ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ்

0 104

ஐக்­கிய மக்கள் சக்­தியின் புதிய தவி­சா­ள­ராக இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரை நிய­மிக்க கட்சித் தலைமை தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் சுஜீவ சேன­சிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் தவி­சா­ள­ராக செயற்­பட்டு வந்த பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சே­காவை ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் உட்­பட கட்­சியின் சகல நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்தும் நீக்க அக்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

அவ­ரது அண்­மைய நட­வ­டிக்­கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்­னரே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறே, அடுத்த பொதுத் தேர்­தலில் அவ­ருக்கு ஐக்­கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி என்­ப­ன­வற்றில் வேட்பு மனு வழங்­கு­வ­தில்லை என்றும் இதற்கு முன்னர் தீர்­மானம் எடுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தோடு, நேற்று முன்­தினம்(16) எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நடந்த ஊடக சந்­திப்பின் போதும் ஜனா­தி­பதி தேர்தல் நட­வ­டிக்­கைகள் பிர­தானி சுஜீவ சேன­சிங்­கவும் இதனை உறு­திப்­ப­டுத்தித் தெரி­வித்­தி­ருந்தார்.

அவ்­வாறே, தன்னை ஐக்­கிய மக்கள் சக்தி கட்­சியில் இருந்து நீக்க வேண்டாம் என கூறி சரத் பொன்­சேகா கொழும்பு மாவட்ட நீதவான் நீதி­மன்றம் ஊடாக ஐக்­கிய மக்கள் சக்­திக்கு இடைக்­கால தடை விதிப்­பையும் பெற்றுக் கொண்­டுள்ளார். ஐக்­கிய மக்கள் சக்­தியின் நிர்­வா­கத்­துக்கு எதி­ராக, சரத் பொன்­சேகா தாக்கல் செய்­தி­ருந்த மனு­வொன்றின் அடிப்­ப­டையில் இந்த இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­காரம், வெற்­றி­ட­மாகும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தவி­சாளர் பத­விக்கு ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஸ்தாப­கர்­களில் ஒரு­வரும் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரை நிய­மிக்க சஜித் பிரே­ம­தாச உள்­ளிட்ட கட்சி உயர்­பீடம் தீர்­மா­னித்­துள்­ளது.

ஐக்­கிய மக்கள் சக்தி கட்­சியை ஸ்தாபித்­ததன் உண்­மை­யான நோக்­கங்­க­ளையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் சமூ­க­ம­யப்­படுத்து­வ­தற்கும், கட்­சியின் இரண்டு முக்­கிய கொள்­கை­க­ளான சமூக ஜன­நா­யக கொள்கை மற்றும் முற்­போக்கு தேசி­யவாத கொள்­கை­களை மக்கள் மயப்­ப­டுத்­து­வ­தற்கும், அர­சி­யலில் நம்­பிக்­கை­யி­ழந்து அர­சி­யலை விட்டு தூர­மாகி இருக்கும் அனைத்­தின இளையோர் சமூகம் அடங்­க­லாக புதிய வாக்­கா­ளர்­களை கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு ஆகர்­ஷிக்­கவும், சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் கட்­சியின் மீதான நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பவும் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் போன்­ற­வர்கள் சம­கால அர­சியல் பின்­ன­ணியில் மிகவும் பொருத்­த­மா­னவர் எனக் கரு­தியே அவ­ருக்கு இந்­நி­ய­ம­னத்தை வழங்க கட்­சியின் தலைவர் சஜித் பிரே­ம­தாச தீர்­மா­னித்­துள்ளார்.

அவ்­வாறே, இலங்­கையின் அரை­நூற்­றாண்டு காலத்­துக்கும் மேலான வர­லாற்றைக் கொண்ட இட­து­சாரி தரப்பின் முக்­கிய புள்­ளி­களும் சமூக ஜன­நா­யக கொள்­கையின் நிமித்தம் ஐக்­கிய மக்கள் சக்­தி­யோடு கைகோர்த்து வரும் இவ்­வே­ளையில், ஐக்­கிய மக்கள் சக்­தியை அதன் மாறாத கொள்­கை­க­ளோடு தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் சரி­யாக ஸ்தானப்­ப­டுத்தும் பிரச்­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கும் கொள்கை ரீதி­யி­லான அர­சி­யலை முன்­னெ­டுத்து வரும் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும் பொருத்­த­மா­னவர் என்­ப­த­னா­லேயே சஜித் பிரே­ம­தாச இத்­தீர்­மா­னத்­துக்கு வந்­துள்ளார்.

அவ்­வாறே, அவரை மீண்டும் களுத்­தறை மாவட்­டத்தின் தலை­வ­ரா­கவும், களுத்­துறை மாவட்ட தேர்தல் அர­சி­ய­லுக்கு வரு­மாறு கட்சி விடுத்த அழைப்பை இம்­தியாஸ் நிரா­க­ரித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் உரு­வாக்­கத்தைத் தொடர்ந்து கட்­சியின் முத­ல­வாது பதவி நிலை­க­ளுக்­கான நிய­ம­ணத்தின் போது தவி­சா­ள­ராக இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ரையே சஜித் பிரே­ம­தாச நிய­மித்­தி­ருந்­த­தோடு, கட்­சியின் அப்­போ­தைய மற்றும் எதிர்­கால நலன் கருதி அப்­போ­தைய தவி­சாளர் பத­வி­யையும் பொன்­சேகா அவர்­க­ளுக்கு விட்டுக் கொடுத்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அண்­மையில் ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் இணைந்து கொண்ட டலஸ் அல­கப்­பெ­ரும தலை­மை­யி­லான சுதந்­திர மக்கள் பேர­வை­யி­னரும் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரை களுத்துறை மாவட்­டத்தில் மீண்டும் தேர்தல் அர­சி­ய­லுக்கு பிர­வே­சிக்­கு­மாறு அழைப்பும் விடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம், பிரதான பதவி நிலைகளுக்கு கட்சியின் வருடாந்த அல்லது கட்சியின் விசேட சம்மேளனம் ஒன்றின் மூலமாகவே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த சம்மேளனத்தின் போது, தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.