் 170 கோடி ரூபா நிதி மோசடி விசாரணைகளின் முன்னேற்ற தன்மை என்ன?

0 215

(எம் ஆர்.எம்.வசீம், இரா­ஜ­துரை ஹஷான்)
கிழக்கு மாகா­ணத்தில் அப்­பாவி மக்­களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­றுள்ள நிதி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளரை நாட்­டுக்கு கொண்டு வர முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­வைத்­துள்ள கேள்­விகள் இன்று வரை இழு­பறி நிலையில் உள்­ளது. ஒன்று பதி­ல­ளி­யுங்கள், இல்­லையேல் வாய்­மூல விடைக்­கான வினாக்கள் முறை­மையை இரத்து செய்­யுங்கள் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமர்வின் போது மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சம்­மாந்­துறை, கல்­முனை,பொத்­துவில், ஏறாவூர் மற்றும் மரு­த­முனை ஆகிய பகு­தி­களில் 2014.02.05 ஆம் திகதி முதல் ப்ரிவெல்த் க்ளோபல் பிரைவட் லிமிடெட் எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திச் செல்­லப்­பட்­டதா,? அந்­நி­று­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக பணி­யாற்­றிய அஹமட் செரீம் முஹம்­மது சிஹாப் மற்றும் பாத்­திமா பர்­ஸானா மார்கார் ஆகியோர் சுமார் 1400 பேரின் 170 கோடி ரூபா­வுக்கும் மேற்­பட்ட நிதியை மோசடி செய்­துள்­ளார்கள் என்­ப­தையும், மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட பணி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் இன்று வரை இந்­தி­யாவில் தலை­ம­றை­வாகி இருப்­ப­தையும் இது தொடர்பில் கல்­முனை மற்றும் சம்­மாந்­துறை பொலிஸ் நிலை­யங்­களில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தையும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் அறி­வாரா?
இவர்­களை கைது செய்து இலங்­கைக்கு அழைத்து வர எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் என்­ன­வென்­ப­தையும் அமைச்சர் சபைக்கு அறி­விப்­பாரா? என கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

இந்த கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் சார்பில் ஆளுங்­கட்­சியின் பிர­தம கொற­டா­வான பிர­சன்ன ரண­துங்க 3 மாதங்கள் கால­ அவ­காசம் கோரினார்.

இதன்­போது எழுந்து உரை­யாற்­றிய தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம், இந்த கேள்­வி­களை 2020 செப்­டெம்பர் மாதம் கேட்டேன். நடுத்­தர மக்­களின் 170 கோடி ரூபா மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது.இந்த நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்­ற­தாக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் எம்­மிடம் முறை­யிட்டு, பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக பதிலை எதிர்­பார்த்­துள்­ளார்கள்.

2020 முதல் இன்று வரை மூன்று தட­வைகள் இந்த கேள்­வி­களை தொடர்ந்து சமர்ப்­பித்­துள்ளேன்.ஆனால் இது­வரை பதில் கிடைக்­க­வில்லை.மக்கள் மத்­தியில் செல்லும் போது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எம்­மிடம் கேள்வி கேட்­கி­றார்கள்.தொடர்ந்து தாம­தப்­ப­டுத்­து­வதால் நாங்­களும் இதில் தொடர்­பு­பட்­டுள்ளோம் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சந்­தே­கப்­ப­டு­வார்கள்.

முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் பற்றி கேட்கும் போது அதற்கு பதி­ல­ளிக்­காமல் காலம் தாழ்த்­து­வது முறை­யற்­றது. ஆகவே சபா­நா­யகர் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட வேண்டும் என்றார்.

இதன்­போது சபைக்கு தலைமை தாங்­கிய சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன, ‘நீங்கள் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பா­ட­ளித்­தீர்­களா’ என்று கேள்­வி­யெ­ழுப்­பினார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம், வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சின் ஊடாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு இவ்­வி­ட­யங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இருப்­பினும் இது­வரை முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கைகள் ஏதும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இலங்கை பொலிஸார் இவ்­வி­ட­யத்தை நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்து பிடி­யாணை உத்­த­ரவை பெற்­றுக்­கொண்டால் அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கலாம் என்று இந்­திய அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.ஆகவே இவ்­வி­ட­யத்தில் உட­ன­டி­யாக தீர்வை பெற்­றுக்­கொ­டுங்கள் என்றார்.

இதன்­போது எழுந்து உரை­யாற்­றிய சபை முதல்வர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, இது பாரிய நிதி மோச­டி­யாகும். 170 கோடி ரூபா மோசடி செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. ஆகவே இந்த விடயம் குறித்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களின் முன்­னேற்­றத்­தன்மை தொடர்பில் விட­ய­தா­னத்­துக்கு பொறுப்­பான அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி இரு நாட்களுக்குள் அறிவிக்கிறேன் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.