அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்

0 133

நுஸ்கி முக்தார்

குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணைப் பிரி­வுக்கு பெண் ஒருவர் அண்­மையில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அது அறி­மு­க­மில்­லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழு­வொன்றில் இணைத்­து, டிக்டொக் வீடி­யோக்­க­ளுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடு­வதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரி­வித்­து, வங்கிக் கணக்­கொன்­றுக்கு பணம் வைப்­பி­லிட்ட சம்­பவம் தொடர்­பா­ன­தாகும். அதற்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணையை அடுத்து தந்­தையும் மக­னொ­ரு­வரும் கைது செய்­யப்­பட்டனர். அவர்­களும் குறித்த நிதி மோச­டியில் சிக்­கிக்­கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என்­பது மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது. அதன்­ப­டி, விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு 200க்கும் மேற்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களுள் இலங்­கை­யர்­களும் வெளி­நாட்­ட­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அத்­து­டன், இவர்கள் இந்த ஒன்லைன் நிதி மோச­டிக்­காக பயன்­ப­டுத்­திய சுமார் 400 கணி­னிகள் கைப்­பற்­றப்­பட்டு பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இந்த ஒன்லைன் நிதி மோசடி தொடர்பில் 4 குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இது அண்­மையில் இடம்­பெற்ற ஒரு சம்­ப­வ­மாகும். இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் கடந்த காலங்­களில் பதி­வா­கி­யுள்­ளன. காலத்­துக்கு காலம் பல்­வேறு வடி­வங்­களில் வரும் இவ்­வா­றான மோச­டிகள் ஊடாக ஒன்லைன் மோச­டிக்­கா­ரர்­க­ளிடம் பெரும்­பா­லா­ன­வர்கள் தம்மை அறி­யா­ம­லேயே சிக்­கிக்­கொள்­கின்­றனர். இதனால் பண இழப்பு மாத்­தி­ர­மல்­லாமல் பெரு­ம­ள­வா­ன­வர்கள் தமது சுய மரி­யா­தை­யையும் தம்மை அறி­யாத நபர்­க­ளிடம் அட­மானம் வைக்­கின்­றனர்.

பய­னர்­களின் பாது­காப்பை கருத்தில் கொண்­டு, தொழில்­நுட்ப உப­க­ர­ணங்­களில் உயர்ந்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும், அவற்றை பொடு­போக்­கா­கவும் கவ­னத்தில் எடுக்­கா­மலும் விடு­வ­தனால் அதி­க­மான தரவு மீறல்கள் இடம்­பெ­று­கின்­றன. “95 வீத­மான தரவு மீறல்கள் மனித தவ­று­களால் இடம்­பெ­று­கின்­றன. மிகவும் பாது­காப்­பான அமைப்­புக்கள் கூட சிறிய மற்றும் எளிய தவ­று­களால் பாதிக்­கப்­ப­டலாம்.” என இலங்கை கணினி அவ­ச­ர­கால தயார் நிலை குழு (SLCERT) சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

ஸ்மார்ட் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்­துக்­கொண்டால் அதில் பிர­தா­ன­மாக காணப்­படும் ‘ஸ்க்ரீன் லொக்’ பாது­காப்பு வச­தி­யை ஓர் ஆரம்­ப­கட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாகக் குறிப்­பி­டலாம். ஆனால் இந்த பாது­காப்பை கூட செயற்­ப­டுத்­தா­த­வர்கள் பலர் உள்­ளனர். ‘ஸ்க்ரீன் லொக்’ பாது­காப்பு நட­வ­டிக்­கையை செயற்­ப­டுத்­தாத உங்­க­ளது ஸ்மார்ட் கைய­டக்கத் தொலை­பே­சிகள் ஊடாக வங்கிப் பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­வ­தாக இருந்தால் அது மிகவும் எச்­ச­ரிக்­கை­யான ஒரு நிலை­மை­யாகும்.

மடிக்­க­ணினி பயன்­ப­டுத்­து­பவர்கள் தம்மை அறி­யா­மலேயே தமது மடிக்­க­ணி­னி­களில் உள்ள கம­ராக்கள் இயங்­கு­வது தொடர்­பான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யதை அடுத்­து, தேவைப்­படும் போது மாத்­திரம் கம­ராவை இயக்­கு­வ­தற்குத் தேவை­யான வச­திகள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. இது பய­னர்­களின் பாது­காப்பின் மீது கொண்ட அக்­க­றை­யி­லாகும்.

பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்கள் அல்­லது அரச நிறு­வ­னங்கள் போல் ஆள்­மா­றாட்டம் செய்து இல­வ­ச­மாக பரி­சுப்­பொ­ருட்கள் வழங்­கு­வ­தா­கவும் சீட்­டி­ழுப்பில் பங்­கு­பற்­று­மாறும் கூறி சமூக ஊட­கங்கள் ஊடாக தனி நபர்­களின் தனிப்­பட்ட தர­வு­களை ஒன்லைன் மோச­டிக்­கா­ரர்கள் பெற்­றுக்­கொள்­கின்­றனர். சந்­தே­கத்­துக்­கு­ரிய நபர்­க­ளி­ட­மி­ருந்து அல்­லது நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பரிசுப் பொதி­களை பெறு­வ­தற்­காக முக­வ­ரியை கேட்டு SMS அல்­லது ஈமெயில் மூலம் அனுப்­பப்­படும் இணைப்­புகளை அணு­கு­வதன் மூலம் உங்­க­ளுக்கு நிறைய இழப்­புகள் ஏற்­ப­டக்­கூடும் என இலங்கை கணினி அவ­ச­ர­கால தயார் நிலை குழு விழிப்­பு­ணர்வு செய்­கின்­றது.

கடந்த பொசன் போயா தின காலத்தில் ஒரு நிறு­வ­ன­மொன்­றினால் வழங்­கப்­படும் இல­வச 15GB டேட்டா தன்ஸல் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக வழங்­கப்­பட்­டுள்ள இணைப்­பை பயன்­ப­டுத்­து­மாறும் வட்ஸப் ஊடாக பகி­ரப்­பட்­டது. இவ்­வாறு வட்ஸப் மற்றும் ஏனைய சமூக ஊட­கங்கள் மூலம் பரவும் விட­யங்­களை ஆராய்ந்து பார்க்­காமல் அவற்றை ஏனை­ய­வர்­க­ளுக்கும் அனுப்­பு­வது பெரும்­பா­லா­ன­வர்­களின் வழக்­க­மாகும். இவ்­வாறு சர்­வ­தேச நிறு­வ­னங்­கள், வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்கள் மற்றும் தொண்டு நிறு­வனங்கள் போன்ற இன்­னோ­ரன்ன பிர­பல நிறு­வ­னங்­களின் பெயர்­களை பயன்­ப­டுத்தி இந்த மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன. சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளம் அல்­லது சமூக ஊடகப் பக்­கங்­களைப் பரி­சீ­லிப்­பதன் மூலம் இவ்­வாறு வரும் விட­யங்­களின் உண்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். அவை உண்­மை­யா­ன­வை­­யாக இருந்தால் அந்­தந்த உத்­தி­யோ­க­பூர்வ தளங்­க­ளிலும் இந்த விளம்­ப­ரங்கள் பதி­வி­டப்­பட்­டி­ருக்கும் சந்­தர்ப்பம் காணப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் அவற்றை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும்.

போலி வெப் தளங்­கள், சமூக ஊட­கங்­கள், SMS, வட்ஸப் போன்­றவை மூலம் ஒன்லைன் மோச­டிக்­கா­ரர்கள் எம்மை அணுக முயற்­சிக்­கின்ற அதே­வே­ளை, அவர்கள் அனுப்பும் இணைப்­பு­களை (links) க்ளிக் செய்து அவற்­றுக்கு பிர­வே­சிப்­பதன் மூலம் அந்த நபர்­களின் கணினி மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சியில் உள்ள தர­வு­களை திருடி பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வது போன்று நிதி மோச­டி­க­ளுக்கும் இவற்றைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

தபால் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தைப் போன்ற போலி இணையப்பக்கம் ஒன்றின் ஊடாக உள்­நு­ழைவு விப­ரங்கள் (Login Details), வங்கிக் அட்டை விப­ரங்கள் மற்றும் முக­வரி போன்ற தனிப்­பட்ட தர­வு­களை பெற்­றுக்­கொண்டு இடம்­பெற்ற மோசடிகளும் அண்­மையில் பதி­வா­கி­யது. தபால் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து அழைப்­பது போன்று தொலை­பேசி அழைப்­பெ­டுத்­து, பொதி­யொன்று வந்­துள்­ள­தா­கவும் அதனை விடு­விப்­ப­தற்கு ஒரு தொகைப் பணத்தை வைப்­பி­லிட்டு பொதியைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்தல் வழங்கி மிகவும் சூட்­சு­ம­மான முறையில் இந்த மோசடி நடை­பெ­று­கின்­றது. சரி­யான புரிதல் மற்றும் விழிப்­பு­ணர்வு இன்­மையால் இந்த மோச­டி­யிலும் பலர் சிக்கிக் ­கொண்­டனர். எனி­னும், மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு சட்­டத்­தி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள முடி­யாமல் போனா­லும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பாரிய இழப்­புக்கள் ஏற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு சட்ட நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டைந்து அவ்­வாறு இழந்த பணத்தை மீட்­ப­தற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். என­வே, இந்த பாதிப்­புகள் வருமுன் காத்­துக்­கொள்­வதே சிறந்­த­தாகும்.

இவ்­வா­றான சிக்­கல்­களில் அல்­லது ஒன்லைன் மோச­டி­களில் நீங்கள் அகப்­பட்­டி­ருந்தால் இலங்கை கணினி அவ­ச­ர­கால தயார் நிலை குழுவின் (SLCERT) 101 எனும் அவ­சர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ய முடியும். அத்துடன், இலவசமாக வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

எனவே, இந்த யுகத்தில் தொழில்­நுட்­பத்தை கைவிட்டு, இணை­யத்தை புறந்­தள்­ளி­விட்டு வாழ முடி­யாது. எமது அன்­றாட நட­வ­டிக்­கைகள் இணை­யத்­துடன் பின்னிப் பிணைந்­துள்ள இந்தத் தொழில்­நுட்­பத்­தினால் மிகவும் இல­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கல்வி, தொழில் மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் தொழில்­நுட்­பத்­துடன் இணைந்­துள்­ளன. அது­போன்ற இவற்­றி­னா­லான மோச­டி­களும் அதி­க­ரித்­துள்­ளன. அதற்­காக எமது பிள்­ளை­களை அவற்­றி­லி­ருந்து ஒதுக்­கி­விட முடி­யாது. எனவே, இணை­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மேற்­கொள்­ளப்­படும் மோச­டிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விழிப்­பு­ணர்­வுடன் இருக்கவேண்டியது பயனர்களாகிய எமது பொறுப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.