ஜனாதிபதி தேர்தல் 2024: முஸ்லிம் தரப்பின் ஆதரவு யாருக்கு?

0 200
  • நிபந்தனையுடன் சஜித்துக்கு ஆதரவு என மு.கா. அறிவிப்பு
  • அ.இ.ம.கா. 14 ஆம் திகதியன்று நிலைப்பாட்டை வெளியிடும்
  • ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தேசிய காங்கிரஸ்
  • ந.தே.மு., ச.நீ.க. உள்ளிட்டோரும் தீர்மானமில்லை
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

(எம்.வை.எம்.சியாம்)
ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­கான வைப்புத் தொகை செலுத்தும் காலம் எதிர்­வரும் 14 ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில், கூட்­ட­ணி­க­ளுகளை அமைப்பதற்கான வேலைகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லையில், சிறு­பான்மை முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் கட்­சிகள் மற்றும் அர­சியல் பிர­மு­­கர்­களை தம்­மோடு இணைத்துக் கொள்­வ­தற்­காக பிர­தான வேட்­பா­ளர்கள் பலரும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந்­நி­லையில், ஏற்­க­னவே, முஸ்லிம் காங்­கிரஸ் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் தேசிய காங்­கிரஸ் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் என தமது ஆத­ரவு நிலைப்­பாட்டை வெளி­யிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அ­கில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எதிர்­வரும் 14 ஆம் திகதி தமது தீர்­மா­னத்தை வெளி­யி­ட­வுள்­ள­தாக அறி­வுத்­துள்­ளது. இதே­வேளை, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, சமூக நீதிக்­கட்சி உள்­ளிட்ட ஏனைய தரப்­புகள் இன்னும் தத்­த­மது நிலைப்­பாட்டை எதிர்­வரும் நாட்­களில் வெளி­யி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன், ஆளும் எதிர் தரப்­பி­லுள்ள முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது ஆத­ரவு எந்த வேட்­பா­ள­ருக்கு என்­பதை அறி­வித்து வரு­கின்­றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ்
ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வதற்­கான தீர்­மா­னத்தை கடந்த ஞாயி­றன்று அறிவித்­தது.
மூன்று பிர­தான நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் சஜித் பிரே­ம­தா­வுடன் கலந்­து­ரை­யாடி தமது கோரிக்­கை­க­ளுக்கு உடன்­ப­டும்­பட்­சத்தில் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக மு.கா. தலைவர் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடக் கூட்டம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் உள்ள கட்­சியின் தலை­மை­ய­க­மான தாரு­ஸ்ஸலாத்தில் கூடி­யது. மிக நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் எதிர்­வரும் ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்க கட்­சியின் உயர்­பீடம் ஏக­மா­ன­தாக தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்தார்.

மு.கா. உத்தியோகபூர்வமாக இத்தீர்மானத்தை அறிவித்துள்ளபோதிலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட மேலும் பல கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கட்சியின் தீர்மானத்தில் உடன்பாடு இல்லாத நிலையில் உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு சஜித் சாதகமாக பதிலை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து எதிர்­வரும் 14 ஆம் திக­திக்குள் அறி­விக்­க­வுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பான தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செயற்­குழு கூட்டம் நேற்று முன்­தினம் பிற்­பகல் கொழும்பில் கூடி­யது.
மிக நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து எதிர்­வரும் 14 ஆம் திக­திக்குள் அறி­விக்­க­வுள்­ள­தாக கட்சியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார். மேலும், தமக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு நாட்டின் தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அழைப்பு விடுத்­தி­ருந்தார். அத்­துடன் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்­தியும் எமது கட்­சியின் ஆத­ரவை கோரி­யுள்­ளது.

இத­னி­டையே, அ.இ.ம.கா. 10 அம்ச நிபந்­த­னையின் அடிப்­ப­டை­யிலும் எழுத்­து­மூ­ல­மான உறு­திப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக முன்­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தேசிய காங்­கிரஸ்
அதா­வுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கி­ர­ஸா­னது ஏற்­க­னவே ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தனது ஆத­ரவு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. கடந்த மாதம் காலியில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்­றின்­போது ஜனா­தி­ப­திக்கான ஆத­ரவை அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி
நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்­கி­டை­யே­யான கூட்­ட­மொன்று நேற்று இரவு இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது, ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சமூக நீதிக்­கட்சி
ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியின் கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளி­யே­றிய சமூக நீதிக்­கட்­சி­யா­னது இன்னும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான தீர்மானத்தை வெளி­யி­ட­வில்லை.
எனினும், நாளை மறு­தினம் கிண்­ணி­யாவில் இடம்­பெ­ற­வி­ருக்கும் அக்­கட்­சியின் விஷேட மாநாட்­டை­ய­டுத்து தீர்மானம் எட்டப்படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஆளும்­த­ரப்பு முஸ்லிம் எம்.பி.க்கள்
வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கடந்த வாரம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து 92 மொட்டு உறுப்­பி­னர்கள் பங்­கு­பற்­றிய கூட்­டத்­திலும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அத்­துடன், ஆளும் தரப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் ஆகி­யோரும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வுக்கு வழங்­கி­யுள்­ளனர்.

மேலும், ராஜ­பக்ச குடும்­பத்­தா­ருடன் நெருக்­க­மான உறவை பேணி­வரும் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பழீலும் சில தினங்களுக்கு முன்னர் பேரு­வ­ளையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது தனது ஆத­ரவை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

எதிர்­க்கட்சி
ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மகரூப் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்தி பிரச்­சார பணி­க­ளையும் மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அத்­துடன், சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் இணைந்து பய­ணிக்க வேண்டும் என வலி­யு­றுத்தி வந்­தனர். எனினும், தற்­போது சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பிர­சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஐக்கி மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.பௌஸி இன்னும் தனது நிலைப்பாட்டை வெளியிடாதுள்ளார்.

அத்துடன், ஐ.ம.ச. ஊடாக அ.இ.ம.கா. சார்பில் அநுராதபுரத்திலிருந்து தெரிவான இஷாக் ரஹ்மான் ஏற்கனவே ரணிலுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி
இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் பரந்துபட்ட கூட்டணி ஒப்பந்தம் கைச்சாதிடும் நிகழ்வு இன்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்ணி உள்ளிட்ட முஸ்லிம் தரப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொட்டு வேட்பாளர் அறிவிப்பு
நீண்ட இழுபறியின் பின்னர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச பெயர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.