முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக எம்.எஸ்.எம்.நவாஸ் கட­மை­களை பொறுப்­பேற்பு

0 131

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் புதிய பணிப்­பா­ளராக எம்.எஸ்.எம். நவாஸ் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தனது கட­மையை உத்­தி­யோக பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிரு­வாக சேவையின் தரம் 1 ஐச் சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்­பா­ள­ராக நிய­மித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு முன்னர் இவர் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பணிப்­பா­ள­ரா­கவும் அதன் பின்னர் கைத்­தொழில் அமைச்சில் மேல­திக உதவிச் செய­லா­ள­ரா­கவும் கட­மை­யாற்றி தற்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தனது கட­மையைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.