ஹஜ் யாத்­தி­­ரையை வெற்­றி­­க­ர­மா­க நிர்­வ­கிக்கும் சவூதி

0 213

எம்.பி.எம்.பைறூஸ்

வரு­டாந்தம் மில்­லி­யன் கணக்­கான மக்­களை உல­கெங்­கி­லு­மி­ருந்து ஒன்­று­தி­ரட்டி புனித ஹஜ் கட­மையை வெற்­றி­க­ர­மாக ஒழுங்­க­மைப்­பதில் சவூதி அரே­பியா காட்டும் அர்ப்­ப­ணிப்பு மெச்­சத்தக்­க­தாகும். சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகி­யோ­ரின் தலை­­மைத்­து­வம் மற்றும் வழி­காட்டலின் கீழ் இந்த உய­ரிய பணி வெற்­றி­க­ர­மாக முன்­­­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ற­து.

அந்த வகை­யில் 2024 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் யாத்­தி­ரையும் மிகவும் வெற்­றி­க­ர­மான முறையில் நிறை­வுக்கு வந்­துள்­ளது. சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி இவ்­வ­ரு­டம் 1,833,164 பேர் உல­கெங்­கு­மி­ரு­ந்து ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்­றுள்­ள­னர். இவர்­களில் 1,611,310 பேர் வெளி­நாட்­ட­வர்­க­ளாவர். 221,854 பேர் சவூ­தி­யி­லி­ருந்து யாத்­தி­­ரையில் பங்­கே­ற்­ற­வர்­க­ளா­வர். மொத்த யாத்­தி­ரி­கர்­களில் 52.27 வீத­மா­னோர் ஆண்­களும் 47.73 வீத­மானோர் பெண்­களுமா­வர். இவர்­களில் 1,546,345 பேர் விமானம் மூல­மா­கவும் 60,251 பேர் தரை வழி­யா­கவும் 4,714 பேர் கடல்­மார்க்­க­மா­கவும் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ள­னர்.

வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்­களில் 63.3 வீத­மானோர் ஆசிய நாடு­களைச் (அரபு நாடுகள் உள்­ள­டங்­க­வில்லை) சேர்ந்­தவர்கள். 22.3 வீத­மானோர் அரபு நாடு­க­ளையும் 11.3 வீத­மானோர் ஆபி­ரிக்க நாடு­க­ளையும் (அரபு நாடுகள் உள்­ள­டங்­க­வில்லை) 3.2 வீத­மா­னோர் ஐரோப்பா, வடக்கு மற்றும் தென் அமெ­ரிக்கா மற்றும் அவு­ஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளா­வர்.

இவர்­க­ளுக்­கான சேவை­களை வழங்­கு­வதில் சவூ­தி அர­சாங்கம் இம்­முறை நவீன தொழில்­நுட்­பத்­துடன் கூடிய வேலைத்­திட்­டங்­களை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்­க­மைய Nusuk Care சேவை­ஊ­டாக சேவை­களைப் பெற்றுக் கொண்ட யாத்­தி­ரி­கர்­களில் 87 வீத­மானோர் இம்­முறை ஹஜ் யாத்­திரை மிகவும் திருப்­தி­­யாக அமைந்­தி­ருந்­த­தாக அபிப்­பி­ராயம் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தா­கும். இது இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை வெற்­றி­க­ர­மாக அமைந்­துள்­ளது என்­ப­தற்­கான ஆதா­ர­மா­கும்.

ஹஜ் யாத்­­தி­ரையின் போது யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறந்த வசதி­களை வழங்க வேண்டும் என்­ப­தற்­காக சவூதி அரே­பியா வரு­டாந்தம் பல பில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்து வரு­கி­றது. இரு புனித தலங்­க­ளின் அபி­வி­­ருத்­திக்கு மாத்­தி­ர­மன்றி அரபா, முஸ்­த­லிபா மற்றும் மினா ஆகிய தலங்­க­ளிலும் மக்­க­ளுக்குத் தேவை­யான அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­து­­வ­தற்­காக பில்­லி­ய­ன் கணக்­கான ரியால்கள் செல­வி­டப்­ப­டு­கின்­றன. இந்த முத­லீ­டு­களே வரு­டாந்தம் ஹஜ் யாத்­தி­ரையின் முன்­னேற்­றத்­துக்கும் யாத்­தி­ரி­கர்­களின் திருப்­தி­க­ர­மாக ஆன்­மி­கப் பய­ணத்­திற்கும் பெரும் பங்­கு­­வ­கிக்­கின்­றன.

அண்­மைக்­கா­லமாக ஹஜ் பருவ காலத்தில் சவூ­தியின் வெப்ப நிலை உயர்ந்து வரு­வ­தால் பாரிய குளி­ரூட்­டிகள், காற்­றோட்ட மின்­வி­­சி­றிகள், பனித்­துளி விசி­றிகள் போன்ற வச­திகள் ஏற்­ப­டுத்­­தப்­பட்­டுள்­ளன. இதன்­கா­ர­ண­மாக யாத்­தி­ரி­கர்கள் இம்முறை கடும் வெயி­லுக்கு மத்­தி­யி­லும் செள­க­ரி­ய­மான முறையில் யாத்­தி­ரையை முன்­னெ­டு­க்க முடி­யு­மா­க­வி­ருந்­த­து.

இதற்கு மேல­தி­க­மாக யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்கும் வழி­­­நெ­டு­கிலும் குளி­­ரூட்­டப்­பட்ட நீர் மற்றும் குடி­பா­னங்­களை இல­வ­ச­மாக விநி­யோ­கிப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தொண்­டர்கள், பொலிசார், இரா­ணு­வத்­தினர் என பல்லா­யிரக் கணக்­கானோர் யாத்­தி­ரி­கர்­களை வெப்­பத்தின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்கு எடுத்த நட­வ­டிக்­கைகள் பல­ராலும் பாராட்­டப்­ப­டு­கின்­றன.

அது­மாத்­­தி­ர­மன்றி சுகா­தார வச­தி­களும் சிறப்­பான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. சகல யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் முற்­றிலும் இல­வ­ச­மாக சிகிச்­சைகள் வழங்­கப்­பட்­டன. இத­ய அறுவைச் சிகிச்­சைகள், டய­லைசிஸ் அவ­சர சிகிச்­சைகள் என்­­ப­னவும் இவற்றில் அடங்கும். 1.3 மில்­லியன் தடுப்பு சேவைகள் வழங்­கப்­பட்­டு­ள்­­­ளன. இவற்றில் நோய்­களை முன்­கூட்­டியே கண்­ட­றிதல், தடுப்­பூ­சிகள் வழங்­குதல் என்­ப­னவும் அடங்­கும். ஹஜ் யாத்­தி­­ரை காலப் பகு­தி­யில் சுகா­தார தொழி­லா­ளர்கள் 465,000 அவ­சர சுகா­தா­ர உத­வி­களை வழங்கி­­­யுள்­ளனர். இவ்வாறு சேவை பெற்­ற­வர்­க­ளில் 141,000 பேர் இம்­முறை உரி­ய அனு­ம­தி­யின்றி யாத்­தி­ரைக்கு வந்த­வர்­க­ளாவர். இவ்­வாறு துரி­த­மான சுகா­தார சேவையை வழங்­கி­யதன் மூலம் வெப்­பத்தின் கார­ண­மாக பர­வக் கூடிய தொற்று நோய்கள் யாத்­தி­ரி­க­ர்­களைப் பாதிக்­காமல் தடுக்க முடிந்­தமை குறிப்­பி­டத்­­தக்க அடைவு என சவூதி அரே­பிய சுகா­தார அமைச்சர் பஹத் அல் ஜலாஜெல் தெரி­வித்­துள்ளார்.

துர­திஷ்­ட­வ­ச­மா­க இவ்­வ­ருடம் சுமார் 1300 யாத்­தி­ரி­கர்கள் மர­ணத்தைத் தழுவ வேண்­டி­யேற்­பட்­ட­மையும் இங்கு குறிப்­பி­டப்­பட வேண்­டி­ய­­­தாகும். இவ்­வாறு மர­ணித்­த­வர்­களுள் அதி­க­மா­னோர் நாட்­பட்ட நோயா­ளர்­களும் வயோ­தி­பர்­க­ளு­மேயாவர். அதி­லும் குறிப்­பாக மர­ணித்­த­வர்­களில் 83 வீத­மானோர் ஹஜ் விசா அனு­ம­­தி­யின்றி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஹஜ் யாத்­தி­­ரைக்­காக அழைத்து வரப்­பட்­ட­வர்­க­ளாவர்.

சட்­ட­வி­ரோ­த­மாக வந்­ததன் கார­ண­மாக உரிய தங்­கு­மி­டங்­க­ளையோ வெப்­பத்­தி­­லி­ருந்து பாது­காப்புப் பெறு­வ­தற்­கான வச­தி­க­ளையோ இவர்­களால் அணுக முடி­யாது போன­மையே மர­ணத்­திற்­காக பிர­தான காரணம் எனக் கூறப்­ப­டு­கி­றது. இதற்­கான முழு­ப் பொறுப்­பையும் ஏற்க வேண்­டி­யது திருட்டு வழி­க­ளில் யாத்­தி­ரி­கர்­களை அழைத்­து வந்த ஹஜ் முக­வர்­க­ளோயாவர். அதி­லும் எகிப்தைச் சேர்ந்த முக­வர்­களே இந்த மோச­டியில் அதிகம் ஈடு­பட்­டுள்­ளனர்.

இம்­முறை ஹஜ்­ஜின்­போது மர­ணித்த 650 எகிப்­தி­யர்­களில் 638 பேர் பதிவு செய்­யப்­ப­டாத சட்­ட­வி­ரோ­த யாத்­தி­ரி­கர்கள் என்­பது இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­­தாகும். எகிப்து அரசாங்கம் இந்த முக­வர்­களை தண்­டிப்­ப­­தற்கான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. இது­வரை 16 முகவர் நிறு­வ­னங்களை எகிப்து அர­சாங்கம் தடை செய்­துள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரையின் போது எதிர்­நோக்கும் மிகப் பெரிய சவால் உரிய போக்­கு­வ­ரத்து வச­தி­களை வழங்­கு­வ­தாகும். இம்­முறை யாத்­தி­ரி­கர்­களுக்கு சேவை வழங்­கு­தற்­காக 27000 பஸ் வண்டிகள் சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. 3500 பஸ்கள் யாத்­தி­ரி­கர்­களை மக்கா ஹரம் ஷரீ­பி­லி­ருந்து மாத்­திரம் ஏற்றி இறக்கும் சேவையில் ஈடு­பட்­டன.

யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­தி­களை மேம்­ப­டுத்து­வ­திலும் சவூதி பாரிய முத­லீ­டு­களைச் செய்து வரு­கி­றது. 2030 ஆம் ஆண்­ட­ளவில் 150 மில்­லியன் விருந்­தி­னர்­களுக்­­கான தங்­கு­­மிடங்­களை உரு­வாக்கும் நோக்கில் புதிய ஹோட்டல் அறை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான முத­லீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளன.

அந்த வகையில் இரு புனித தலங்­களைத் தாங்கி நிற்கும் சவூதி அரே­பியா உலக முஸ்­லிம்­களின் ஐந்­தா­வது கட­மை­யா­கிய ஹஜ்­ யாத்­தி­ரை­யை பாது­காப்­பா­கவும் வச­தி­யா­கவும் நிர்­வ­கிப்­ப­த­ற்கு எடுத்து வரும் முயற்­சிகள் பாராட்­டத்­த­க்­க­வை­யாகும். உலக முடிவு வரை தொடரும் இந்தப் பணி தொடர்ந்தும் வெற்­றி­ய­ளிக்க பிரார்த்­திக்க வேண்­டி­யது ஒவ்வொரு முஸ்­லிமி­­­னதும் கட­மை­யாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.