முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பா­டு சுய­ நலனா? சமூக நல­னா­?

0 145

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான அறி­விப்­­பை வெளி­யி­டு­வ­தற்­கான அதி­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு நேற்று கிடைத்துள்­ளது. இம்­மாத இறு­தியில் தேர்தல் திகதி அறி­விக்­கப்­படும் என ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. சுமார் 10 பில்­லியன் ரூபா செலவில் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் இம்­முறை 1 கோடியே 70 இலட்சம் பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்ள­தா­கவும் திணைக்­களம் தெரி­வித்­துள்­ள­து.

தேர்­த­லை எப்­ப­டி­யா­வது ஒத்­தி­வைக்க வேண்டும் என சில சக்­திகள் முயற்­சித்து வரு­கின்­றன. இது தொடர்பில் சட்ட ரீதி­யா­ன உத்­த­ரவைப் பெற தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­குகள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளன. உரிய காலத்தில் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுப் பெற்று வரு­கி­ன்­ற­ன.

ஜனா­திபதித் தேர்­தலைப் பொறுத்­த­வரை ரணில்­, சஜித், அநுர எனும் முத்­­த­ரப்பு போட்டி நிலவும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அவ்­வப்­போது நடத்­தப்­பட்டு வரும் கருத்துக் கணிப்­பு­களில் அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்­கும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்­­கு­மி­டையில் போட்டி நில­வு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. எனினும் தனது செல்­வாக்கை மக்கள் மத்­தியில் அதிக­ரித்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களை ஜனா­தி­பதி ரணில் விக்­­ர­ம­சிங்க முன்­னெ­டுத்து வரு­கி­றார். மின் கட்­டணம் குறைப்பு, காணி உறுதி வழங்கல் என பல்­வேறு அறி­விப்­பு­களும் திட்­டங்­களும் தினமும் வெளி­வந்­த­முள்­ளன. பொது ஜன பெர­முன தரப்­பி­னரும் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கலாம் என்ற எதிர்­பா­ர்ப்பு மேலோங்­கி­யுள்­ள­து.

சிங்­கள மக்­களின் வாக்­குகள் மேற்­படி மூன்­று பிர­தான வேட்­பா­ளர்­களும் பிரிந்து செல்லும் நிலையில் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டுகள் எவ்­வாறு அமையும் என்­பதை இப்­போ­தைக்குக் கூற முடி­யா­துள்­ளது. தமிழ் பொது வேட்­பாளர் என்ற கதை­யாடல் தொடர்ந்து வரும் நிலையில் அது எந்­த­ளவு தூரம் வெற்­றி­ய­ளிக்கும் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ள­து.

இந்­நி­லை­யில்தான் முஸ்லிம் தரப்பு இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் எவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுக்கப் போகி­றது என்ற கேள்வி எல்லோர் மத்­தி­யிலும் எழுந்­துள்­ளது. பிர­தான முஸ்­லிம் கட்­சிகள் சஜித் அணியில் உள்ள போதிலும் அக் கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­டன் கைகோர்த்துச் செயற்­பட்டு வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி பல்­வேறு சலு­­கை­களை வழங்கி வரு­கிறார். தத்­த­மது மாவட்டங்­களில் அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­­கென பல மில்­லியன் கணக்­கான நிதி ஒதுக்­கீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது வழ­க்கம் போல சலு­கை­க­ளுக்கும் சுய­ந­லன்­க­ளுக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் அடி­ப­ணிய ஆரம்­பித்து விட்­டார்கள் என்­ப­தையே காண்­பிக்­­கி­ற­து.

முஸ்லிம் சமூகம் சம­கா­லத்தில் பல்­வேறு நெருக்­க­டி­­களைச் சந்­தித்து வரு­கி­றது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் கொவிட் ஜனாஸா எரிப்பு ஆகிய தலை­யாய பிரச்­சி­னைகள் உட்­பட முஸ்லிம் சமூ­க­த்­திற்கு நீதி கிடை­க்க வேண்­டிய பல்­வேறு விட­யங்கள் நம்முன் உள்­ளன. எனினும் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்சி­னை­களை முன்­னி­றுத்த பொது­வான கோரிக்­கை­களை எல்லா வேட்பா­ளர்­க­ளி­டமும் முன்­வைத்து அவர்­களின் நிலைப்­பா­டு­களை அறிந்து ஆத­ர­வ­ளிக்கும் சாத்­தி­யங்­க­ளைக் காண முடி­ய­வில்லை. முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும் தமது தனிப்­பட்ட அர­சியல் எதிர்­­காலம் மற்றும் கட்­சியின் நலன் ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்­தியே தீர்­மா­னங்­களை எடுக்­கி­றார்கள் என்­பதும் தெளி­வாகத் தெரி­கி­ற­து.

இந்­நிலையில் முஸ்லிம் கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­விக்க முன்­னர், முஸ்லிம் சிவில் சமூக நிறு­­வ­னங்கள் முன்­வந்து இக் கட்­சி­க­ளுக்­கு அழுத்­தங்­களை வழங்க முன்­வர வேண்டும். ஜனா­திபதித் தேர்­தலில் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­க­ளுக்­கு உத்­த­ர­வா­த­ம­ளிக்­கின்ற, கடந்த கால இழப்­பு­க­ளுக்கு பரி­காரம் வழங்­கக் கூடிய வேட்பாள­ருக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என பரிந்­து­ரைக்க வேண்டும். இன்­றேல் முஸ்லிம் கட்­சிகள் இம்­மு­­றை­யும் சமூ­கத்தின் வாக்­கு­களை அடகு வைத்து தமது நலன்­களை அடைந்து கொள்­கின்ற துர­திஷ்ட நிலையே ஏற்­படும். அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­லா­காது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.