பலஸ்தீன தூதுவருக்கு மஹிந்த, ஹக்கீம் பிரியாவிடை

0 94

இலங்­கையில் மிக நீண்ட கால­மாக பலஸ்­தீன தூது­வ­ராக கட­மை­யாற்­றிய பின்னர், இஸ்­லா­மா­பாத்­திற்கு இரா­ஜ­தந்­தி­ரி­யாக இட­மாற்றம் பெற்றுச் செல்லும் கலா­நிதி சுஹைர் எம்.எச்.செய்த், முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்­சவை அவ­ரது இல்­லத்­திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமை கட்­சியின் தலை­மை­ய­கத்­திலும் பிரி­யா­விடை நிமித்தம் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.

மஹிந்த ராஜ­பக்­ச­வு­ட­னான சந்­திப்­பின்­போது, அவர் பலஸ்­தீ­னத்­திற்கு தொடர்ச்­சி­யாக வழங்கி வரும் ஆத­ர­வுக்கு நன்­றி­களை தெரி­வித்தார். அத்­துடன், இதன்­போது முன்னாள் ஜனா­தி­ப­திக்கு நினைவுச் சின்­ன­மொன்­றையும் பலஸ்­தீனத் தூதுவர் வழங்­கி­வைத்தார்.

இத­னி­டையே, பலஸ்­தீனம் சுதந்­தி­ர­மான இறை­மை­யுள்ள நாடாக மிளிர்­வ­தற்கும், அங்கு வாழும் மக்கள் இனப் படு­கொலை செய்­யப்­ப­டு­வதைக் கண்­டித்தும் மூன்று தசாப்த கால­மாக இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் ஓயாது குரல் எழுப்பி வரு­வ­தற்­காக பலஸ்­தீன மக்­களின் சார்பில் நன்­றி­களை அவர் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரிடம் தெரி­வித்துக் கொண்டார்.

பலஸ்­தீனம் ஒரு சுதந்­தி­ர­மான இறை­மை­யுள்ள நாடாக விளங்க வேண்டும் என்­பது தமது வாழ்நாள் ஆசை என்­ப­தாக அவ­ரிடம் ஹக்கீம் கூறினார்.
பிராந்­திய நாடு­களில் ஒன்­றான பாகிஸ்­தா­னுக்கு தூது­வ­ராகச் செல்லும் கலாநிதி சுஹைர் எம். எச் செய்த்தை தாம் மனப்பூர்வமாக வாழ்த்துவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.