பூநொச்­சி­மு­னையில் வெடித்த குண்டும் வெடிக்­காத குண்டும்

0 126

எம்.எஸ்.எம். நூர்தீன்

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள பூநொச்­சி­முனை கிரா­மத்தில் அண்­மையில் வீடு ஒன்றின் மீது இடம்­பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்­ப­வமும் வெடிக்­காத நிலையில் கைக்­குண்­டொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்ட சம்­ப­வமும் அப்­ப­குதி மக்­களை அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ள­துடன் பாது­காப்­புத்­த­ரப்­பி­னரின் கெடு­பி­டி­க­ளுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காத்­தான்­குடி பொலிஸ் பிரிவில் இப் பூநொச்­சி­முனை கிராமம் அமைந்­துள்­ளது. வர­லாற்று பாரம்­ப­ரி­ய­மிக்க இந்த கிரா­மத்தில் 300 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன. இவர்­களின் பிர­தான வாழ்­வா­தா­ர­மாக ஆழ் கடல் மீன்­பிடித் தொழிலே காணப்­ப­டு­கி­றது. மீன­வர்­களை அதிகம் கொண்­டுள்ள இக் கிராமம் கடந்த கால யுத்­தத்­தி­னாலும் சுனாமி அனர்த்­தத்­தி­னாலும் பாதிக்­கப்­பட்ட கிரா­ம­மாகும். கடந்த யுத்த காலத்தில் இடம்­பெ­யர்ந்து மீளக்­கு­டி­யே­றிய பலரும் இக்­கி­ரா­மத்தில் வசித்து வரு­கின்­றனர்.

மிகவும் அமை­தி­யா­கவும் சுமு­க­மா­கவும் வாழ்ந்து வரும் இக்­கி­ராம மக்கள், அண்­மையில் இடம்­பெற்ற இந்த வெடிப்புச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து பாரிய நெருக்­க­டிக்­குள்ளும் அச்­சத்­தி­னுள்ளும் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
இந்த கிரா­மத்தில் பச்சை வீட்டு திட்டம் எனப்­படும் ஒரு பகு­தியும் உண்டு. இதில் உள்ள வீடு ஒன்­றி­லேயே இந்த கைக்­குண்டு வீச்சு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இங்குள்ள வீடொன்றின் மீது கடந்த ஜுலை 15 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இரவு சுமார் 8.45 மணி­ய­ளவில் இந்த கைக்­குண்டு வீச்சு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்குச் சென்ற காத்­தான்­குடி பொலிசார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர், இரா­ணு­வத்­தினர், பாது­காப்பு அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களில் ஈடு­பட்டனர். பொலிஸ் தடய­வியல் பிரிவு அதி­கா­ரி­களும் ஸ்தலத்­திற்கு சென்று வீட்டில் முழு­மை­யான சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

குறித்த வீட்டில் வெடிப்புச் சத்தம் கேட்­டுள்­ள­துடன் கூரை­யி­லி­ருந்து தரையில் வந்து விழுந்த ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்­ட­தா­கவும் பின்னர் அது புகை­யாக கிளம்­பி­ய­தா­கவும் அவ் வீட்டில் குடி­யி­ருக்கும் பெண் தெரி­வித்­துள்ளார். வெடிப்புச் சத்­தத்தை தம்மால் தெளி­வாக கேட்க முடிந்­த­தாக அய­ல­வர்­களும் தெரி­விக்­கின்­றனர்.

சம்­பவ நேரம் குறித்த வீட்­டினுள் வீட்டு உரி­மை­யா­ளரின் மனைவி மற்றும் அவ­ரது இரண்டு பிள்­ளை­களும் இருந்­துள்­ளனர்.
இந்த சம்­ப­வத்­தினால் குறித்த வீட்­டுக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை எனவும் வீட்டின் கூரையில் இரண்டு ஓடுகள் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த சம்­பவம் இடம்பெற்ற வீட்­டுக்கு மல்­வத்த 24 வது படைப்­பி­ரிவின் கட்­டளை அதி­காரி மேஜர் ஜெனரல் அணில் பெரேரா, மட்­டக்­க­ளப்பு கல்­லடி 243வது படைப் பிரிவின் பிரி­கே­டியர் சந்­திம குமா­ர­சிங்க ஆகியோர் சென்று பார்­வை­யிட்­டனர். அதே போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட உயர் பொலிஸ் அதி­கா­ரி­களும் நேரில் சென்று பார்­வை­யிட்­டனர்.

கொழும்­பி­லி­ருந்து வந்த வெடி­பொ­ருட்கள் பகுப்­பாய்வு செய்யும் பொலிஸ் அதி­கா­ரி­களும் ஸ்தலத்­துக்கு வந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.
இது தொடர்­பாக பல கோணங்­க­ளிலும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்

இந்தச் சம்­பவம் இடம்பெற்று பல கோணங்­களில் விசா­ர­ணைகள் இடம் பெற்று வந்த நிலையில் அதே பகு­தியில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (21) மாலை வெடிக்­காத நிலையில் காணப்­பட்ட கைக் குண்டு ஒன்று மீட்­கப்­பட்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்ட சம்­ப­வமும் பதி­வா­கி­யுள்­ளது. இதே பச்சை வீட்­டுத்­திட்ட வீதி­யி­லேயே இக் கைக்­குண்டும் மீட்­கப்­பட்­டுள்­ளது.

வீதியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­வர்கள் மரத்தின் கீழ் கைக் குண்டு ஒன்று கிடப்­பதை கண்டு அதனை அப்­ப­கு­தி­யி­லுள்ள சில­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இது தொடர்பில் பிர­தேச மக்கள் காத்­தான்­குடி பொலி­சா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு சென்ற பொலிஸார், இரா­ணு­வத்­தினர், தட­வியல் பரி­சோ­தனை பொலிஸார் மற்றும் விசேட அதி­ரடிப் படை­யினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

பின்னர் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 10 மணி­ய­ளவில் வவு­ண­தீ­வி­லுள்ள விசேட அதி­ரடிப் படை­யி­ன­ரினால் குறித்த கைக் குண்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்­டது.

இது தொடர்­பாக மேல­திக விசா­ர­ணைகள் இடம்பெற்று வரு­வ­தா­கவும் பொலிஸார் மேலும் குறிப்­பிட்­டனர்.

இதே நேரம் இவ்­விரு சம்­ப­வங்­களும் பதி­வான பூநொச்­சி­முனை பச்சை வீட்டுத் திட்டப் பகுதி நேற்று புதன்­கி­ழமை அதி­காலை பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தி­ன­ரால சுற்றி வளைக்­கப்­பட்­ட­துடன் மோப்ப நாய்­களின் உத­வி­யுடன் வீடு வீடாக சோத­னைகள் இடம்­பெற்­றன.

குறித்த பச்சை வீட்டுத் திட்ட பகு­தியில் வசிக்கும் வீட்டு உரி­மை­யா­ளர்கள் மற்றும் குடும்­பத்­தினரின் விப­ரங்­களும் பொலி­சா­ரினால் திரட்­டப்­பட்டு சோதனை நட­வ­டிக்­கை­களும் இடம் பெற்­றன.

இந்த சோதனை நட­வ­டிக்­கையின் போது எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை எனவும் சந்­தே­கத்­துக்­கி­ட­மான பொருட்கள் எதுவும் கண்­டெ­டுக்­கப்­ப­ட­வில்லை எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த சுற்றி வளைப்பின் போது பொலிஸார், இரா­ணு­வத்­தினர் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் சுமு­க­மாக சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­துடன் பாத­சா­ரிகள், பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டா­த­வாறே சுற்றி வளைப்பு மற்றும் சோதனை நட­வ­டிக்­கையை மேற் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த சம்­ப­வங்கள் அமை­தி­யாக வாழ்ந்து வரும் இந்தக் கிராம மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் பீதி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த மாதம் இந்த பூநொச்­சி­முனை கடற்­க­ரையில் மீன்­பிடிப் படகு ஒன்றும் எரிக்­கப்­பட்­டது. இது தொடர்பில் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். இதனால் படகு உரி­மை­யா­ள­ருக்கு முப்­பது இலட்சம் ரூபா­வுக்கு மேல் நஷ்டம் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து இந்த சம்­ப­வத்தை கண்­டித்து பூநொச்­சி­முனை மீன­வர்கள் கண்­டன ஆர்ப்­பாட்டம் ஒன்­றிலும் ஈடு­பட்­டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர், பல்­வேறு நெருக்­க­டி­களைச் சந்­தித்து, தற்போது சுமுகமாக வாழ்ந்து வரும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் தீய சக்திகள் மக்கள் மத்தியில் வீண் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறான சதித்திட்டங்களை மேற்கொள்கின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொலிசார் நீதியான முறையில் விசாரணைகளை நடத்தி வெடித்த குண்டு மற்றும் வெடிக்காத குண்டின் பின்னணிகளைக் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே பூநொச்சிமுனை வாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.