விடுமுறை கால விபத்துகளில் 548 பேர் வைத்தியசாலையில்

0 591

நத்தார் விடுமுறை காலத்தில் ஏற்பட்ட விபத்துக்களினால் 548 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 48 மணிநேரத்திற்குள் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 13 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிக்கின்றது.

இதேவேளை, வாகன விபத்துக்களினால் 163 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.