திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி உயர்தர பெறுபேறு இடைநிறுத்தம்

தொடரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் வெளிப்பாடு

0 205

ஐ.சுபைதர்

திரு­கோ­ண­மலை ஸாஹிராக் கல்­லூரி மாண­வி­க­ளது க.பொ.த (உ.த) பெறு­பேறு இடை­நி­றுத்­த­மா­னது திரு­கோ­ண­ம­லையில் நிலவிவரும் முஸ்லிம் விரோதச் செயற்­பா­டு­களின் வெளிப்­பா­டாகும்.

திரு­கோ­ண­மலை நகரம் முஸ்­லிம்­களும் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வரும் நக­ர­மாகும். இந்த மக்கள் ஏனைய சமு­கத்­தி­ன­ருக்கு எவ்­வித இடை­யூ­று­மின்றி சமா­தா­ன­மாக வாழ்ந்து வரு­கின்­றமை வர­லாற்று உண்­மை­யாகும்.

இந்­நி­லையில் சிலரால் இந்­ந­க­ரத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான விரோதப்போக்கு தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை முஸ்லிம் சமூக ஆர்­வ­லர்­களால் அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவற்றின் வெளிப்­பா­டு­களில் ஒன்று தான் திரு­கோ­ண­மலை ஸாஹிராக் கல்­லூரி மாண­வி­க­ளது உயர்­தரப் பெறு­பேறு இடை­நி­றுத்­த­மாகும்.

பரீட்சை மண்­ட­பத்தில் தமது காது­களை காட்­டாது பரீட்சை எழு­தி­னார்கள் என்­பது தான் இந்த மாண­வி­க­ளது பெறு­பேறு இடை­நி­றுத்­தத்­திற்கு சொல்­லப்­படும் கார­ண­மாகும்.

பரீட்­சார்த்தி ஒருவர் தமது ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும். அதற்­காக தமது காது­களைக் காட்ட வேண்டும் என்­பது பரீட்சை விதி­களுள் ஒன்­றாகும். இதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

ஒவ்­வொரு பரீட்சை மண்­டத்­திற்கும் மேற்­பார்­வை­யாளர், உதவி மேற்­பார்­வை­யாளர், நோக்­கு­னர்கள் எனப்­பலர் நிய­மிக்­கப்­ப­டு­கின்­றனர். பரீட்­சார்த்­தி­க­ளது ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது இவர்­க­ளது பணி­யாகும். எவ­ரேனும் ஒரு பரீட்­சார்த்தி பரீட்சை விதி­க­ளுக்­கேற்ப தனது ஆள­டை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த தவ­று­வா­ராயின் அவர் பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­படக் கூடாது என்­பது தான் பரீட்சை விதி.

எனினும் திரு­கோ­ண­மலை ஸாஹிராக் கல்­லூரி மாண­விகள் எல்லாப் பாடங்­களும் எவ்­வித பிரச்­சி­னையும் இல்­லாமல் எழுத பரீட்சைக் கடமை செய்தோர் அனு­ம­தித்­துள்­ளனர். இவ்­வாறு செய்த பரீட்சை மண்­டப மேற்­பார்­வை­யாளர் பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கு பிழை­யான அறிக்­கையை சமர்ப்­பித்­துள்ளார். இதுவே பெறு­பேறு இடை­நி­றுத்­தத்­திற்கு கார­ண­மாகும்.

உண்­மையில் பரீட்சை மேற்­பார்­வை­யாளர் பரீட்சை மண்­ட­பத்தில் சீர் செய்­தி­ருக்க வேண்­டிய விடயம் இது. ஆள­டை­யா­ளத்தை காட்ட பரீட்­சார்த்­திகள் மறுத்­தி­ருப்பின் அவர்­களை பரீட்சை எழுத அனு­ம­தித்­தி­ருக்கக் கூடாது.
இந்­நி­லையில் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளரின் இந்த விடயம் தொடர்­பான பிழை­யான அறிக்கை முஸ்லிம் விரோதப்போக்கின் ஒரு செயற்­பாடு என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி வெளிப்­ப­டு­கின்­றது. திரு­கோ­ண­மலை ஸாஹிராக் கல்­லூ­ரியின் வளர்ச்­சியைப் பொறுக்க முடி­யாத காழ்ப்­பு­ணர்ச்­சியின் வெளிப்­பாடு இது.

திரு­கோ­ண­மலை நகரில் இது போன்ற முஸ்லிம் விரோதச் செயற்­பா­டுகள் தொடர்ந்து வரு­கின்­றன. எனினும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இதுபோன்ற விட­யங்­களை அவ­தா­னித்து தேவை­யான முன்­ந­ட­வ­டிக்­கைகள் எடுக்கத் தவ­று­கின்­றனர். சம்­பவம் நடந்த பின் பேசு­வோ­ராக அவர்கள் மாறி­யுள்­ளனர்.
திரு­கோ­ண­மலை சண்­முகா மகளிர் கல்­லூரி அபாயா பிரச்­சினை வேண்­டு­மென்று முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒரு பிரச்­சி­னை­யாகும். நீதி­மன்றம் சென்று இதற்­கான தீர்வு பெற வேண்­டிய நிர்ப்­பந்தம் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு ஏற்­பட்­டது.

திரு­கோ­ண­மலை வல­யக்­கல்விப் பணிப்­பா­ள­ராக பணி­யாற்­றி­ய­வரை அவ­ச­ர­மாக இட­மாற்ற வேண்­டிய தேவை ஏற்­பட்ட போது இலங்கை கல்வி நிர்­வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த திரு­மதி இசட்.எம்.எம்.நளீம் பதில் திரு­கோ­ண­மலை வலயக் கல்விப் பணிப்­பா­ள­ராக நிய­மிக்கப் பட்டார். இவர் முஸ்லிம் என்ற ஒரே கார­ணத்­திற்­காக இவ­ரது நிய­ம­னத்­திற்­கெ­தி­ராக ஆட்­சே­பனை தெரி­விக்­கப்­பட்டு இவ­ரது நிய­மனம் இரத்துச் செய்­யப்­பட்­டது.

அதே­போல இலங்கை நிர்­வாக சேவையைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்னர் திரு­கோ­ண­மலை நக­ர­சபை செய­லா­ள­ராகச் செயற்­பட்டு வந்தார். முஸ்லிம் ஒருவர் திரு­கோ­ண­மலை நக­ர­சபை செய­லா­ள­ராக இருக்கக் கூடாது என்ற கோசம் எழுப்­பப்­பட்டு அவரும் இட­மாற்­றப்­பட்டார்.

இந்தச் சம்­ப­வங்­களை அவ­தா­னிக்­கின்ற போது திரு­கோ­ண­மலை நகரில் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­வதை உறு­திப்­ப­டுத்த முடி­கின்­றது. இதனால் முஸ்லிம் சமூகம் விழித்தெழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்ச் சமுக ஆர்வலர்கள் இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு இனரீதியான இந்த முஸ்லிம் விரோதப் போக்கை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்ந்து வருமாக இருந்தால் தமிழ் – முஸ்லிம் விரிசல் என்பது சீர்செய்ய முடியாத ஒரு பிரச்சினையாக மாறும். எதிர்பர்க்கப்படுகின்ற இனப்பிரச்சினைத் தீர்வு என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.