ஜனாஸா எரிப்பின் வலியை உணர்த்தும் ஆவணப்படம் ODDAMAVADI

0 290

எஸ்.என்.எம்.சுஹைல்

கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­த­வர்­களை கட்­டாயம் எரிக்க வேண்டும் என்ற தீர்­மானம், அதனால் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் வலுக் கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்­டது என்­பதை வலி­யு­றுத்தும் ஆவணத் திரைப்­ப­ட­மாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது அமான் அஷ்­ரபின் ‘ஓட்­ட­மா­வடி’ ஆவணத் திரைப்­படம்.

அமான் அஷ்ரஃப் இயக்­கிய ‘ஓட்­ட­மா­வடி’ ஆவணத் திரைப்­படம், கடந்த புதன் கிழமை (10 ஆம் திகதி ) One Galle Face PVR திரை­ய­ரங்கில் விஷேட காட்­சி­யாக வெளி­யி­டப்­பட்­டது. இதில், நாட்டின் முதல் பெண்­மணி பேரா­சி­ரியர் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், ஜனா­தி­பதி அலு­வ­லக பிர­தானி சாகல ரத்­னா­யக்க உள்­ளிட்ட பிர­மு­கர்கள், இரா­ஜ­தந்­தி­ரிகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.

கொவிட்-19 பெருந் தொற்றின் போது இலங்கை முஸ்லிம் சமூகம் நடத்­திய போராட்­டத்தின் சொல்­லப்­ப­டாத கதையின் மூலம் பார்­வை­யா­ளர்­களை ஒரு கவ­லை­யான பய­ணத்தில் இந்த ஆவ­ணப்­படம் அழைத்துச் செல்­கி­றது. வைரஸால் இறந்­த­வர்­களின் கட்­டாய தக­னங்கள் மூலம் அவர்­களின் குடும்­பங்கள் பட்ட மன­வே­த­னை­யையும் இவ் ஆவணப் படம் எடுத்­துக்­காட்டத் தவ­ற­வில்லை.

2019 இன் பிற் பகு­தியில் உரு­வான கொவிட் 19 வைரஸ் உல­க­ளவில் பேர­ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் தாக்கம் இலங்­கை­யையும் விட்­டு­வைக்­க­வில்லை. இதனால் சுமார் 17000 இலங்­கை­யர்­களின் உயிர்கள் காவு­கெள்­ளப்­பட்­டன. இதன் அச்­சு­றுத்­தலை இலங்­கை­யர்கள் எல்­லோரும் அனு­ப­வித்­தனர். என்­றாலும், கொவிட் அதிகம் காயப்­ப­டுத்­தி­யது முஸ்­லிம்­க­ளைத்தான். இஸ்­லா­மிய சமய அடிப்­ப­டையில் ஜனா­சா­வுக்­கான இறுதிக் கட­மை­களை நிறை­வேற்ற அர­சாங்­கத்தால் முட்­டுக்­கட்டை போடப்­பட்­டது. உலக நிய­தி­க­ளுக்கு மாறாக இலங்கை கடு­மை­யான தீர்­மா­னங்­களை எடுத்து முஸ்­லிம்­களை வஞ்­சித்­தது என்­பதை இந்தத் திரைப்­படம் காட்டி நிற்­கி­றது.

இயக்­குனர் அமான் அஷ்ரஃப் இந்த ஆவணப் படத்தை இயக்­கு­வ­தற்­கான உந்­து­தலை இவ்­வாறு வெளிப்­ப­டுத்­தினார். “எனது சமூ­கத்தைப் பற்றி பேசும் கதை என்­பதால் இது ஒரு முஸ்லிம் கதை அல்ல, மாறாக ‘ஓட்­ட­மா­வாடி’ ஆவ­ணப்­படம் முழு இலங்கை பிர­ஜை­க­ளி­னதும் கதை என்­பதை வலி­யு­றுத்த முற்­ப­டு­கின்றேன். அது­மட்­டு­மல்­லாமல், பல தரப்­பட்ட இன மற்றும் மதப் பின்­ன­ணி­களைக் கொண்ட இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தியை ஆவ­ணப்­ப­டுத்த தொழில் வல்­லு­நர்கள் பலரும் எனக்கு வழங்­கிய ஒத்­து­ழைப்பின் விளைவே இந்த திரைப்­ப­ட­மாகும். இது வருங்­கால சந்­த­தி­யி­ன­ருக்­காக பதிவு செய்­யப்­பட வேண்டும் என்­பதை உணர்ந்­த­த­னா­லேயே கதையை உரு­வாக்­கினேன். இது­போன்ற கதையை உரு­வாக்­கி­யதால் எதிர்­கா­லத்தில் இன்­னு­மொரு கொடூரம் அரங்­கே­று­வதை தடுக்­கலாம் என நம்­பு­கிறேன்” என குறிப்­பி­டு­கின்றார்.

பிளாக் காபி பிலிம்ஸ் தயா­ரித்த, “ஒட்­ட­மா­வடி” ஆவ­ணப்­படம் சமூகப் பிர­தி­நி­திகள், அர­சாங்கப் பிர­தி­நி­திகள் மற்றும் மருத்­துவ நிபு­ணர்­களின் நேர்­கா­ணல்கள் மூலம் இந்த வலுக்­கட்­டாய தக­னத்தை ஆழ­மாக ஆராய்­கி­றது.
குறிப்­பாக ஐ.நா.வின் விஷேட பிர­தி­நிதி ராதிகா ஆனந்த குமா­ர­சு­வாமி, அமைச்சர் அலி­சப்ரி, பாகிஸ்தான் நாட்­டுக்­கான இலங்­கையின் முன்னாள் கொன்­சி­யூலர் அப்சல் மரிக்கார், பேரா­சி­ரியை பஸீஹா நூர்தீன், ஜம்­இய்­யதுல் உலமா செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், வைத்­திய நிபுணர் அன்வர் ஹம்­தானி, மேமன் சங்கத் தலைவர் யாசீன் பத்­தாஹி, பேரா­சி­ரி­யர்­க­ளான அத்துல் சேனா­ரத்ன, கமால் ஐ.டீன், ஏ.எச். சரீப்டீன், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்­ளிட்­ட­வர்­களின் நேர்­கா­ணல்­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

அத்­துடன், எரிக்­கப்­பட்ட 21 நாள் குழந்­தையின் பெற்­றோர்கள், கண்­டியில் உயி­ரி­ழந்த பெண்­ணொ­ரு­வரின் குடும்­பத்­தாரின் நேர்­கா­ணல்­களின் காட்­சிகள் திரையில் தோன்­றி­ய­போது, கண்­க­ளி­லி­ருந்து கண்ணீர் கசி­வதை தடுக்க முடி­ய­வில்லை.

அடக்கம் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்ட பின்னர் ‘ஓட்­ட­மா­வடி’ யிலுள்ள மஜ்மா நகரில் கொவிட் ஜனா­ஸாக்­களை பிரத்­தி­யே­க­மாக அடக்­கு­வ­தற்­கான இடம் ஒதுக்­கப்­பட்­டதைக் கார­ண­மாகக் கொண்டே ‘ஓட்­ட­மா­வடி’ என்ற பெயர் இந்த ஆவ­ணப்­ப­டத்­திற்கு சூட்­டப்­பட்­டுள்­ள­தாக கரு­தலாம்.
“ஓட்­ட­மா­வடி” இலங்­கையின் ஆவணத் திரைப்­பட பரப்பில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­புதும் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது.

இந்த படத்­துக்கு பல்­வேறு விமர்­ச­னங்­களும் இல்­லாமல் இல்லை, குறிப்­பாக ஜனாஸா எரிப்­புக்கு எழுந்த பல­மான மக்கள் எதிர்ப்பை இந்த ஆவ­ணப்­படம் உள்­ளீர்க்கத் தவ­றி­யுள்­ளது. அதிலும் குறிப்­பாக மங்­கள சம­ர­வீர ஆரம்­பித்த ‘கபன் துணிப் போராட்டம்’ பற்றி எந்­த­வொரு காட்­சியும் இதில் இடம்­பெ­ற­வில்லை.

அத்­துடன், இந்த ‘ஓட்­ட­மா­வடி’ ஆவ­ணப்­ப­டத்தின் ட்ரைலரில் காண்­பிக்­கப்­பட்ட மு.கா. தலைவர் ஹக்­கீமின் உரையை, திரைப்­ப­டத்தில் காண முடி­ய­வில்லை. அத்­துடன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம், இரா­ச­மா­ணிக்கம் சாணக்யன் ஆகி­யோரின் உரைகள் சில செக்­கன்கள் திரையில் காண்­பிக்­கப்­பட்­டாலும் அவர்­களைப் போன்று பாரா­ளு­மன்றில் மிகவும் கார­சா­ர­மாக பேசிய முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் உள்­ளிட்ட ஏனைய அர­சியல் தலை­மைகள் வேண்­டு­மென்றே மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ள­னரா என்ற கேள்­வி­களும் எழு­கின்­றன.

இதற்கு அப்பால், கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், கண்டி நகர் பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் அர்ப்­ப­ணிப்­புகள் காண்­பிக்­கப்­பட்­டன. எனினும், இந்த ஜனாஸா விவ­கா­ரத்தில் தன்­னார்­வ­மாக செயற்­பட்ட ஹுஸைன்போல்ட் போன்­ற­வர்­களும், மஜ்மா நகரில் செயற்­பட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரது பங்­க­ளிப்பு பற்­றியும் இந்­தப்­படம் போதி­ய­ளவு பேசத் தவ­றி­விட்­டது.

இந்த வலுக்­கட்­டாயத் தக­ன­மா­னது நிபு­ணர்கள் குழுவின் பிழை­யான வழி­ந­டத்தல் என்­பதை சுட்­டிக்­காட்டும் இந்த ‘ஓட்­ட­மா­வடி’ ஆவ­ணப்­படம் ராஜ­பக்­சாக்­களின் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத நட­வ­டிக்­கையே இது என்­பதை அழுத்­த­மாக கூற­வில்லை என்ற விமர்­ச­னங்­களும் எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இது பற்றி பதி­வொன்றை எழு­தி­யி­ருக்கும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இந்தப் பிரச்­சினை உண்­மையில் ஆட்­சியில் இருந்த இன­வா­தி­களின் முஸ்­லிம்கள் மீதாக பழி­வாங்கும் நட­வ­டிக்கை எனக் கூறி­யி­ருக்­கிறார்.

‘ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவும் அவ­ருடன் இருந்­த­வர்­களும் தேர்­தலின் போது முஸ்­லிம்கள், தமி­ழர்கள் மற்றும் பிற சிறு­பான்­மை­யினர் தமக்கு வாக்­க­ளிக்­கா­ததால் அவர்­களை தண்­டிப்­பது பொருத்­த­மா­னது என்று நினைத்­தனர். இந்த இன­வாத , மத­வெறி , மனி­தா­பி­மா­ன­மற்ற பார்­வையின் விளை­வா­கத்தான் முஸ்­லிம்­களில் இறந்­த­வர்­களை தகனம் செய்யும் தீர்­மா­னத்தை பல­வந்­த­மாக திணித்­தனர். அன்­றைய அர­சாங்­கத்தில் இருந்த அர­சி­யல்­வா­தி­களும் இந்த முடி­வுகள் எந்த பகுத்­த­றி­வுக்­குட்­பட்ட கார­ணத்­தி­னாலும் எடுக்­கப்­பட்­டவை அல்ல என்­பதை நன்கு தெரிந்தும் சும்மா பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்­தாலும் சிறு­பான்­மை­யி­ன­ராக இருந்தாலும் எந்த ஒரு சமூகத்திற்கும் எதிர்­கா­லத்தில் நடக்காமல் தடுக்கவும் இதைத்தான் நாம் சித்தரிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் ‘ஓட்டமாவடி’ ஆவணப் படத்தின் ஊடாக அமான் அஷ்ரப் மிகக் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். என்றாலும் அவரது இந்த முயற்சியின் விளைவாக திரைக்கு வந்திருக்கும் படம் ஆங்காங்கே சில விமர்சனங்களையும் விட்டுத்தான் சென்றிருக்கிறது எனலாம்.
இத்­தி­ரைப்­படம் விரைவில் நாட்டின் முன்­னணி திரை­­ய­ரங்­கு­களில் திரை­யி­டப்­ப­ட­வுள்­ளது. இது பற்­றிய விப­ரங்­களை விரைவில் அறி­விப்­ப­தாக பிளாக் காபி பிலிம்ஸ் அறி­வித்­துள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.