‘பசில் ராஜபக்ச மீது எனக்கு அபிமானமுண்டு’ ஜனாதிபதியை கடுமையாக சாடினார் ஹக்கீம்

0 135

(எம்.எஸ்.எம். நூர்தீன்)
பசில் ராஜ­பக்ச எனது விருப்­பத்­துக்­கு­ரி­யவர் அவர் மீது எனக்கு அபி­மானம் இருக்­கி­றது என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் இடம்­பெற்ற மு.கா. பேராளர் மாநாட்டில் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், “உங்­க­ளுக்கு நாங்கள் ஒரு­முறை தேவை­யில்லை என்றால் எங்­க­ளுக்கு நீங்கள் 100 முறை தேவை­யில்லை” என்று பசில் ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யிடம் அடித்து கூறி இருக்­கிறார். கட்­சியை எவ்­வாறு கையாள வேண்டும் என்­பதை ஜனா­தி­பதி தெரிந்­தி­ருக்க வேண்டும் தலை­வர்­களை துச்­ச­மாக மதித்தால் தலை­வர்­களும் ஜனா­தி­ப­தியை துச்­ச­மா­கவே மதிப்­பார்கள் என்றும் ஹக்கீம் ஜனா­தி­ப­தியை சாடி­யுள்ளார். .

தலை­வர்கள் சோரம் போனால் கட்­சிகள் அழிந்து போகும் என தெரி­வித்­துள்ள, அற்ப சொற்­பங்­க­ளுக்­காக அடிப்­ப­டை­களை மறக்க முடி­யாது என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், 31 ஆவது பேராளர் மாநாடு கடந்த 22 ஆம் திகதி காத்­தான்­குடி ஹிஸ்­புல்லாஹ் கலா­சார மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது கட்­சியின் தலை­வ­ராக மீண்டும் தெரி­வு­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் அங்கு ஆற்­றிய உரை­யின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,
நேற்­றைய (21 திகதி) ஆங்­கில பத்­தி­ரி­கையைப் பார்த்தேன். அதில் கூறப்­ப­டு­பவர் எனது விருப்­பத்­துக்கு உரி­யவர் அல்லர்.என்­றாலும், சொல்­லி­யி­ருக்­கின்ற விட­யத்தைப் பார்த்­ததும் அவர் மீது எனக்கு ஓர் அபி­மானம் வந்­தது. “இவர் மேல் அபி­மா­னமா?”என்று நீங்கள் கொஞ்சம் முகம் சுழிக்­கலாம். அவர் வேறு யாரும் அல்லர். ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன ஸ்தாபகர் பசில் ராஜ­பக்ஷ. அவர் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க முன்­னி­லையில் துணிச்­ச­லோடு சொன்ன விடயம் தன்­னு­டைய கட்சிகாரர்­களில் ஒரு சிலர் தாங்­க­ளா­கவே ஒரு முடிவை எடுத்து அதைதான் கட்சி செய்ய வேண்டும் என்று சொன்­ன­வர்­க­ளுக்கு அவர் சொன்ன கருத்­துதான் தலைப்புச் செய்­தி­யாக வந்­தி­ருக்­கின்­றது. கட்சி தலை­வர்கள் சோரம் போக முடி­யாது. எனக்கு ஒரு சந்­தர்ப்பம் கிடைத்தால் அதைதான் நானும் சொல்­லுவேன். தலை­வர்கள் சோரம் போனால் கட்­சிகள் அழிந்து போகும். எனவே இந்த தலைமை அதி­கா­ரத்­துக்கு அடி பணி­கின்ற தலை­மை­யாக இருக்க மாட்­டாது என்ற விட­யத்தை மிக தெளி­வாக நான் சொல்லி வைக்க விரும்­பு­கின்றேன். அச்­சு­றுத்தி அடி பணிய வைக்க முடி­யாது, ஆர்ப்­ப­ரித்து அடி பணிய வைக்க முடி­யாது. ஆட்­களைப் பறித்து வைத்து கொண்டு அடிபணிய வைக்க முடி­யாது. அது நடக்­காது என்று பசில் ராஜ­பக்ஷ சொல்­கிறார். என­வேதான் பசில் ராஜ­பக்ஷ மேல் எனக்கு கொஞ்சம் அபி­மானம் வந்­தது.

கட்­சியை எவ்­வாறு கையாள வேண்டும் என்று நாட்டு தலை­வர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டு தலைவர் கட்சி தலை­வர்­களை துச்­ச­மாக மதிக்­கின்ற போது, தலை­வர்­களும் அவர்­களை துச்­ச­மா­கதான் மதிப்­பார்கள். இதுதான் முக்­கி­ய­மான விடயம்.

எனவே இந்த விவ­காரம் சம்­பந்­த­மா­கத்தான் இன்று எங்­க­ளுக்குள் நிறைய கேள்­வி­களும் பிரச்­சி­னை­களும். ஆனால் நாங்கள் இவற்­றை­யெல்லாம் தூக்கி வைத்து விட்டோம்.

இனி நாங்கள் எதையும் பேசு­வது கிடை­யாது. எல்­லோரும் ஓர் உறு­தி­யான சத்­தியப் பிர­மாணம் எடுத்­தி­ருக்­கின்றோம். தலை­மை­யோடும், கட்­சி­யோடும் பிணக்­கில்லாமல் பய­ணிப்­பது என்­கின்ற தீர்­மானம், அந்த தீர்­மா­னத்தை உறு­தி­மொ­ழி­யாக எழுத்தில் தந்­தி­ருக்­கின்றோம். பேரா­ளர்­க­ளுக்கு முன்னால் சத்­திய வாக்­காக “பைஅத் “ஆக செய்­தி­ருக்­கின்றோம். அதை நாங்கள் செயல் படுத்­து­வதன் மூல­மா­கத்தான் இந்த இயக்­கத்தை வீரி­ய­மாக வாழ வைக்க முடியும். இது குறு­கிய அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பாற்பட்ட விடயம்.

பிரதித் தலை­வர்கள் தொகையை இன்று நாங்கள் ஏழாக கூட்டி யிருக்­கின்றோம். எல்லா அர­சியல் அந்­தஸ்தில் இருக்­கின்ற முக்­கிய பிர­தி­நி­தி­களை உள்­வாங்கி இந்த கட்­சியை -இதற்கு எதி­ராக இருக்­கின்ற களங்­கங்­க­ளையும், விமர்­ச­னங்­க­ளையும் புறந்­தள்ளி முன்­கொண்டு செல்­வ­தற்­காக எல்­லோரும் தலைவர் உட்­பட உறுதி பூணு­கின்ற ஒரு பேராளர் மாநா­டாக இந்த மாநாடு மாறு­கின்­றது செய்­தியை மக்­க­ளுக்கு நாங்கள் சொல்­லு­கின்றோம்.

அந்த கட்­டங்­களில் இந்த மண் பட்ட அவஸ்த்தை விடவும் பாரிய அவஸ்­தையை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி காத்­தான்­குடி அனு­ப­வித்­தது. யாரும் எதிர்­பார்­த்தி­ராத ஒரு பழிச் சுமையை இந்த மண் மீது சுமத்­தி­னார்கள். அந்த பழியின் பின்­ன­ணியில் மிகப் பெரிய சதி இருந்­தது என்ற விடயம் இப்­போது படிப்­ப­டி­யாக அம்­ப­லத்­துக்கு வந்திருக்­கின்­றது. ஒரு கூலிப்­ப­டையை வைத்து இந்த புண்­ணிய பூமிக்கு களங்கம் விழை­விக்­கின்ற அந்த மாபா­தக செய­லுக்கு யார் பின்­ன­ணியில் இருந்­தார்கள் என்ற விபரம் பொது­வெ­ளியில் கதைக்­கப்­ப­டு­கின்­றது. முன்னாள் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கும் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கும், முன்னாள் போரா­ளி­க­ளுக்கும் விரல் நீட்­டு­கின்­றார்கள். இன்னும் பல இடங்­க­ளுக்கு விரல் நீட்­டப்­ப­டு­கின்­றது. உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். இந்த படு­பா­தகச் செயலை செய்து தொடர்ந்­தேர்ச்­சி­யாக பாதிக்­கப்­பட்ட இந்த மண்­ணுக்கு மேலும் அழி­யாத ஒரு களங்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற அந்த விவ­கா­ரத்­துக்கு பின்னால் இருந்து செய்த சதி என்ன என்­பது அம்­ப­லப்­ப­டுத்தப்பட வேண்டும். குறு­கிய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக அரங்­கேற்­றப்­பட்ட நாட­கமா? என்ற கேள்வி இன்று பூதா­க­ர­மாக எழுந்து நிற்­கின்­றது. இதற்கு விடை வேண்டும். தீர்வு வேண்டும்.

தீராமல் இருக்­கின்ற ஆயி­ரக்­க­ணக்­கான பிரச்­சி­னை­க­ளுக்கு -எங்­க­ளது நிலப்­பி­ரச்­சினை, காணிப்­பி­ரச்­சினை, நிர்­வாக பிரச்சினை இப்படி அடுக்கடுக்காக பிரச்சினைகளை வைத்து கொண்டு இருக்கின்ற ஒரு சமூகத்தின் விடிவுக்காகப் போராடுகின்ற இயக்கம் வெறும் அற்ப சொற்பங்களுக்காக எங்களுடைய அடிப்படைகளை மறந்து விட முடியாது.

எனவேதான் அந்த அடிப்படைகளுக்கு திரும்புகின்ற மறைந்த தலைவரின் காலத்தில் இந்த இயக்கத்தின் மீது மக்கள் காட்டிய அந்த அமோக ஆதரவை முழுமையாக மீட்டுக் கொள்கின்ற யுகத்துக்கு மீண்டு போகின்ற ஒரு யுகமாக அடுத்த யுகம் அமையட்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.