ஹமாஸ் தலைவர் ஹனியா ஈரானில் வைத்து படுகொலை

0 146
  • உலக நாடுகள் கண்டனம்
  • மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

ஹமாஸ் அமைப்பின் அர­சியல் பிரிவின் தலைவர் இஸ்­மாயில் ஹனியா ஈரானில் நடந்த தாக்­குதல் ஒன்றில் கொல்­லப்­பட்­டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பும் ஈரா­னிய அரசும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஈரானின் புதிய அதி­பரின் பத­வி­யேற்பு விழாவில் பங்­கேற்ற பின்னர் இஸ்­மாயில் ஹனியா வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் புதன்­கி­ழமை அதி­காலை 2 மணி­ய­ளவில் குறித்த வீடு மீது இஸ்ரேல் நடத்­திய வான்­வழித் தாக்­கு­தலில் அவரும் அவ­ரது உத­வி­யா­ளரும் கொல்­லப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவர் தங்­கி­யி­ருந்த வீட்டின் மீது ராக்கெட் தாக்­கி­யதில் அவரும் அவ­ரது பாது­கா­வ­லரும் உயி­ரி­ழந்­த­தாக முதற்­கட்ட தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
கடந்த ஏப்ரல் 19 அன்று ஈரானில் அணு­சக்தி நிலை­யத்தை சுற்றி வான் பாது­காப்பை குறி­வைத்து இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தது. தற்­போதும் அதே முறையை பின்­பற்றி ஹனியா மீது தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

அந்த நட­வ­டிக்­கையில், இஸ்­ரே­லிய ஜெட் விமா­னங்கள் ஈரா­னிய வான்­வெ­ளிக்கு வெளியில் இருந்து ரொக்­கெட்­டு­களை வீசி­ய­தாக நம்­பப்­ப­டு­கி­றது. சவூதி அரே­பி­யாவின் அல் ஹதாத் செய்தி நிறு­வ­னமும் இதே­போன்ற தக­வலைத் தெரி­வித்­துள்­ளது.

தெஹ்­ரானில் இஸ்­மாயில் ஹனியா தங்­கி­யி­ருந்த இல்லம், வழி­காட்­டப்­பட்ட ஏவு­க­ணையால் (Guided Missile) தாக்­கப்­பட்­ட­தாக சில ஆதா­ரங்­களை மேற்கோள் காட்டி குறிப்­பிட்­டுள்­ளது.

உள்ளூர் நேரப்­படி அதி­காலை 2 மணி­ய­ளவில் இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஈரானின் அரசு ஊட­கமும் இதையே கூறி­யுள்­ளது.

62 வய­தான ஹனியா 1980களின் பிற்­ப­கு­தியில் இருந்து ஹமாஸ் இயக்­கத்தின் முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்து வந்­தி­ருக்­கிறார்.

அபு அல் அப்து என்ற புனைப்­பெயர் கொண்ட இஸ்­மாயில் அப்துல் சலாம் ஹனியா, பலஸ்­தீன அக­திகள் முகாமில் பிறந்­தவர். இவர் ஹமாஸ் இயக்­கத்தின் அர­சியல் பிரிவின் தலைவர்.

இஸ்­மாயில் ஹனியா ஹமாஸின் ஒட்­டு­மொத்த தலை­வ­ராக பர­வ­லாகக் கரு­தப்­ப­டு­கிறார். 1980களின் பிற்­பா­தியில் ஹமாஸ் இயக்­கத்தின் முக்­கி­ய­மான தலை­வ­ராக உரு­வெ­டுத்தார். 1989ம் ஆண்டு, இஸ்­ரேலில் அவர் மூன்று ஆண்­டுகள் சிறை­வாசம் அனு­ப­வித்தார்.

பிறகு 1992 ஆம் ஆண்டு இதர ஹமாஸ் தலை­வர்­க­ளுடன் இஸ்­ரே­லுக்கும் லெப­னா­னுக்கும் இடைப்­பட்ட பகு­தியில் மனி­தர்கள் யாரும் இல்­லாத பகு­திக்கு நாடு கடத்­தப்­பட்டார். இஸ்­ரேலால் பல­முறை சிறையில் அடைக்­கப்­பட்ட இவர், ஒரு காலத்தில் 6 மாதங்­க­ளுக்கு தெற்கு லெப­னானில் இருக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார்.

இவரை கொல்­வ­தற்­கான முயற்­சி­களும் அவ்­வ­போது நடந்த வண்ணம் இருந்­தன. 2003ம் ஆண்டு ஹமாஸ் நிறு­வ­ன­ருடன் சேர்த்து இவ­ரையும் கொல்ல இஸ்ரேல் மேற்­கொண்ட முயற்­சியில் அவர் உயிர் தப்­பினார்.

பலஸ்­தீன அர­சாங்­கத்தின் (Palestinian Authority government) பத்­தா­வது பிர­த­ம­ராக 2006 ஆம் ஆண்டில் வகித்தார். ஓராண்­டுக்கு பிறகு அவர் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார். அவர் 2017 இல் ஹமாஸின் அர­சியல் பிரிவின் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

இஸ்­மாயில் ஹனி­யாவைக் கொலை செய்­வ­தற்கு இஸ்ரேல் பல தட­வைகள் முயற்சி செய்­தி­ருந்­தது. அண்­மைக்­கா­லத்தில் இவ­ரது பிள்­ளைகள் உட்­பட பலர் இஸ்­ரே­லினால் இலக்கு வைத்து கொல்­லப்­பட்­டனர்.

இதே­வேளை இத்­தாக்­கு­த­லுக்கு இஸ்ரேல் இது­வரை உரிமை கோர­வில்லை. உலகின் பல நாடுகள் இந்த தாக்­கு­தலைக் கண்­டித்­துள்­ளன.

ரஷ்­யாவின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சகம், இது ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாத அர­சியல் கொலை என்று கூறி­ய­தாக அரசு ஊட­க­மான ரியா அறி­வித்­துள்­ளது. அந்­நாட்டின் வெளி­யு­ற­வுத்­துறை துணை அமைச்சர் மிக்கைல் போக்­டனோவ், இந்த கொலை மேலும் பதற்­றத்தை உரு­வாக்கும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

துருக்­கியின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­கமும் இதற்கு தன்­னு­டைய கண்­டன குரலை பதிவு செய்­துள்­ளது. “தெஹ்­ரானில் நடை­பெற்ற வெட்­கக்­கே­டான கொலை இது,” என்று அதன் அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ள­தாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. மேலும், “இந்த கொலை, காஸாவில் நிலவி வரும் போரை பிராந்­திய அளவில் பரப்­பு­வதை இலக்­காக கொண்­டுள்­ளது,” என்றும் தெரி­வித்­துள்­ளது.

காஸாவில் போர் நிறுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கான பேச்­சு­வார்த்­தையில் இவர் முக்­கிய பங்கு வகித்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஹமாஸின் முக்­கிய தலைவர் கொல்­லப்­பட்­டமை, மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் முன் எப்­போதும் இல்­லாத அள­வுக்கு ஒரு முழு­மை­யான போர் ஏற்­ப­டு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என ஜார்ஜ்­டவுன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மத்­திய கிழக்கு கற்­கைகள் பிரிவில் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்றி வரும் நாதெர் ஹஷெமி கூறு­கிறார். இது முக்­கி­ய­மான நிகழ்­வாகும் என்று கூறும் அவர், இது லெபனானிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்.

‘‘இத்தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், தெற்கு பெய்ரூட்டில், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவரை கொல்ல முயற்சி செய்தது இஸ்ரேல். ஈரானும், ஹிஸ்புல்லாவும் இந்த விவகாரத்தை பெரிதாக்க விரும்பாது என்று நினைத்து இதனை இஸ்ரேல் அரங்கேற்றியது. ஆனால் ஹனியாவின் கொலையானது அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது,” என்றும் நாதெர் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.