ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டாம்

உலமா சபை ஜனாதிபதிக்கு கடிதம்

0 151

ஓரினச்சேர்க்கையாளர்கள் எனப்படும் ஒரு சிறிய கூட்டத்தின் கோரிக்கையை சட்டமாக்குவது எமது எதிர்கால சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலாசார சீர்கேடுகளை எதிர்­நோக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­து­விடும் எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, நமது நாட்டின் கலா­சா­ரத்­திற்கு முற்­றிலும் மாற்­ற­மான சட்­டங்­களை இயக்­கு­வதை வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித், பதில் தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் ஆகியோர் ஒப்­ப­மிட்டு ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

LG­B­TQ+ என்­பது ஒரு பாலீர்ப்புப் பெண் அல்­லது ஒரு பாலீர்ப்பு ஆண் அல்­லது இரு பாலீர்ப்­பாளர் மற்றும் பாலின மாற்றம் செய்யும் சமூ­கத்தை ஒருங்கே குறிக்கப் பயன்­படும் சொற்­றொடர் ஆகும்.

இறைவன் முதன் முதலில் ஆதம் அலை­ஹிஸ்­ஸலாம் என்ற ஆணைப் படைத்து அவர்­க­ளுக்கு மனை­வி­யாக வ்வா அலைஸ்­ஸலாம் என்ற பெண்­ணையும் படைத்து, அவர்­க­ளி­ரு­வ­ரி­லி­ருந்து ஆண்­க­ளையும் பெண்­க­ளையும் இவ்­வு­லகில் பரவச் செய்­துள்ளான்.

மனித இனம் தொடங்­கிய காலத்தில் இருந்து ஆணாக பிறந்­தவர் ஆணா­கவே வாழ்ந்து மர­ணிப்­பதும் பெண்­ணாகப் பிறந்­தவள் பெண்­ணா­கவே வாழ்ந்து மர­ணிப்­பதும் நடை­மு­றை­யா­கவும் மனித இயல்­புக்கு ஏது­வா­ன­தா­கவும் இருந்து வரு­கின்­றது.

அவ்­வாறே, அன்று தொடக்கம் இன்று வரை வர­லாறு நெடு­கிலும் திரு­மணம் எனும் நல்­லறம் மூல­மாக ஆணையும் பெண்­ணையும் இணைத்து அதன் மூலம் மனித சமு­தாயம் பல்கிப் பெரு­கு­வதே நடை­மு­றை­யாகும்.

ஓர் ஆண் தன்னைப் பெண்­ணா­கவும் ஒரு பெண் தன்னை ஆணா­கவும் மாற்­றிக்­கொள்­வதும் ஓர் ஆண் தனது பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்­து­கொள்ள தன்னைப் போன்ற ஓர் ஆணையும் ஒரு பெண் தனது பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள தன்னைப் போன்ற ஒரு பெண்­ணையும் தெரிவு செய்யும் ஓரி­னச்­சேர்க்கை அல்­லது தன்­பா­லின ஈர்ப்பு எனும் கலாச்­சா­ரமும் இயற்­கைக்கு மாற்­ற­மா­ன­தாகும்.

சுதந்­திரம் என்ற பெயரில் ஆணும், ஆணும் பெண்ணும், பெண்ணும் இணையும் இவ்­வா­றான ஓரி­னச்­சேர்க்கைக் கலாச்­சா­ரத்தை இழி­செயல் என்று அனைத்து மதங்­களும் கலாச்­சா­ரங்­களும் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றன.
ஓர் ஆண் இன்­னொரு ஆணுடன் தனது பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்யும் மோச­மான கலாச்­சாரம் சுமார் 5000 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நபி லூத் அலை­ஹிஸ்­ஸலாம் அவர்­களின் சமூ­கத்தில் உரு­வெ­டுத்த பொழுது, அக்­குற்­றத்தைச் செய்­த­வர்கள், அதனை அங்­கீ­க­ரித்­த­வர்கள், அதன் போது மௌன­மாக இருந்­த­வர்கள் அனை­வரும் முற்­றாக அழிக்­கப்­பட்ட வர­லாறு அல்-­குர்­ஆனில் பல இடங்­களில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அல்-­குர்ஆன் அந்தச் செயலை உல­கத்தில் அதற்கு முன்னர் எவரும் செய்­யாத மானக்­கே­டான செயல் என்றும் அவ்­வாறு செய்­த­வர்கள் வரம்பு மீறிய மக்கள் என்றும் அல்­லாஹ்வால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இயற்கை முறையை மீறி­விட்­டார்கள் என்றும் இந்தச் செயலைச் செய்த கூட்­டத்­தினர் வாழ்ந்த ஊரை தலை­கீ­ழாகக் கவிழ்த்தி அவர்கள் மீது சுடப்­பட்ட செங்­கற்­களை மழையாய் பொழியச் செய்­த­தா­கவும் எச்­ச­ரிக்­கின்­றது.

மிரு­கங்கள், பற­வைகள் உட்­பட அனைத்து உயி­ரி­னங்­களும் அவற்றின் பாலூக்கத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்­வ­தற்கும் அவற்றின் இனப்­பெ­ருக்­கத்தை வளர்த்துக் கொள்­வ­தற்கும் ஒரு போதும் தன் பாலி­னத்தை தெரிவு செய்த வர­லாறே இல்லை.

அந்­த­வ­கையில், ஓரி­னச்­சேர்க்­கை­யா­ளர்கள் எனப்­படும் ஒரு சிறிய கூட்­டத்தின் கோரிக்­கையை ஏற்று இறை­வனால் அமைக்­கப்­பட்­டுள்ள இயல்­புக்கு புறம்­பா­கவும் உலக சமூ­கங்­களால் பர­வ­லாக ஏற்றுக் கொள்­ளப்­பட்ட மனித நடை­மு­றைக்கு மாற்­ற­மா­கவும் அக்­கோ­ரிக்­கையை சட்­ட­மாக்­கு­வது எமது எதிர்­கால சமூகம் பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலா­சார சீர்­கே­டு­களை எதிர்­நோக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­து­விடும்.

எனவே, நமது நாட்டின் கலாச்­சா­ரத்­திற்கு முற்­றிலும் மாற்­ற­மாக இப்­ப­டி­யான சட்­டங்­களை சட்­ட­மாக்­கு­வதை இஸ்­லா­மி­யர்­க­ளா­கிய நாம் வன்மையாக எதிர்ப்பதோடு இம்முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கௌரவ ஜனாதிபதி அவர்களையும் பாராளுமன்றத்தையும் கேட்டுக் கொள்வதோடு இப்படியான சமய, சமூக மற்றும் கலாச்சாரச் சீர்கேடுகளை உண்டாக்கக்கூடிய சட்டங்களை சட்டமாக்கும் விடயத்தில் ஒத்துழைக்க வேண்டாம் எனவும் பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.