சுனாமி எச்­ச­ரிக்கை மையங்­களை மேம்­ப­டுத்த இந்­தோ­னே­ஷியா நட­வ­டிக்கை

0 653

இந்­தோ­னே­சிய கடற்­ப­கு­தியில் ஏற்­க­னவே செயற்­பாட்டில் உள்ள மற்றும் புதிய சுனாமி எச்­ச­ரிக்கை அமைப்­பு­களை நவீன மயப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை ஏற்­பட்ட பாரிய சுனாமி கார­ண­மாக மீண்டும் பல உயிர்­களை காவு கொடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை இந்­தோ­னே­சி­யா­வுக்கு ஏற்­பட்­டது.

இந்­த­முறை அனர்த்தம் ஏற்­படும் வரை எந்­த­வித முன்­னெச்­ச­ரிக்­கை­களும் விடுக்­கப்­ப­ட­வில்லை. 20 மீற்றர் உய­ர­மான அலைகள் தோன்­றி­யமை குறித்து யாருக்கும் எந்­த­வித சமிக்­ஞை­களும் கிடைக்­க­வில்லை. இதன்­படி, மேற்கு ஜாவாவின் பென்டென் நக­ரப்­ப­கு­தியே முதலில் பாதிப்­புக்­குள்­ளா­னது.

இதற்கு அனக் கிரிகட்டுஉ எரி­மலை வெடித்­த­மையே பிர­தான கார­ண­மாக இருந்­தது. வழ­மை­யாக பூமிக்கு அடி­யி­லான நிலத்­தட்­டுக்கள் மோது­வதால் சுனாமி ஏற்­படும் போது அதற்­கான முன்­னெச்­ச­ரிக்­கைகள் சுனாமி கண்­கா­ணிப்பு மையங்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

எனினும், சுமார் 100 ஆண்­டு­க­ளுக்கு பின்னர் அனாக் எரி­மலை குழம்­பு­களை வெளியிட ஆரம்­பித்­ததால் அதன் பாதிப்பு குறித்து யாரும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

குறிப்­பாக எரி­மலை வெடிப்­புகள் பொது­வான நிகழ்­வு­க­ளாக இருப்­பதால், சமீ­பத்­திய வெடிப்­புகள் அவர்­களை சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாக்­க­வில்லை.

இறு­தி­யாக அனாக் எரி­மலை கடந்த 1883 ஆம் ஆண்டு அதா­வது 135 ஆண்­டு­க­ளுக்கு பின்­னரே பாரி­ய­ளவு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.