எனது நியமனத்தில் பிரச்சினை இருப்பின் நீதிமன்றம் செல்லவும்

மஹிந்தானந்தவுக்கு சபையில் முஜிபுர் ரஹ்மான் பதில்

0 77

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் தான் நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் ஏதேனும் பிரச்­சினை இருந்தால் யாருக்கு வேண்­டு­மா­னாலும் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு செல்­லலாம். அத­னை­வி­டுத்து தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவை விமர்சிப்­பதில் அர்த்­த­மில்லை. சட்­டத்தின் பிர­கா­ரமே மீண்டும் பாரா­ளு­மன்றம் வந்தேன் என ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற மது­வரி கட்­டளைச் சட்­டத்தின் அறி­வித்­தல்கள் மற்றும் ஏற்­று­மதி இறக்­கு­மதி கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஆளும் கட்சி உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ள­ரான முஜிபுர் ரஹ்மான் தேசியப் பட்­டியல் ஊடாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இது தேர்தல் சட்­டத்­திற்கு முரண் என்­பது தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு தெரி­யாதா? தேர்தல் ஆணைக்­குழு ஒரு கட்­சிக்கு மாத்­திரம் சார்­பாக நடந்­து­கொள்ளக் கூடாது என்றார்.

இதன்­போது சபைக்குள் வந்த முஜிபுர் ரஹ்மான் அது தொடர்பில் ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,
உள்­ளூ­ராட்சி சபைக்­கான தேர்­தலை சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வே அறி­வித்­தது. அந்த தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கா­கவே நான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து வில­கினேன். ஆனால் ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்த பணம் கொடுக்­காததால் தேர்­தலை ஒத்திவைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நான் ஒன்­றரை வருடம் காத்­தி­ருந்தேன். ஆனால் போட்­டிக்கு இவர்கள் வர­வில்லை. முடி­யாத நிலையில் மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்தேன். அதனால் எனது நிய­ம­னத்தில் தவறு இருந்தால் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு செல்ல முடியும். தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் நான் நிய­மிக்­கப்­பட்­டுள்ளேன். உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­தாத நிலை­யி­லேயே நான் மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­வேண்­டி­யேற்­பட்­டது.

இந்­நி­லையில் எனது நிய­மனம் தொடர்பில் குறை கூறியும், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவை விமர்­சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். வேண்டு மென்றால் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நான் சட்டப்படியே நியமிக்கப் பட்டுள்ளேன். உள்ளூராட்சி தேர்தலை நடத்தியிருந்தால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.