பற்றி எரிந்த பங்களாதேஷ் பலியெடுக்கப்பட்ட மாணவர்கள்

0 134

17 கோடி மக்கள் வசிக்கும் பங்­க­ளா­தேஷில் மக்கள் போராட்­டங்கள் புதி­தல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்­பாட்­டங்­களின் தீவிரம் முன்னரைவிட மிக மோச­மாக இருந்­த­தாக விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தேஷில் அர­சாங்க வேலை­களில் மேற்­கொள்­ளப்­படும் இட­ஒ­துக்­கீட்டு முறைக்கு எதி­ராக ஆயி­ரக்­க­ணக்­கான பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பல வாரங்­க­ளாக போராட்டம் நடத்தி வரு­கின்­றனர்.

பொதுத்­துறை அரசு வேலை­களில் மூன்றில் ஒரு பங்கு 1971இல் பாகிஸ்­தானில் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தற்­காக நாட்டின் விடு­தலை போரில் உயி­ரி­ழந்த படை­வீ­ரர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஒதுக்­கீடு முறை பார­பட்­ச­மா­னது என்று மாண­வர்கள் வாதி­டு­கின்­றனர், மேலும் தகு­தியின் அடிப்­ப­டையில் ஆட்­சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரு­கின்­றனர்.

பல்­க­லைக்­க­ழக வளா­கங்­களில் அமை­தி­யான முறையில் தொடங்­கிய போராட்டம் தற்­போது நாடு தழு­விய ஆர்ப்­பாட்­ட­மாக உரு­மா­றி­யுள்­ளது.
காவல்­து­றையும், ‘பங்­க­ளாதேஷ் சட்ரா லீக்’ என அழைக்­கப்­படும் ஆளும் அவாமி லீக் கட்­சியின் மாணவர் பிரி­வி­னரும் அமை­தி­யான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக மிரு­கத்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தாக போராட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர்கள் குற்­றம்­சாட்டி உள்­ளனர். இந்தக் குற்­றச்­சாட்­டு­களை அர­சாங்கம் மறுத்­துள்­ளது.

ஜூலை 15 முதல் கடு­மை­யான மோதல்கள் நடந்து வரு­கின்­றன. ஜூலை18 வியாழன் அன்று வன்­முறை உச்­ச­கட்­டத்தை அடைந்­தது. அன்று குறைந்­தது 25 பேர் கொல்­லப்­பட்­டனர். மேலும், வெள்­ளிக்­கி­ழமை மட்டும் 50 க்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டனர். நேற்­று­வரை இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களில் 180 க்கும் மேற்­பட்டோர் இறந்­துள்­ளனர். 2500க்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். வெள்­ளிக்­கி­ழமை போராட்­டக்­கா­ரர்கள் சிறைக்குள் நுழைந்து 850 கைதி­கைள விடு­வித்­தனர்.

பல நூற்றுக் கணக்­கான பொது மற்றும் தனியார் கட்­டி­டங்கள் தாக்­கப்­பட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளன. பல நூறு வாக­னங்­களும் எரிக்­கப்­பட்­டுள்­ளன. வன்­மு­றைகள் உச்­சத்தில் இருந்த நாட்­களில் அர­சாங்கம் முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் இணைய சேவை­களை முடக்­கி­யது. தொலை­பேசி சேவை­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. நேற்று முதல் இணைய சேவைகள் ஓர­ளவு வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் தொழில்களுக்குச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நாளை முதல் மீண்டும் பாரிய போராட்டங்களில் ஈடுபடுவோம் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

பங்­க­ளா­தேஷைப் பொறுத்­த­வரை அங்கு போராட்­டங்கள் நீண்ட நாட்­க­ளாக நடந்து வரு­கின்­றன. உலகில் வேக­மாக வளர்ந்து வரும் பொரு­ளா­தா­ரங்­களில் ஒன்­றாக பங்­க­ளாதேஷ் இருந்­தாலும், பட்­ட­தா­ரி­க­ளுக்­கான போதிய வேலை வாய்ப்­புகள் இல்லை என்று நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.
சுமார் 1.8 கோடி பங்­க­ளாதேஷ் இளை­ஞர்கள் வேலை தேடி வரு­வ­தாக ஆய்வு மதிப்­பீ­டுகள் தெரி­விக்­கின்­றன. பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்ற மாண­வர்கள் தங்­களை விட குறை­வாக படித்­த­வர்­களை விட அதிக வேலை­யின்மை விகி­தத்தை எதிர்­கொள்­கின்­றனர்.

பங்­க­ளாதேஷ் ஆயத்த ஆடைகள் (ready-to-wear clothing) ஏற்­று­ம­தியின் அதி­கார மைய­மாக மாறி­யுள்­ளது. இது உலக சந்­தைக்கு சுமார் 40 பில்­லியன் டொலர் மதிப்­பி­லான ஆடை­களை ஏற்­று­மதி செய்­கி­றது.

இந்தத் துறையில் 40 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் பணி­யாற்­று­கின்­றனர், அவர்­களில் பலர் பெண்கள். ஆனால் பட்டம் பெற்ற இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு இந்த தொழிற்­சாலை வேலைகள் போது­மா­ன­தாக இல்லை.
பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்­டு­கால ஆட்­சியின் கீழ், தலை­நகர் டாக்­காவில் புதிய சாலைகள், பாலங்கள், தொழிற்­சா­லைகள் , மெட்ரோ ரயில் என கட்­ட­மைக்­கப்­பட்­டதன் மூலம் நாடு புதிய மாற்­றங்­களைக் கண்­டது.

கடந்த பத்து ஆண்­டு­களில் பங்­க­ளா­தேஷின் தனி­நபர் வரு­மானம் மூன்று மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த 20 ஆண்­டு­களில் 2.5 கோடிக்கும் அதி­க­மான மக்கள் வறு­மையில் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ளனர் என்று உலக வங்கி மதிப்­பிட்­டுள்­ளது.

ஆனால் இந்த வளர்ச்சி பிர­தமர் ஹசீ­னாவின் அவாமி லீக் கட்­சிக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு மட்­டுமே பலன் அளிப்­ப­தாக பலர் விமர்­சித்து வரு­கின்­றனர்.
“நாங்கள் பல ஊழல்­களை பார்த்து வரு­கிறோம். குறிப்­பாக ஆளும் கட்­சிக்கு நெருக்­க­மா­ன­வர்கள் செய்யும் ஊழல் நீண்ட கால­மாக தண்­டிக்­கப்­ப­டாமல் தொடர்­கி­றது,” என டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சமினா லுத்பா கூறு­கிறார்.

சமீப மாதங்­களில் பங்­க­ளாதேஷ் சமூக ஊட­கங்­களில், ஹசீ­னாவின் முன்னாள் உயர் அதி­கா­ரிகள் சில­ருக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டுகள் பற்­றிய விவா­தங்கள் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. முன்னாள் இரா­ணுவத் தலைவர், முன்னாள் காவல்­துறை தலைமை அதி­காரி, மூத்த வரி அதி­கா­ரிகள் மற்றும் மாநில ஆட்­சேர்ப்பு அதி­கா­ரிகள் உட்­பட பலர் மீது ஊழல் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

ஹசீ­னாவின் அலு­வ­லக உத­வி­யா­ள­ராக இருந்த ஒரு­வரே 34 மில்­லியன் டொலர் மதிப்­பி­லான சொத்­துக்கள் குவித்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ளார். ‘‘சாதா­ரணப் பய­ணங்­க­ளுக்கு கூட அவர் ஹெலி­கொப்டர் பயன்­ப­டுத்­து­கிறார். அவர் எப்­படி இவ்­வ­ளவு பணம் சம்­பா­தித்தார்? இதை அறிந்த நான் உட­ன­டி­யாக அவர் மீது நட­வ­டிக்கை எடுத்தேன்,” என ஹசீனா விளக்­க­ம­ளித்­துள்ளார்.

பங்­க­ளாதேஷ் ஊட­கங்­களில் இந்த விவ­காரம் பற்­றிய பல எதிர்­வி­னைகள் எழுந்­தன. அர­சாங்க ஒப்­பந்­தங்­க­ளுக்­கான இலஞ்சம், ஊழல் ஆகி­ய­வற்றின் மூலம் இவ்­வ­ளவு பணம் குவிக்­கப்­பட்­டி­ருக்கும் என ஊட­கங்கள் கரு­து­கின்­றன.
ஒரு காலத்தில் ஹசீ­னாவின் நெருங்­கிய கூட்­டா­ளி­யாகக் கரு­தப்­பட்ட முன்னாள் காவல்­துறைத் தலைவர் பெனாசிர் அக­மது சட்­ட­வி­ரோ­த­மான வழி­களில் மில்­லியன் கணக்­கான டொலர்­களைக் குவித்­த­தற்­காக பங்­க­ளாதேஷ் ஊழல் தடுப்பு ஆணையம் விசா­ர­ணையைத் தொடங்­கி­யுள்­ளது.

அதி­க­ரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பொரு­ளா­தார நெருக்­கடி ஆகிய சிக்­கல்­களில் சிக்கித் தவிக்கும் நாட்டில் உள்ள சாதா­ரண மக்­க­ளுக்கு இந்த செய்­திகள் சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

ஊழல் குற்­றச்­சாட்­டுகள் மட்­டு­மன்றி, கடந்த 15 ஆண்­டு­களில் ஜன­நா­யக நட­வ­டிக்­கை­க­ளுக்­கான இடம் சுருங்­கி­விட்­ட­தாக பல சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

“தொடர்ந்து மூன்று தேர்­தல்­களில் நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான மற்றும் நியா­ய­மான வாக்­குப்­ப­திவு செயல்­முறை இல்லை,” என்று மனித உரி­மைகள் கண்­கா­ணிப்பு அமைப்பின் தெற்­கா­சிய இயக்­குனர் மீனாட்சி கங்­குலி பிபி­சி­யிடம் தெரி­வித்தார்.

2014 மற்றும் 2024 ஆம் ஆண்டு தேர்­தல்­களை பிர­தான எதிர்க்­கட்­சி­யான பங்­க­ளாதேஷ் தேசி­ய­வாதக் கட்சி (BNP) புறக்­க­ணித்­தது. ஹசீ­னாவின் கீழ் சுதந்­தி­ர­மான மற்றும் நியா­ய­மான தேர்­தல்கள் சாத்­தி­ய­மில்லை என்றும் தேர்­தல்கள் நடு­நி­லை­யான கண்­கா­ணிப்பு நிர்­வா­கத்தின் கீழ் நடை­பெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்­பு­வ­தாகக் கூறினர். ஆனால், இந்தக் கோரிக்­கையை ஹசீனா நிரா­க­ரித்­து­விட்டார். ஷேக் ஹசீனா இந்த ஆண்டு ஜன­வரி மாதம் நான்­கா­வது முறை­யாக மீண்டும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

கடந்த 15 ஆண்­டு­களில் 80 க்கும் மேற்­பட்டோர் காணாமல் போயுள்­ளனர், அவர்­களில் பலர் அர­சாங்­கத்தை விமர்­சித்­த­வர்கள் என்றும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கு அவர்கள் பற்­றிய எந்த தக­வலும் கிடைக்­க­வில்லை என்றும் மனித உரிமைக் குழுக்கள் கூறு­கின்­றன.

ஷேக் ஹசீனா கடந்த சில ஆண்­டு­களில் அர­சியல் ரீதி­யாக எதேச்­ச­தி­கா­ர­மாக வளர்ச்சி அடைந்­துள்ளார் என்ற பர­வ­லான விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில், அர­சாங்கம் ஊட­கங்­க­ளையும் ஆட்­சியை எதிர்ப்­ப­வர்­க­ளையும் ஒடுக்­கு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. ஆனால் அமைச்­சர்கள் இந்த குற்­றச்­சாட்டை மறுக்­கின்­றனர்.

“மக்கள் இப்­போது தங்கள் கோபத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தங்­க­ளுக்கு எந்த வழியும் இல்லை என்ற சூழலில் மக்கள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­வார்கள்” என்­கிறார் டாக்டர் லுத்பா.

இந்த போராட்­டங்­க­ளுக்கு முக்­கிய காரணம் எதிர்க்­கட்­சிதான் என்று அமைச்­சர்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர். மேலும் சில இஸ்­லா­மியக் கட்­சி­க­ளாலும் ஆர்ப்­பாட்­டங்கள் வன்­மு­றை­யாக மாறி­ய­தாக அவர்கள் கூறு­கி­றார்கள். பிரச்­சி­னை­களை நிதா­ன­மாக விவா­திக்க அர­சாங்கம் தயா­ராக இருப்­ப­தாக சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறினார்.

“மாணவர் போராட்டக்காரர்களை அரசு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நியாயமான வாதம் முன்வைக்கப்பட்டால், நாங்கள் கேட்க தயாராக இருக்கி றோம்” என்று ஹக் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.
சமீ­பத்­தைய போராட்­டங்­க­ளுக்­கான பிர­தான கார­ண­மான இட ஒதுக்­கீட்டுத் திட்­டத்தை பங்­க­ளாதேஷ் உயர் நீதி­மன்றம் ஜூலை 21 இல் இரத்துச் செய்­துள்­ளது. அரசு வேலை­களில் அதி­க­பட்சம் 5% பணி­யி­டங்­களை மட்­டுமே முன்னாள் சுதந்­திரப் போர் வீரர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு ஒதுக்­கலாம் என்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. எனினும் அந்த ஏற்­பாட்­டையும் நீக்கி அனை­வ­ரையும் உள்­வாங்கும் வகையில் இட ஒதுக்­கீட்டை மேற்­கொள்­ளு­மாறு மாண­வர்கள் போராடி வரு­கின்­றனர்.

பங்­க­ளாதேஷ் மாணவர் போராட்­டங்­க­ளுக்கு உலகின் பல நாடு­க­ளிலும் ஆத­ர­வுகள் வலுத்­துள்­ளன. இலங்­கை­யிலும் மாண­வர்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­களைக் கண்­டித்து ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. (பி.பி.சி.)- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.