காஸாவில் ஐந்து பேரில் ஒருவர் உணவின்றி நாட்களை கழிக்கின்றனர்

ஐநா அறிக்கையில் தெரிவிப்பு

0 231

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவில் உள்ள 495,000 க்கும் அதி­க­மான மக்­களுள் ஐந்தில் ஒரு­வர் தற்­போது கடு­மை­யான உணவுப் பாது­காப்­பின்­மையின் பேர­ழிவு நிலை­களை எதிர்­கொள்­கின்­றனர். எதிர்­வரும் நாட்­களில் வெளி­வ­ர­வுள்ள ஐ.நா அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வாக காஸா மக்கள் கடு­மை­யான உணவு பற்­றாக்­குறை, பட்­டினி மற்றும் சோர்வு ஆகி­ய­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒருங்­கி­ணைந்த உணவுப் பாது­காப்பு கட்ட வகைப்­ப­டுத்­தலில் காஸாவில் அண்மைக்கால நிலைமை தொடர்பான ‘விசேட ஆய்வு’ செவ்­வா­யன்று வெளி­யி­டப்­படும் என தி கார்­டியன் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அண்­மைக்­கால வன்­மு­றையைத் தொடர்ந்து பிர­தேசம் முழு­வதும் பஞ்சம் ஏற்­டக்­கூ­டிய அபாயம் அதி­க­மாக காணப்­ப­டு­வதால், காஸாவின் அரை­வா­சிக்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் உணவு வாங்­கு­வ­தற்­காக தமது உடை­களை விற்­கவோ அல்­லது மாற்­றவோ வேண்­டி­யி­ருந்­தது என்­ப­தையும் ஐ.நா அறிக்கை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளது.

காஸா­வுக்குள் நுழை­வ­தற்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் விதித்­துள்­ளனர். மேலும் நட­மாட்­டத்­திற்கும் இரா­ணுவ அனு­மதி தேவை. இடி­பா­டு­களால் வீதிகள் சேத­ம­டைந்­துள்­ளன. எரி­பொ­ரு­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வு­கின்­றது, மின்­சாரம் மற்றும் தகவல் தொடர்பு வலை­ய­மைப்­புக்கள் சரி­யாகச் செயல்­ப­ட­வில்லை.

யுத்தம் ஆரம்­பித்­த­போது இஸ்ரேல் காஸா மீது முழு­மை­யா­ன­தொரு முற்­று­கையை விதித்­தது. அது அமெ­ரிக்க அழுத்­தத்தின் கீழ் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்­டது. யுத்தம் கார­ண­மாக காஸாவில் உணவு உற்­பத்தி செய்யும் திறன் கணி­ச­மாகக் குறைந்­துள்­ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்­களில் வடக்கு காஸா­விற்­கான உணவு விநி­யோகம் மற்றும் ஊட்­டச்­சத்து சேவைகள் கணி­ச­மாக அதி­க­ரித்­தன. இது பஞ்சம் ஏற்­டு­வதைத் தடுத்­த­தோடு பிராந்­தி­யத்தின் தெற்குப் பிர­தே­சத்தில் நிலை­மை­களை மேம்­ப­டுத்­தி­யது என ஐ.பீ.சீ குறிப்­பிட்­டுள்­ளது. எனினும், மோதல்கள் அதி­க­ரித்­த­மை­யினால் நிலைமை மீண்டும் மோச­ம­டைந்­துள்­ளது. மேலும் மோதல்கள் தொடரும் வரை, மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்ப­ட்ட அளவில் காணப்­படும் வரை காஸா பகு­தியில் பஞ்சம் ஏற்­ப­டு­வ­தற்­கான ஆபத்து இருக்கும் என தி கார்­டி­ய­னுக்கு கிடைக்கப் பெற்ற வரைவு அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரை­வா­சிக்கும் மேற்­பட்ட வீடு­களில் அடிக்­கடி உணவு முடி­வ­டைந்து விடு­வ­தா­கவும், 20 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மானோர் இரவும் பகலும் சாப்­பி­டா­ம­லேயே இருப்­ப­தா­கவும் தி கார்­டியன் தெரி­வித்­துள்­ளது. அண்­மைய நிலை­மைகள் எதிர்­ம­றை­யா­னவை என்­ப­தோடு ஸ்திர­மற்­ற­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இந்த நிலைமை தொடர்ந்தால், ஏப்­ரலில் காணப்­பட்ட மேம்­பா­டுகள் விரைவில் தலை­கீ­ழாக மாறக்­கூடும்.

நடந்து வரும் யுத்தம், இஸ்­ரே­லிய கட்­டுப்­பா­டுகள், இரா­ணு­வத்­து­ட­னான ஒருங்­கி­ணைப்பில் காணப்­படும் சிக்­கல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைவு போன்ற கார­ணங்­களால் கெரெம் ஷாலோம் எல்­லையை கட­வை­­யினை சென்­ற­டை­வ­தி­லுள்ள சிர­மங்­களை ஐ.நா முக­வ­ர­கங்­களும் உதவி அமைப்­பு­களும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

ஐ.பீ.சீ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பஞ்ச நிலை­யினை அறி­விக்­க­வில்லை. – இதற்கு கடு­மை­யான நிபந்­த­னைகள் தேவை – எனினும் காஸாவின் நிலைமை மோச­மாக உள்­ளது. பஞ்ச நிலை­மையை ஒப்­பிடும் போது காஸாவின் மக்கள் தொகையில் 22 சத­வீ­தத்தை பாதிக்கும் அள­விற்கு அங்கு பட்­டினி நிலை 5 ஆம் கட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது.

முறை­யா­ன­தொரு பஞ்­ச­நிலை பிர­க­ட­னத்­திற்­கான நிபந்­த­னை­க­ளா­வன, 20 சத­வீத குடும்­பங்­களில் உணவு பற்­றாக்­குறை இருக்க வேண்டும், 30 சத­வீத குழந்­தைகள் கடு­மை­யான ஊட்­டச்­சத்து குறை­பாட்டால் பாதிக்­கப்­பட வேண்டும், மேலும் 10,000 பேருக்கு குறைந்­தது இரண்டு பெரி­ய­வர்கள் அல்­லது நான்கு குழந்­தைகள் ஒவ்­வொரு நாளும் இறக்க வேண்டும்.

‘காஸா­வுக்குள் மனி­தா­பி­மான உத­விகள் செல்­வ­தற்கு இஸ்ரேல் விதிக்கும் கட்­டுப்­பா­டுகள் வேண்­டு­மென்றே பட்­டினி நிலை­யினை ஏற்­ப­டுத்தும் யுத்தக் குற்­ற­மாக இருக்­கலாம்’ என மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டர்க் தெரி­வித்­துள்ளார். ‘ஜூலை மாதத்தின் நடுப்­ப­கு­திக்குள் 1 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் இறந்து போகலாம் அல்­லது பட்­டி­னியால் வாடக்­கூடும்’ என உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் விவ­சாய அமைப்பு ஆகி­யவை எச்­ச­ரித்­துள்­ளன.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வெளி­யு­றவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் மற்றும் இடர் முகா­மைத்­து­வத்­திற்­கான ஐரோப்­பிய ஆணை­யாளர் ஜேன்ஸ் லெனார்சிக் ஆகியோர் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில்: ‘காஸாவில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்­றொரு மோச­மான நிலை­யினை எட்­டி­யுள்­ளது. காஸா­விற்குள் காத்­தி­ர­மான எந்­த­வொரு மனி­தா­பி­மான உத­வியும் சென்­ற­டை­வது கிட்­டத்­தட்ட சாத்­தி­ய­மற்­ற­தா­கி­விட்­டது. சிவில் சமூகக் கட்­ட­மைப்­பா­னது சீர்­கு­லைந்து கொண்­டி­ருக்­கி­றது’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காஸா பற்­றிய ஐ.பீ.சீ இன் அறிக்­கையை வெளி­யி­டு­வ­தற்கு முன்­ன­தாக, மெர்சி கார்ப்ஸின் உல­க­ளா­விய கொள்கை மற்றும் ஆத­ர­வுக்­கான பிரதித் தலைவர் கேட் பிலிப்ஸ்-­ப­ராஸ்ஸோ தெரி­வித்தார் ‘மக்கள் மனி­தா­பி­மா­ன­மற்ற நிலை­மை­களை சகித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள், புற்­களை கொதிக்க வைத்து உண்­பது, விலங்­கு­களின் தீவ­னத்தை உண்­பது போன்ற அவ­நம்­பிக்­கை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர். தமது பிள்ளை­களின் பசியைப் போக்­கவும் அவர்­களை உயி­ருடன் வைத்திருப்பதற்காகவும் பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக வும் தமது ஆடைகளை விற்னை செய்யும் நிலையும் அங்கு காணப்படுகின்றது.

‘மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறது, மேலும் பஞ்சம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் காஸாவில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவி குறைவாக உள்ளது. சர்வதேச சமூகம் ஒரு யுத்த நிறுத்தத்தை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நீண்டகால மனிதாபிமான உதவிகளை உறுதிப்படுத்தவும் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும். இனியும் இந்த கஷ்டங்களை மக்களால் தாங்க முடியாது.’ எனவும் அக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.