அரசியல் களம்

0 196

எஸ்.என்.எம்.சுஹைல்

2024 ஆம் வருடம் தேர்தல் ஆண்­டாக இருக்கும் என்ற கருத்து கடந்த ஆண்­டி­லி­ருந்தே கூறப்­பட்டு வந்­தது. இது இலங்­கையில் மட்­டு­மல்ல சர்­வ­தேச ரீதியில் பல நாடு­க­ளிலும் தேர்தல் ஆண்­டாக இருந்­துள்­ளது. அண்டை நாடான இந்­தியா, பிரித்­தா­னியா, பிரான்ஸ், வெனி­சுலா உள்­ளிட்ட நாடு­களில் தேர்­தல்கள் இடம்­பெற்று முடிந்­தி­ருக்­கின்­றன. அமெ­ரிக்­கா­விலும் தேர்தல் பிர­சா­ரங்கள் சூடு­பி­டித்­தி­ருக்­கின்­றன.

ஆனாலும், இலங்­கையில் தேர்­த­லொன்று நடை­பெ­றுமா இல்­லையா என்ற கேள்­விகள் தொடர்ந்து நீடித்­துக்­கொண்டே இருக்­கின்­றது. குறிப்­பாக, தற்­போ­தைய ஜனா­தி­பதி எப்­ப­டி­யா­வது தேர்­தலை நிறுத்­தி­வி­டுவார் என்று அவர் மீதான அவ நம்­பிக்­கைக்கு ஏற்­றாற்­போல அவ்­வப்­போது சர்ச்­சைகள் கிளம்­பிக்­கொண்டே இருக்­கின்­றது.

எது எவ்­வா­றி­ருப்­பினும், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை கடந்த வாரம் தேர்­தல்கள் ஆணைக்­குழு வெளி­யிட்­டி­ருந்­தது. எதிர்­வரும் செப்­டெம்பர் 21 ஆம் திக­தியை தேர்தல் தின­மாக குறிப்­பிட்­டி­ருந்­தது ஆணைக்­குழு. இதன்­படி, தேர்­தலை நடத்­த­மாட்டார் என்று கூறப்­பட்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் தரப்­பி­லி­ருந்தே முண்­டி­ய­டித்­துக்­கொண்டு முத­லா­வதாக கட்­டுப்­பணம் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் செலுத்­தப்­பட்­டது. அவர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள் இருவர் சுயா­தீன வேட்­பா­ள­ராக கட்­டுப்­பணம் செலுத்­தினர்.

ஜனா­தி­பதி தேர்தல் களத்தில்
குதிக்கும் வேட்­பா­ளர்கள்
ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தாக காலியில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த சனி­யன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தார். அத்­துடன், சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக விஜ­ய­தாஸ ராஜ­பக்ச கடந்த வியா­ழன்று தன்னை பிர­க­டனப்­ப­டுத்­திக்­கொண்டு வெள்­ளி­யன்று தனது அமைச்சுப் பத­வி­யையும் இரா­ஜி­னாமா செய்­து­கொண்டார். அத்­துடன், தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ ஆகியேர் தாம் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் என கூறி­வந்­தாலும் இது­வ­ரை­யிலும் அவர்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பை வெளி­யி­ட­வில்லை. எனினும் நேற்றையதினம் சஜித் சார்பில் கட்­டுப்­பணம் செலுத்­தப்­பட்­டது.

மேலும், பீல்­மாஷல் சரத்­பொன்சேகா, சம்­பிக்க ரண­வக்க, திலித் ஜய­வீர, தம்­மிக பெரேரா போன்­றோரும் ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் குதிக்கப் போவ­தாக கூறி­வ­ரு­கின்­றனர். தமிழ் பொது­வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­கு­வதில் வடக்கு அர­சியல் களம் பிசி­யாக இருக்­கி­றது. எனினும், இதற்கு இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி சிவப்புக் கொடி காட்­டி­யுள்­ளது. அத்­துடன், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்யாஸ் ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்க தயா­ராகி வரு­வ­தாக புத்­தளம் செய்­திகள் கூறு­கின்­றன.

சூடு­பிடிக்கத் துவங்கும்
தேர்தல் பிர­சா­ரங்கள்
ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்கள் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளன. காலியில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கூட்­டமும், இரத்­தி­ன­பு­ரியில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவின் கூட்­டமும் காலி, மஹ­ர­கம, சிலாபம் என்று பல இடங்­களில் தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் கூட்­டங்­களும் இடம்­பெற்­றன. இது­போக, சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் அறி­விக்­கப்­பட்ட விஜ­ய­தாஸ ராஜ­பக்­சவும் கொழும்பில் பிர­சார கூட்­டத்தை நடத்­தி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி ரணிலின் பஸ்ஸில்
முதல் ஆளாக அதா­வுல்லாஹ்
எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவு நிலைப்­பாட்டை கடந்த 2 வரு­டங்­க­ளாக வெளிப்­ப­டுத்தி வந்த திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ஏ.எல்.எம். அதா­வுல்லாஹ் ஜனா­திபதி ரணி­ல் விக்­ர­ம­சிங்­கவின் பஸ்ஸில் முதல் ஆளாக ஏறிக்­கொண்­டுள்ளார்.

இஷாக் எம்.பி.யும்
ரணில் மேடையில்
அனு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து முத­லா­வது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் ஐ.தே.க.வின் யானை சின்­னத்தின் ஊடாக கடந்த 2015 இல் தெரி­வான ஏ.ஆர்.இஷாக் கடந்த 2020 ஆம் ஆண்டு அ.இ.ம.கா. சார்பில் ஐக்­கிய மக்கள் சக்தி ஊடாக மீண்டும் பாரா­ளு­மன்றம் நுழைந்தார். இந்­நி­லையில், ஜனா­தி­பதி கோட்­ட­பாய கொண்­டு­வந்த 20 ஆவது திருத்­த­த்திற்கு ஆத­ர­வ­ளித்து முஸ்­லிம்­களின் எதிர்ப்பை சம்­பா­தித்­துக்­கொண்ட அவர், பின்னர் மீண்டும் எதிர்க்­கட்சி பக்கம் சென்றார். இந்­நி­லையில் மீண்டும் மீண்டும் மாறு­பட்ட நிலைப்­பாட்டை எடுக்கும் இவர் தற்­போது ரணி­லுக்கு ஆத­ரவு தெரி­வித்து காலியில் இடம்­பெற்ற மேடையில் ஏறி உரை­யாற்­றினார்.

லான்சா குழுவில் முஸர்ரப்
முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் நிமல் லான்­சாவின் தலை­மையில் பொது­ஜன பெர­மு­ன­வி­லி­ருந்து வெளி­யே­றிய குழு­வொன்று செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த குழு­வா­னது கடந்த சில மாதங்­க­ளாக நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கூட்­டங்­களை நடத்­தி­வரும் நிலையில் பது­ளையில் இடம்­பெற்ற கூட்­டத்­தின்­போது திகா­ம­டுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் மேடை ஏறி­யி­ருந்தார்.

ரணி­லுக்கு ஆத­ர­வாக
மு.கா. எம்.பி.க்கள்
முஸ்லிம் காங்­கிரஸ் பிரதித் தலை­வர்­களில் ஒரு­வரும் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்ந்து ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வா­கவே கருத்­து­ரைத்து வரு­கின்­றார்.
மு.கா. உறுப்­பி­னர்­க­ளான ஹரீஸ், பைஸல் காஷிம் மற்றும் செய்யத் அலி­சாஹிர் மௌலானா ஆகி­யோ­ருக்கு ஜனா­தி­பதி ஊடாக மாவட்ட அபி­வி­ருத்­திக்­காக ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­மாக தலா 100 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இவர்கள் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக இருப்­ப­தாக சமூ­க­மட்­டத்தில் கருத்­துகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இம்­ரா­னுக்கும் நிதி ஒதுக்­கீடு
இத­னி­டையே, திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மக­ரூ­புக்கும் ஜனா­தி­பதி ஊடாக மாவட்ட அபி­வி­ருத்­திக்­காக 2.3 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மாவட்ட அர­சாங்க அதிபர் காரி­யா­ல­யத்தின் ஊடாக அவர் இதற்­கான வேலைத் திட்­டங்­களை சமர்ப்­பித்­தி­ருக்­கிறார்.

சஜித்­தையே மு.கா. ஆத­ரிக்கும் – தௌபீக்
திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் கிண்­ணி­யாவில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது மு.கா. ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் என குறிப்­பிட்­டுள்ளார். எனினும் கட்­சியின் இறுதித் தீர்­மா­னத்தை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் விரைவில் அறி­விப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஹிஸ்­புல்­லாஹ்வின்
நிலைப்­பாடு என்ன?
முஸ்லிம் காங்­கி­ர­சுடன் இணைந்து தற்­போது அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வின் அர­சியல் நிலைப்­பாட்டை புரிந்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கி­றது. குறிப்­பாக அவர் கடந்த இரு­ வா­ரங்­க­ளுக்கு முன்னர் புணானை­யி­லுள்ள அவ­ரது பல்­க­லைக்­க­ழ­கத்தை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவை அழைத்­து­வந்து திறந்து வைத்தார். இது­போக, எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வினால் கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் வாழைச்­சேனை, ஏறாவூர் மற்றும் காத்­தான்­குடி பகு­தி­களில் இடம்­பெற்ற பாட­சா­லை­க­ளுக்கு ஸ்மார்ட் வகுப்­ப­றைகள் வழங்கும் நிகழ்­விலும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

அப்துர் ரஹ்மான்
கடந்த பொதுத் தேர்­த­லின்­போது ஐக்­கிய மக்கள் சக்­தியின் மட்­டக்­க­ளப்பு வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் தற்­போது சஜித் மீது அதிருப்தியில் இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. குறிப்­பாக காத்­தான்­கு­டியில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வினால் முன்­னெ­டுக்­கப்­படும் சக்­வல திட்­டத்­திற்கு அப்துர் ரஹ்மான் பாட­சா­லை ஒன்றை தெரிவு செய்­தி­ருந்த­தா­கவும் எனினும் அந்நிகழ்விற்கு ஹிஸ்­புல்­லாஹ்­வையும் சஜித் அழைத்தமையால் அவர் அந்நிகழ்வைப் புறக்கணித்ததாகவும்­ தெரிய வருகிறது. இது தொடர்பில் அவர் காட்டமான செய்தி ஒன்றையும் சஜித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புத்­த­ளத்தில் ரிஷாட் கூட்டம்
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் புத்­தளம் மாவட்ட எழுச்சி மாநாடு கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். எச். எம். நவவி தலை­மையில் இடம்­பெற்ற மாநாட்டில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கலந்­து­கொண்­டனர். இந்த மாநாட்டில் அ.இ.ம.கா.வின் நிலைப்­பாடு வெளிப்­ப­டலாம் என கூறப்­பட்­டாலும் அலி­சப்ரி ரஹீமை திட்டித் தீர்ப்­பதிலேயே கட்சித் தலை­மையின் பேச்சு நீண்டு சென்­றது.

அநு­ர­வு­ட­னான உறவை
முறித்­தது சமூக நீதி கட்சி
ஜனா­தி­பதி வேட்­பாளர் அநுர குமார திசா­நா­யக்கவின் தேசிய மக்கள் சக்­தி­யு­ட­னான உறவை முறித்துக் கொண்­டது நஜா முஹம்மத் தலை­மை­யி­லான சமூக நீதிக் கட்சி. ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான தினம் கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கடந்த வியா­ழ­னன்று கொழும்பில் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றை நடத்­திய நஜா முஹம்மத் தலை­மை­யி­லான குழு, தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளி­யே­று­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

குறிப்­பாக அந்த கூட்­ட­ணியில் தமக்கு உரிய அந்­தஸ்த்து வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள சமூக நீதிக் கட்சி, சிறு­பான்­மை­யினர் விட­யத்தில் அவர்கள் தெளி­வான நிலைப்­பாட்டை கொண்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை எனவும் கூறி­யி­ருக்­கின்­றனர்.

பொது­ஜன பெர­முன தனித்து கள­மி­றங்கும்
ஜனா­தி­பதி ரணி­லுக்கு ஆத­ரவு தெரி­வித்து வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி தேர்­தலில் தமது கட்சி சார்பில் ஒரு வேட்­பா­ளரை கள­மி­றக்­க­வுள்­ள­தாக கடந்த திங்­க­ளன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.
இந்த அறி­விப்பை கட்­சியின் செய­லாளர் சாகர காரி­ய­வசம் அறி­வித்தார். அக்­கட்­சியின் தவி­சாளர் நாமல் ராஜ­பக்­ஷவே தமது கட்சி சார்பில் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று விடா­ப்பி­டி­யாக இருந்­து­வந்தார். இந்­நி­லையில், அக்­கட்­சியின் வேட்­பா­ள­ராக தொழி­ல­திபர் தம்­மிக பெரேரா கள­மி­றங்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

92 எம்.பி.க்களின் ஆத­ரவு ரணி­லுக்கு
எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் 92 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்த அர்­ப்ப­ணிப்­ப­தாக நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் இதில் அடங்­குவர். குறிப்­பக பொது­ஜன பெர­முன, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சி, இலங்­கை ­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் உள்­ளிட்ட கட்சி உறுப்­பி­னர்கள் இதில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகி­யோரும் கலந்­து­கொண்டு ஜனா­தி­பதி ரணி­லுக்கு ஆத­ரவை தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும் ராஜ­பக்ச ஆத­ரவு நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மர்ஜான் பழீல் இந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்­தாக தெரி­ய­வில்லை.

முஸ்லிம் கட்­சிகள் ரணி­லுடன் பேச்சு
ரணிலை முஸ்லிம் கட்­சிகள் ஆத­ரிப்­ப­தற்கு பொது­ஜன பெர­மு­னவே தடை­யாக இருந்த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் பொது­ஜ­ன­பெ­ர­முன தனி­வழி பய­ணத்தை ஆரம்­பித்­த­தை­ய­டுத்து முஸ்லிம் கட்­சி­களும் தமிழ் கட்­சிகள் பலவும் ஜனா­தி­பதி ரணில் தரப்­போடு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

மூன்­றாக உடையும் சுதந்­திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தற்­போது மூன்­றாக பிள­வு­பட்­டுள்­ளது. அதன் பிர­தி­நி­திகள் மூன்று குழுக்­க­ளாகப் பிரிந்து மூன்று ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளை ஆதரிப்பதாக அறி­வித்­த­த­னை­ய­டுத்தே இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.
அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்­க்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­து­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் அவ­ரது குழு­வினர் ஏற்­க­னவே தீர்­மா­னித்­துள்­ளனர்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு உத­வு­வ­தாக அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவும் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உள்ளிட்ட குழுவினரும் அறிவித்துள்ளனர்.

தயாசிறி ஜயசேகர தலைமையிலான இன்னொரு குழுவும் இயங்குகிறது. இவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கக் கூடும் என கூறப்பட்டாலும் வேறு முடிவுகளையும் எடுக்கலாம் என தெரிகிறது.

ராஜபக்சாக்களுக்கு முரண் வலுக்கிறது
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமையினால் மொட்டு கட்சி பிளவை சந்தித்திருக்கிறது. குறிப்பாக ராஜபக்சாக்களின் பேச்சை அக்கட்சி உறுப்பினர்கள் செவிமடுக்க மறுத்துள்ளனர்.

பெரும்பாலானோர் ரணில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றமையால் ராஜபக்சாக்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தினமும் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் பேச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும், ராஜபக்சாக்களுக்கிடையே வெவ்வேறான கருத்துகள் நிலவுவதால் முரண்பாடுகள் வலுவடைகின்றன. எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது மகன் நாமலின் எதிர்கால அரசியல் குறித்தே அதிகம் கரிசனை செலுத்துவதாக தெரிகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.