துப்பாக்கிகள், வாளுடன் மௌலவி கைது பின்னணியை தேடி சி.ரி.ஐ.டி. விசாரணை

சகோதரனை கைது செய்வது தொடர்பிலும் அவதானம்

0 141

(எப்.அய்னா,எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாவ­லடி சந்­தியில் வைத்து ரீ 56 ரக துப்­பாக்­கிகள், தோட்­டாக்கள், மெகஸின் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளுடன் 43 வய­தான மெள­லவி ஒருவர் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்குக் கிடைத்த இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து அர­ல­கங்­வில பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை முகாம் அதி­கா­ரிகள் குழு நேற்று முன் தினம் (30ம் திகதி) இந்த கைது நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­தாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் சட்டப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குண­சே­கர விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார். இந் நிலையில் இந்த சம்­ப­வத்தின் பின்­னணி, நோக்கம் உள்­ளிட்­ட­வற்றை கண்­ட­றிய, சந்­தேக நபரை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு (சி.ரி.ஐ.டி.) பொறுப்­பேற்று விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டார்.

கைது செய்­யப்­பட்ட மெள­லவி வாழைச்சேனை பது­ரியா நகர் பகு­தியை சேர்ந்­தவர் எனவும் நாவ­ல­பிட்டி பகுதி மத்­ரஸா ஒன்றில் கற்று மெளல­வி­யா­னவர் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குண­சே­கர குறிப்­பிட்டார்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்­றுக்கு அமை­வாக பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் நாவ­லடி சந்­தியில் வைத்து மோட்டார் சைக்­கிளில் சென்­று­கொண்­டி­ருந்த மெள­ல­வியை கைது செய்­துள்­ளனர்.

இதன்­போது அவ­ரி­ட­மி­ருந்து ரீ 56 ரக துப்­பாக்கி ஒன்­றி­னையும் 29 தோட்­டாக்­க­ளையும் ஒரு மெக­சி­னையும் அதி­ரடிப் படை­யினர் கைப்­பற்­றினர்.

இத­னை­ய­டுத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணையின் போது, அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள மெள­ல­வியின் சகோ­த­ரரின் வீட்டில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மற்­றொரு ரீ 56 ரக துப்­பாக்கி, 30 தோட்­டாக்கள், மெகசின் மற்றும் வாள் ஆகி­ய­வற்றை கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து மெள­ல­வியின் வீட்­டுக்கு சென்ற அதி­ரடிப் படை­யினர் அங்­கி­ருந்து, துப்­பாக்­கி­களை மறைத்து வைக்க பயன்­ப­டுத்தும் இரு பிளாஸ்டிக் பைகள் மற்றும் தொலைக் காட்­டியை கைப்­பற்­றினர். இத­னை­விட துப்­பாக்­கி­களை கொண்டு செல்ல பயன்­ப­டுத்­தி­ய­தாக கூற­ப்படும் மோட்டார் சைக்கிள், மேலும் இரு வாகன இலக்­கத்­த­க­டுகள் இரண்­டையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மெளலவியின் சகோதரனை கைது செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.