கட்டாய தகனக்கொள்கை குறித்து விசாரிக்க ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்

மன்னிப்புக் கோரினால் போதாது என்கிறார் பைசர் முஸ்தபா

0 134

(நா.தனுஜா)

கொவிட் – 19 பெருந்­தொற்­றுப்­ப­ரவல் காலத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டா­யத்­த­கனக் கொள்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரிடம் அர­சாங்கம் மன்­னிப்­புக்­கோ­ரி­யி­ருப்­பினும், தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களைக் கட்­டா­யத்­த­கனம் செய்­த­மை­யினால் குடும்­பங்கள் முகங்­கொ­டுத்த உள­வியல் பாதிப்­பையும், துன்­பத்­தையும் சரி­செய்­வ­தற்கு இந்த மன்­னிப்பு போது­மா­னது அல்ல என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அது­மாத்­தி­ர­மன்றி கட்­டா­யத்­த­க­னக்­கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் முறை­யான விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­கு­மாறும், அத­னூ­டாக இக்­கொள்கை அமு­லாக்­கத்­துக்குக் அரச, தனி­யார்­துறை சார்ந்த நபர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் உள்­ளிட்­டோரை அடை­யா­ளங்­கா­ணு­மாறும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வி­டயம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்குக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­தி­ருக்கும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா, அதில் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது:

கொவிட் – 19 பெருந்­தொற்­றுப்­ப­ரவல் காலப்­ப­கு­தியில் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்கும், இஸ்­லா­மி­யர்­களின் மத நம்­பிக்­கைக்கு அமை­வாக சட­லங்­களை அடக்கம் செய்­வதில் உல­க­ளா­விய ரீதியில் பின்­பற்­றப்­பட்ட நடை­மு­றை­க­ளுக்கும் முற்­றிலும் எதி­ராக இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டா­யத்­த­கனக் கொள்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட சகல தரப்­பி­ன­ரி­டமும் அர­சாங்கம் அண்­மையில் மன்­னிப்­புக்­கோ­ரி­யி­ருக்­கின்­றது.

அவ்­வாறு மன்­னிப்­புக்­கோ­ரு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்­கை­யினைப் பாராட்டும் அதே­வேளை, தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களைக் கட்­டா­யத்­த­கனம் செய்­த­மை­யினால் குடும்­பங்கள் முகங்­கொ­டுத்த உள­வியல் பாதிப்­பையும், துன்­பத்­தையும் சரி­செய்­வ­தற்கு இந்த மன்­னிப்பு போது­மா­னது அல்ல என்­பதை உங்­க­ளது கவ­னத்­துக்­குக்­கொண்­டு­வர விரும்­பு­கின்றேன்.

மாறாக கட்­டா­யத்­த­க­னக்­கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் முறை­யான விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­கு­மாறு உங்­க­ளிடம் வலி­யு­றுத்­து­கின்றேன். அந்த ஆணைக்­கு­ழு­வா­னது மேற்­கு­றிப்­பிட்ட கொள்கை அமு­லாக்­கத்­துக்குக் கார­ண­மான அரச, தனி­யார்­துறை சார்ந்த நபர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் உள்­ளிட்­டோரை அடை­யா­ளங்­கா­ண­வேண்டும்.

அதே­போன்று இவ்­வி­வ­கா­ரத்தைப் பொறுத்­த­மட்டில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் உளவியல் ரீதியில் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துவரும் நிலையில், அவர்களுக்கு முறையான இழப்பீட்டையும், ஏனைய நிவாரணங்களையும் வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றேன்.
அத்தகைய நடவடிக்கைகள் நல்லிணக்கத்துக்கும், சமூகங்களுக்கு இடையி
லான ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.