பரீட்சைத் திணைக்­க­ளமே மாணவர் உரி­மை­களை மீற­லாமா?

0 164

கலா­பூ­ஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)

இலங்­கையில் வாழும் மூவின மக்­களில் பெரும்­பான்­மை­யினர் புரி­த­லு­டனும், விட்டுக் கொடுப்­பு­டனும் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் சமயம், மொழி, கலா­சாரம் என்­ப­ன­வற்றை அங்­கீ­க­ரித்தும் வாழ்ந்து வந்­துள்­ள­மைதான் வர­லா­றாகும்.
இடைக்­கி­டையே சில சல­ச­லப்­புக்கள் அடிப்­படைவாதி­க­ளாலும், கடும் போக்­கு­டை­ய­வர்­க­ளாலும், காழ்ப்­பு­ணர்வு கொண்­டோர்­க­ளாலும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் கால­வோட்­டத்தில் அவை மறக்­கப்­பட்டு சுமு­க­மான நிலைக்குத் திரும்­பி­வி­டுவர். இதுவே மூன்று இனங்­க­ளையும் சேர்ந்த பெரும்­பான்­மை­யோரின் நிலைப்­பா­டாகும்.

இதற்­கப்பால் வேறு சிலர் தங்­களின் சுய இலா­பங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக ஒரு சமூ­கத்தின் மேல் மற்­றொரு சமூ­கத்தின் காழ்ப்­பு­ணர்வை அடிக்­கடி வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இவ்­வா­றான ஒரு நிகழ்­வுதான் அண்­மையில் திரு­மலை ஸாஹிறாக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற க.பொ.த (சா/த) பரீட்­சை­யின்­போது பரீட்சை மண்­ட­பத்தின் மேற்­பார்­வை­யாளர் தான் ஒரு இன­வாதி என்­பதை முத்­திரை குத்தி பதிவு செய்­துள்ளார்.

பரீட்சை எழுத வரும் மாண­வர்கள் பிஞ்சு மனம் கொண்­ட­வர்கள். மட்­டு­மன்றி இந்தப் பரீட்­சையை நான் எழுதி முடிப்­பேனா? வினாத்­தாள்கள் எப்­படி வருமோ? எனது வாழ்வின் உயர் கல்­வியின் முதற்­ப­டியில் காலடி எடுத்து வைக்கும் எனக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்ற பதற்ற­மான மன­நி­லையில் அச்­சமும், பயமும் கலந்த ஒரு­வித மனோ­பா­வத்­தில்தான் அவர்கள் அந்த மண்­ட­பத்துள் அமர்ந்­தி­ருப்பர்.

இந்­நி­லையில் மேற்­பார்­வை­யா­ளர்கள் பரீட்சை விதி­மு­றை­களை மாண­வர்கள் கடைப்­பி­டிக்­கின்­றார்­களா? என்­பதை அவ­தா­னித்துக் கொண்­டி­ருப்பர். மாண­வர்­களில் யாரும் விதி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­க­வில்­லை­யெனில் அவ்­வி­டத்­தி­லேயே அவர்­களை அணுகி அவர்­களின் விதி­முறை மீறலை அவர்­க­ளிடம் சுட்­டிக்­காட்டி அவர்­களை நெறிப்­ப­டுத்­து­வதே மேற்­பார்­வை­யா­ளர்­களின் கட­மை­யாகும்.

இந்த ஒழுக்க விழு­மி­யங்­களை ஸாஹிறாக் கல்­லூரி பரீட்சை மேற்­பார்­வை­யாளர் மீறி­யுள்ளார் என்­பதே எமக்குக் கிடைக்கும் தக­வ­லாகும்.
இந்த அடிப்­ப­டையில் திரு­மலை ஸாஹிறாக் கல்­லூரி மாண­வர்­களின் பரீட்சை மண்­ட­பத்தில் என்ன நடை­பெற்­றுள்­ளது என்­பதை நாம் ஊட­கங்கள் மூலம் அறிந்து மிகுந்த மன வேதனை அடை­கிறோம்.

மாண­விகள் அவர்­களின் கலா­சார விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் தலை­யையும், காது­க­ளையும் மறைத்து பர்தா அணிந்து வந்­துள்­ளனர். இது பரீட்சை மேற்­பார்­வை­யா­ள­ருக்கு பிடிக்­க­வில்­லை­யாயின் ஒரு பெண் நோக்­கு­னரை அழைத்து பர்தா அணிந்­துள்ள மாண­வி­களின் மூடப்­பட்­டுள்ள காது­களில் ஏதா­வது கரு­விகள் இணைக்­கப்­பட்­டுள்­ளதா? என்­பதைப் பரி­சோ­தித்துப் பார்த்­ததன் பின் விதி­மு­றைகள் மீறப்­பட்­டி­ருக்­க­வில்லை என அவ­ரது உதவிப் பரி­சோ­தகர் திருப்­தி­ய­டைந்து பிர­தம பரி­சோ­த­க­ரிடம் விட­யத்தைக் கூறினால் காதோடு காதாக இவ்­வி­டயம் மண்­ட­பத்­திற்­குள்­ளேயே முடி­வ­டைந்­தி­ருக்கும்.
இவ்­வாறு செய்­வதை விட்­டு­விட்டு அந்த மாண­வி­க­ளையும் பரீட்சை எழுத அனு­மதி அளித்­து­விட்டு இறு­தியில் அம்­மா­ண­வியர் பற்­றிய பிழை­யான தக­வல்­களை பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கு அறி­வித்து அவர்­களின் பெறு­பே­று­களைத் தடுத்து வைக்க உத­வி­யமை இவ­ரது திற­மை­யற்ற நிர்­வாக முறை­யையும், இவரின் அடி­ம­னதில் ஆழப்­ப­திந்­துள்ள காழ்ப்­பு­ணர்­வையும் வெளிக்­கொ­ணர்ந்­துள்­ளது.

இந்­தச்­செய்தி பாரா­ளு­மன்றம் வரை சென்று விவாதப் பொரு­ளாக மாற்றம் பெற்று ஒரு சில ஊட­கங்­களும் இத­னைப்­ பெ­ரி­து­ப­டுத்தி முஸ்லிம் சமூ­கத்தின் கௌர­வத்தைப் பாதிக்கும் வகையில் செய்­திகள் வெளி­யி­­டவும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வில் விரி­சலை ஏற்­ப­டுத்­தவும் இவ­ரது செயல்கள் கார­ண­மாக மாறி­யுள்­ளது.

இவர் ஒரு நீதி­யான, திற­மை­வாய்ந்த மேற்­பார்­வை­யா­ள­ரா­க­வி­ருந்தால் தனக்கு இவ்­வி­ட­யத்தில் தீர்­வு­காண முடி­ய­வில்­லை­யெனில் தனது மேல­தி­கா­ரி­க­ளிடம் அல்­லது அனு­பவம் வாய்ந்­த­வர்­க­ளிடம் இது சம்­பந்­த­மாக ஆலோ­ச­னை­களைப் பெற்று இம்­மா­ண­வி­களின் மன உளைச்­சலை நீக்­கி­யி­ருக்­கலாம்.

இதனை விடுத்து இவர் நடந்து கொண்ட விதம் கண்­டிக்­கத்­தக்­கது மட்­டு­மன்றி மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவே அறிக்கை விடும் அள­விற்கு அவ­ரது செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் விடுத்­துள்ள அறிக்­கையில் “மாண­வி­களின் மத சுதந்­தி­ரத்தை மீறும் வகையில் இச்­செயல் உள்­ளது என்றும் அம்­மா­ண­வி­களின் கல்­விக்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அண்­மைய வரு­டங்­களில் சிறு­பான்­மை­யின முஸ்­லிம்­களை ஒடுக்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளன” என்றும் கூறப்­பட்­டுள்­ளது. (04.07.2024 விடி­வெள்ளி)

நமது அரசு நாட்டு மக்­க­ளுக்­கி­டையே புரிந்­து­ணர்­வையும், சுமுக வாழ்­வையும் ஏற்­ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் இவ்­வே­ளையில் இவ­ரது செயற்­பா­டுகள் அரசின் கோட்­பா­டு­க­ளுக்கு சவா­லாக அமை­வ­துடன் அர­சுக்கு அப­கீர்த்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இவ­ரது செயற்­பா­டுகள் பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கும் மேல­திக வேலைப்­ப­ளுவையும் சிர­மத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான காழ்ப்­பு­ணர்­வுள்ள வக்­கி­ர­புத்தி கொண்ட பொருத்­த­மற்ற தகு­தி­யற்­ற­வர்­களை பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளாக அல்­லது பிர­தம பரீட்­ச­க­ராக நிய­மிப்­பதில் பரீட்சைத் திணைக்­களம் ஆய்வு செய்து பொருத்­த­மா­ன­வர்­களை எதிர்­வரும் காலங்­களில் நிய­மிக்­கு­மாறும் இந்த அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­திய மேற்­பார்­வை­யா­ள­ருக்கு ஓய்வு கொடுத்­து­விட்டு வீட்­டுக்கு அனுப்பி வைப்­பதே பொருத்­த­மாகும். அத்­துடன் இவ்­வா­றா­ன­வர்­களை வைத்­தியப் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைப்­பது நன்று என்ற பொது மக்­களின் ஆதங்­கத்தை சமூக ஆர்­வலன் என்ற வகையில் தங்­க­ளுக்கு அறி­விக்க கட­மைப்­பட்­டுள்ளேன்.

அத்­துடன் பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்­குள்­ளேயும் அர­சாங்­கத்தின் கொள்­கை­க­ளுக்கு விரோ­த­மாக மக்­களின் அதி­ருப்­தியைப் பெற்றுக் கொடுக்க ஒரு சிலர் திட்­ட­மிட்டு தங்­க­ளது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்த உதவி செய்து கொண்­டி­ருக்­கி­றார்­களோ? என்று எண்­ணத்­தோன்­று­கி­றது. ஏனெனில் வினைத்­திறன்காண் தடை­தாண்டல் பரீட்­சைக்கு ஹிஜாப் அணிந்து தோற்­றிய 13 அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டி­ருப்­பது பொது மக்­களின் சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்­து­கி­றது.

இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக மனித உரிமை ஆணைக்­குழு பரீட்சைத் திணைக்­கள அதி­கா­ரி­களை விசாரணைக்கு அழைத்தபோதும் அவர்கள் சமூகமளிக்காது இதனை அலட்சியப்படுத்துகிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு பக்கம் மாண­வர்கள் ஹிஜாப் அணி­வதால் பரீட்சைப் பெறு­பே­றுகள் நிறுத்­தப்­ப­டு­கி­றது. மறு­புறம் ஹிஜாப் அணிந்து பரீட்­சைக்குச் சென்ற 13 அதி­பர்­களின் பரீட்சைப் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான அதி­கா­ரி­க­ளுக்கு பெறு­பே­று­களை இடை­நி­றுத்தம் செய்­வது ஒரு பொழு­து­போக்­கான செயல்­க­ளாக உள்­ளதா? பரீட்சை ஆணை­யாளர் அவர்­களே! இது ஒரு சமூகப் பிரச்­சினை மாத்­தி­ர­மின்றி மனித உரி­மைகள் மீறப்­படும் செயல்­க­ளு­மாகும்.

எனவே, தாங்கள் இதில் நேர­டி­யாக தலை­யிட்டு இவ்­வா­றான நிகழ்­வுகள் தொடர்ந்து கொண்டு செல்­லா­தி­ருக்க சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அழைத்து தீர விசா­ரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்பதே பொது மக்களின் வேண்டுகோளாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.