குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

0 299

றிப்தி அலி

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் அனுப்­பப்­பட்ட புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் சிங்­கள, தமிழ் மொழி­பெயர்ப்பு, இஸ்­லா­மிய நூல்கள் விடு­விக்­கப்­ப­டமால் சுங்கத் திணைக்­க­ளத்தில் கடந்த சில மாதங்­க­ளாக தேங்கிக் கிடக்­கின்ற விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

சாதீக் ஹாஜி­யா­ரினால் இலங்­கைக்கு அனுப்­பப்­பட்ட கொள்­க­ல­னி­லுள்ள புனித அல்­குர்ஆன் மொழி­பெயர்ப்பு மற்றும் இஸ்­லா­மிய நூல்­களை விடு­விப்­ப­தற்கு திணைக்­க­ளத்தின் கீழுள்ள புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு­வினால் இன்று வரை அனு­மதி வழங்­கப்­ப­டா­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஈஸ்டர் தற்­கொலைத் தாக்­கு­த­லினை அடுத்து பாது­காப்பு அமைச்­சினால் அனு­ம­திக்­கப்­பட்ட புனித அல்-­குர்ஆன் மற்றும் இஸ்­லா­மிய நூல்கள் மாத்­தி­ரமே சுங்கத் திணைக்­க­ளத்­தினால் நாட்­டுக்குள் விடு­விக்­கப்படுகின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலையில், பேரு­வ­ளையில் இயங்­கி­வரும் நப­விய்யா இஸ்­லா­மிய இளைஞர் அமைப்­புக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கட்­டா­ரி­லி­ருந்து அனுப்­பப்­பட்ட புத்­தங்­களை சுங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்க முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்ட போதும் அப்­புத்­த­கங்­களில் நான்கு புத்­த­கங்கள் சமய நல்­லி­ணக்­கத்­திற்கு சவால்­களை ஏற்­ப­டுத்தும் கொள்­கை­களை உள்­ள­டக்கி இருந்­தாக பாது­காப்பு அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது.

Shipment-Details

இத­னை­ய­டுத்து, வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து இஸ்­லா­மிய சமய புத்­த­கங்­களும் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு அனு­மதி வழங்­கினால் மாத்­தி­ரமே இலங்கை சுங்க திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும் என்ற இறுக்­க­மான அறி­வித்தல் 2021.03.05ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து பெருந்­தொ­கை­யான புனித அல்­குர்­ஆன்­களும் இஸ்­லா­மிய நூல்­களும் கொழும்பு துறை­மு­கத்தில் தேங்­கிக்­கி­டந்­த­துடன், இறக்குமதியாளர்கள் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்கு பாரிய சவால்களுக்கு முகங்­கொ­டுக்­க வேண்டி வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இஸ்­லா­மிய அறிஞர்கள் எட்டுப் பேரைக் கொண்ட புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு­வொன்­றினை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளம் 2021.04.19ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­டது.

அப்­போ­தைய பணிப்­பாளர் ஏ.பீ.எம். அஷ்­ர­பினால் நிய­மிக்­கப்­பட்ட இந்தக் குழு இன்று வரை தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றது. அஷ்ஷெய்க் கலா­நிதி ஏ.எம். அப்­வர்தீன், அஷ்ஷெய்க் கலா­நிதி அஸ்வர் அஹமத், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் ஸகி அஹமட், அஷ்ஷெய்க் முப்தி முஸ்­தபா ராசா ஸபர், அஷ்ஷெய்க் ஏ.எச். இஹ்­ஸா­னுத்தீன், அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஸில்மி மற்றும் அஷ்ஷெய்க் முர்ஸித் முழப்பர் ஆகி­யோரே இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளாவார்.

இஸ்­லா­மிய சமய புத்­த­கங்கள் மற்றும் புனித அல்­குர்ஆன் ஆகி­ய­வற்­றினை நாட்­டுக்குள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு எட்டு அம்­சங்­களைக் கொண்ட வழி­காட்­டி­யொன்றும் இக்­கு­ழு­வினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு, பாது­காப்பு அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட பின்­னரே இந்த வழி­காட்டி தயா­ரிக்­கப்­பட்­ட­தாக திணைக்­களம் முன்னர் தெரி­வித்­தி­ரிந்­தது.

இஸ்­லா­மிய புத்­த­கங்கள் இறக்­கு­மதி செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் இந்த குழுவின் சிபா­ரிசு புத்­த­சா­சன, மத விவ­கார மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் ஊடாக பாது­காப்பு அமைச்­சிற்கு அனுப்­பி­வைக்­கப்­படும். பின்னர், பாது­காப்பு அமைச்சின் ஊடாக சுங்கத் திணைக்­க­ளத்­திற்கு நாட்­டுக்குள் விடு­விப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­படும்.

இந்த அறி­ஞர்கள் குழு­வினால் இறக்­கு­ம­திக்கு சிபா­ரிசு செய்­யப்­பட்ட எந்­த­வொரு நூல்­களும் அர­சாங்­கத்­தினால் தடை விதிக்­கப்­ப­ட­வில்லை என திணைக்­களம் முன்னர் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் தமிழ், சிங்­கள மொழி­பெயர்ப்புக்­களை இறக்­கு­மதி செய்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழுவின் கூட்­ட­மொன்­றினை கடந்த மார்ச் 26ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இதன்­போது திணைக்­க­ளத்தின் அப்­போ­தைய பணிப்­பா­ள­ரான பைசல் ஆப்­தீனின் பெயரில் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்ள புனித அல்­குர்ஆன், அதன் தமிழ் மற்றும் சிங்­கள மொழி­பெயர்ப்பு, தமிழ் மற்றும் சிங்­கள மொழி­க­ளி­லுள்ள இரண்டு இஸ்­லா­மிய நூல்கள் ஆகி­யன சமர்ப்பிக்­கப்­பட்­டுள்­ளன.
இதனை மீளாய்வு செய்த புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு, அரபு மொழி­யி­லுள்ள புனித அல்­குர்­ஆ­னினை மாத்­திரம் நாட்­டுக்குள் அனு­ம­திப்­ப­தற்கு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி இடம்­பெற்ற கூட்­டத்தில் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

எனினும், புனித அல்­குர்­ஆனின் சிங்­கள மற்றும் தமிழ் மொழி­பெயர்ப்பு, இஸ்­லா­மிய நூல்­களை விடு­விப்­ப­தற்கு அனு­மதி புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு­வினால் வழங்­கப்­ப­ட­வில்லை.

இக்­கு­ழு­வினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள வழி­காட்­டியின் சில சரத்­துக்­க­ளுக்கு குறித்த புனித அல்­குர்ஆன் மொழி­பெயர்ப்பும், இஸ்­லா­மிய நூல்­களும் உடன்­படாமையே இதற்­கான கார­ண­மாகும் என குறித்த கூட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இக்­கூட்ட அறிக்­கையில் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழுவின் நான்கு உறுப்­பி­னர்கள், திணைக்­க­ளத்தின் இரண்டு உதவிப் பணிப்­பா­ளர்கள் மற்றும் திணைக்­க­ளத்தின் மூன்று உத்­தி­யோ­கத்தர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலையில், மக்­கா­வி­லுள்ள ஸாதிக் ஹாஜி­யா­ரினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசாலின் பெய­ருக்கு 40 அடி நீள­மான ஒரு கொள்­கலன் கடந்த மே 16ஆம் திகதி ஜித்தா துறை­மு­கத்­தி­லி­ருந்து X-–PRESS SALWEEN எனும் கப்­பலில் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இதில் சுமார் 20 ஆயிரம் குர்ஆன் பிர­தி­களும் சுமார் 15 ஆயிரம் குர்ஆன் மொழி­பெயர்ப்பு பிர­தி­களும், இஸ்­லா­மிய நூல்­களும் காணப்­ப­டு­வ­தாக ஸாதிக் ஹாஜியார் தெரி­வித்­துள்ளார்.

எனினும், குறித்த கொள்­க­ல­னி­லுள்ள புனித அல்­குர்ஆன் மொழி­பெயர்ப்பும், இஸ்­லா­மிய நூல்­க­ளையும் விடுப்­ப­தற்­கான அனு­மதி புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு­வினால் வழங்­கப்­ப­டா­மை­யினால் குறித்த கொள்­கலன் துறை­மு­கத்தில் சில மாதங்­க­ளாக தேங்கிக் கிடக்­கின்­றது.

இதே­வேளை, சாதீக் ஹாஜியார் நாட்டு வந்து, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா உட்­பட இந்த விட­யத்­துடன் தொடர்புடைய பல்­வேறு தரப்­பினை சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்­புக்கள் எதுவும் அவ­ருக்கு வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் பல குரல் பதி­வு­களை வட்ஸ்­அபில் அவர் பதி­விட்­டுள்­ளதை எம்மால் கேட்க முடிந்­தது. இதன்­போது அவர் குறிப்­பி­டு­கையில்,
“இறை­வனின் உத­வி­யினால் கடந்த நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் ஒரு கொள்­கலன் புனித அல்­குர்­ஆன்­களை இலங்­கைக்கு அனுப்­பினேன். புத்­த­சா­சன அமைச்சர், ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்­சி­யூலர் ஜெனரல் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஆகி­யோரின் உத்­தி­யோ­க­பூர்­வ­ அனு­ம­தி­யினை பெற்றே இக்­குர்­ஆன்­களை அனுப்­பினேன்.
எனினும், இந்த குர்­ஆன்­க­ளுக்கு பிழை­யான முத்­திரை குத்­தப்­பட்டு நாட்­டுக்குள் அனு­ம­திப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­டாமல் உள்­ளது. இதனை விடு­விக்க முடியும் என்ற பின்னர் தான் பள்­ளி­வா­சல்கள் மற்றும் அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காகவே இதனை அனுப்­பி­வைத்தேன்.

இதே குர்­ஆனிற்குத் தான் கடந்த 40 வரு­டங்­க­ளாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இன்று ஏன் தடை விதிக்­கின்­றனர் என்­பது தான் தெரி­யாமல் உள்­ளது. இக்­கொள்­க­ல­னி­னுள்ள அல்­குர்­ஆன்­களை தீ வைப்­ப­தற்கு ஜம்­இய்­யத்துல் உலமா துணை போகின்­றது. இதற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ளரும் ஜம்­இய்­யத்துல் உல­மாவும் தான் பொறுப்­புக்­கூற வேண்டும்” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூரா­மி­த் புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­விற்கு கடி­த­மொன்­றினை எழு­தி­யுள்ளார்.

“இலங்­கைக்கு அனுப்­பப்­பட்ட அல்-­குர்ஆன் அரபுப் பிர­திகள் மற்றும் மொழி­பெ­யர்ப்புப் பிர­திகள் சம்­பந்­த­மாக” எனும் தலைப்பில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி அனுப்­பப்­பட்ட குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
“மேற்­படி அல்-­குர்ஆன் பிர­திகள் ஸாதிக் ஹாஜி­யா­ரினால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளரின் பெயரில் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

ஆனால் அப்­பி­ர­திகள், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் அனு­மதி கிடைக்கப் பெறா­ததன் கார­ண­மாக இன்னும் விடு­விக்­கப்­ப­டாத நிலையில் காணப்­ப­டு­கின்­றன.

இப்­பி­ர­திகள் அனுப்­பப்­ப­டமுன் புத்­த­சா­சன, சமய விவ­கார அமைச்சர் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஆகி­யோ­ரிடம் சம்­மதம் மற்றும் முறை­யான அனு­மதி பெறப்­பட்டே அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக ஸாதிக் ஹாஜியார் கூறி­யுள்ளார்.

இவ்­வி­வ­கா­ரத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­விற்கு எந்த அதி­கா­ரமும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­றாலும், இந்த அல்-­குர்ஆன் தொகை­களை விடு­விக்க அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தான் ஒப்­புதல் அளிக்­க­வில்லை என்று சமூக ஊட­கங்­களில் போலி­யான செய்­திகள் பரப்­பப்­ப­டு­வதை காணமுடிகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமிய மத நூல்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாட கடந்த மே 20ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தது என்பதை தயவுசெய்து நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆனால் திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் காரணமாக உங்களால் கலந்துகொள்ள முடியாது என்று உங்கள் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. இந்த விடயத்தை உடனடியாக கவனிக்குமாறு உங்கள் தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயத்திற்கு தீர்வுபெற்றுத் தருவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் எம்.எம்.சுஹைர் போன்றோர் உறுதியளித்துள்ளதாக ஸாதிக் ஹாஜியார் கடந்த ஜூலை 28ஆம் திகதி வட்ஸ்அப் மூலம் வெளியிட்ட குரல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் உலமா சபை ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் அல்-ஹாஜ் ஸாதிக் ஆகியோரிடையே, அவரினால் நாட்டிற்கு அனுப்பப்பட்டு இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட சந்திப்பொன்று முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் துறைமுகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பதற்கு ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் அல்-ஹாஜ் ஸாதிக் அவர்களுக்கு தெளிவுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் புத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடுமாறு ஆலோசனை வழங்கியதோடு அவற்றிற்கான அடிக்குறிப்புக்களை இணைத்து விநியோகிப்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஜம்இய்யா வழங்கும் என்றும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு அதில் அல்-குர்ஆன் முஸ்ஹப் விடயத்தில் எவ்வித தடைகளும் விதிக்கப்படாமையினால் அவற்றையும் விரைவில் விடுவிக்குமாறு புத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றிடம் ஜம்இய்யா வேண்டிக்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.