முஸ்லிம்­க­ளை அர­வ­ணைத்­த­வர் சம்­பந்தன் ஐயா

0 249

எஸ்.என்.எம்.சுஹைல்

“ஈழத்­த­மி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் எல்­லோரும் சிங்­க­ள­வர்­க­ளுடன் சேர்ந்து, இலங்­கையர் என உணரும் அடிப்­ப­டையில் அனை­வரும் ஏற்றுக் கொள்ளும் முறையில், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும்” என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­து­வந்த பழம்­பெரும் தமிழ் அர­சியல் தலை­வ­ரான இரா.சம்­பந்தன் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தனது வாழ்க்கைப் பய­ணத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்துக் கொண்டார்.

இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்தன் 1933 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லையில் பிறந்தார். அவ­ரது தந்தை தந்தை ஏ. இரா­ஜ­வ­ரோ­தயம் கல்­லோயா திட்­டத்தில் பணி­யாற்­றி­யவர். சம்­பந்தன் யாழ்ப்­பாணம் சம்­பத்­த­ரி­சியார் கல்­லூரி, மொரட்­டுவை புனித செபஸ்­தியான் கல்­லூரி ஆகி­ய­வற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்­லூ­ரியில் சட்டம் பயின்று வழக்­க­றிஞர் ஆனார். லீலா­தேவி என்­பவரைத் திரு­மணம் புரிந்தார். இவர்­க­ளுக்கு சஞ்­சீவன், செந்­தூரன், கிரி­சாந்­தினி என மூன்று பிள்­ளைகள் உள்­ளனர்.

1977 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சார்பில் திரு­கோ­ண­மலைத் தொகு­தியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரானார் இரா.சம்­பந்தன். 1983 கல­வ­ரத்தில் உயி­ரி­ழந்த தமி­ழர்­க­ளுக்கு நீதி வேண்டி தொடர்ந்து 3 மாதங்­க­ளுக்கு மேல் சபை அமர்வை புறக்­க­ணித்­த­மையால் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இழந்த அவர் அடுத்து 1989 ஆம் தேர்­தலில் தோல்வி கண்டார்.

2001 இல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்கி அதன் தலைமை பொறுப்­பையும் ஏற்று வழி­ந­டாத்­திய அவர் அப்­போது முதல் இறு­தி­யாக நடந்த பொதுத் தேர்தல் வரை அனைத்து பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று தொடர்ச்­சி­யாக 23 வரு­டங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்­கத்­தின்­போது, பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யதால் அடுத்த பெரிய கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதிர்க்­கட்சி தலைமை பதவி சென்­றது. இத­னை­ய­டுத்து இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தெரி­வானார்.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் இரண்டு தட­வைகள் தமி­ழர்கள் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தெரி­வா­கி­யுள்­ளனர். 1977 இல் அப்­பா­பிள்ளை அமிர்­த­லிங்கம் எதிர்க்­கட்சித் தலை­வ­ரானார். அப்­போது அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய தமிழர் விடு­தலை கூட்­டணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சம்­பந்தன் இருந்தார். பின்னர் நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் சம்­பந்­தனே எதிர்க்­கட்சித் தலைமை பத­வியை வகித்­தது இரண்டாம் சந்­தர்ப்­ப­மாகும்.

இலங்கை வர­லாற்றில் தமி­ழர்­களின் மிக மோச­மான கால கட்­டங்­க­ளாக கரு­தப்­படும் 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை­யி­லான ஈழப்போர் இடம்­பெற்ற இக்­கட்­டான காலங்­களில் ஓர் அர­சி­யல்­வா­தி­யாக தன்னை தமிழ் மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணித்­த­வருள் இரா. சம்­பந்தன் பிர­தான நப­ராக கரு­தப்­ப­டு­கின்றார்.

ஈழப்­போ­ருக்கு முந்­தைய அர­சியல் பிர­வேசம், ஜூலை கல­வரம் உட்­பட 80 களில் இடம்­பெற்ற படு­மோ­ச­மான நிலை­மைகள், 2001 க்கு பின்­ன­ரான சமா­தான பேச்­சு­வார்த்தைக் காலம், 2006 க்கு பின்­ன­ரான இறுதி யுத்த காலம், யுத்த முடி­வுக்கு பின்­ன­ரான 14 வரு­டங்கள் போன்­ற­வற்றில் இரா. சம்­பந்­தனின் அர­சியல் வகி­பாகம் இலங்­கையன் என்ற அடை­யா­ளத்தைப் பிர­தி­ப­லிக்கும் வகையில் அமைந்­தி­ருந்­தது என்றால் அது மிகை­யாது.

அவ­ரது தெளி­வான சிந்­தனை, நிதா­ன­மான போக்கு, அனைத்து தரப்­பி­ன­ரையும் புரிந்­து­கொண்டு செயற்­படல், புத்­தி­சா­லித்­த­ன­மாக அர­சியல் காய்­ந­கர்த்­தலை முன்­னெ­டுத்தல், சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளையும் மலை­யகத் தமி­ழர்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்­பன மெச்சக் கூடி­ய­தாக இருந்­தது.

தமிழர் பிரச்­சி­னையை மிகவும் நிதா­ன­மாக கையாண்ட அவர், அவற்றை சர்­வ­தே­சம்­வரை கொண்டு சென்று இறு­தி­வரை சுமு­க­மான தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்­வதில் விடாப்­பி­டி­யாக நின்­றதை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.
இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்தில் முஸ்லிம் தரப்­பையும் இணைத்­துக்­கொண்டு செல்ல வேண்டும் என்ற அவ­ரது நிலைப்­பாடு முஸ்லிம் சமூகம் அவர் மீது நம்­பிக்கை வைப்­ப­தற்கு பிர­தான கார­ண­மாக இருந்­தது. அத்­துடன், தமிழர் அர­சியல் தரப்பில் அனு­ப­வமும் நிதானப் போக்கும் அவர் மீதான நம்­பிக்­கையை மேலும் அதி­க­ரிக்கச் செய்­தி­ருந்­தது.

வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்ளும் நிலைப்­பாட்­டிலும் அவர் இருந்­தி­ருக்­கிறார். அத்­தோடு, இலங்­கையில் தமிழ் மொழியை பேசும் அனை­வரும் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­வதன் மூலமே அதி­காரப் பகிர்வு உட்­பட அனைத்து உரி­மை­க­ளையும் பெற­மு­டியும் என்­பதை அவர் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­துள்ளார்.

அதி­காரப் பகிர்வை வென்­றெ­டுப்­ப­தற்கு தமி­ழர்கள் மத்­தியில் எதிர்­பார்க்­கப்­படும் ஒற்­று­மையும் ஒரு­மித்த கருத்தும் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் இருக்க வேண்டும். புதிய அர­சியல் யாப்பின் மூலம் கிடைக்கும் அதி­காரப் பகிர்வில் வடக்­கு-­ கி­ழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும் என்­பதே தமது உறு­தி­யான நிலைப்­பாடு எனவும் அவர் கூறி­வந்தார்.

தமிழ், முஸ்லிம் மக்­களின் ஒற்­றுமை மிகவும் முக்­கி­ய­மா­னது என்­ப­தனால் அர­சியல் கோரிக்­கை­களை முன்­வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரி­சனை செலுத்­து­வ­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார். மேலும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்­க­ளுக்கு சம உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் தாம் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

‘ஈழத்­த­மி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் எல்­லோரும் சிங்­க­ள­வர்­க­ளுடன் சேர்ந்து, இலங்­கையர் என உணரும் அடிப்­ப­டையில் அனை­வரும் ஏற்றுக் கொள்ளும் முறையில்,தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். தீர்வை நோக்­கிய பய­ணத்தில் தமிழ் பேசும் மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சிகள் மத்­தியில் ஒற்­றுமை வேண்டும். அந்த ஒற்­றுமை முயற்­சியை, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, ஒரு­போதும் குழப்­பாது. நாங்­களும் கலந்து பேசத்தான் வேண்டும். கலந்து பங்­க­ளித்து ஒற்­று­மையை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும்” என்ற நிலைப்­பாட்­டி­லேயே இரா. சம்­பந்தன் இருந்தார்.
இலங்­கையர் என்ற உணர்­வுடன் அனைத்து தரப்­பி­னரும் ஒற்­று­மை­யா­கவும் உரி­மை­க­ளு­டனும் வாழ வேண்டும் என்ற எண்­ணத்­தோடு செயற்­பட்­டு­வந்த இரா. சம்­பந்தன் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜூன் 30 ஆம் திகதி இரவு கொழும்பில் தனியார் வைத்­தி­ய­சா­லையில் கால­மானார்.

அண்மைக் கால­மாக வயது மூப்பு கார­ண­மாக உடல் நலக் குறைவு ஏற்­பட்­டி­ருந்­த­மையால் தீவிர அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டாமல் இருந்­தாலும் கட்­சியை உரிய முறையில் வழி­ந­டத்தி தமி­ழர்­களின் உரி­மைகள் விட­யத்­திலும் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்­திலும் கரி­ச­னை­யுடன் செயற்­பட்டு வந்தார். அவரின், இழப்­பா­னது தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வாறு ஒரு பேரி­ழப்­பாக அமைந்­தி­ருக்­கி­றதோ, அதேபோன்று வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களுக்கும் பெரும் சோக செய்தியாகவே அமைந்திருந்தது.

ஏனெனில், தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமை விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வந்த சம்பந்தன், சிறு முரண்பாடுகளும் விரிசல்களும் ஏற்படும்போது மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு பேரிடர்கள் ஏற்படுவதை தடுப்பதிலும் கவனமாக இருந்துள்ளார்.

எனவே, இனிவரும் காலங்களில் தமிழர்களின் அரசியல் போக்கு எவ்வாறு அமையும், அது முஸ்லிம் தரப்புக்கு எந்தவகையான தாக்கத்தை செலுத்தும் என்றெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு சம்பந்தன் ஐயாவின் மரணம் ஒரு அர­சியல் வெற்­றி­டத்தைத் தோற்­று­வித்­துள்­ளது என­லாம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.