இது காஸாவின் ஒலி

0 93

ரோம் நகரம் எரிந்­து­கொண்­டி­ருக்­கும்­போது நீரோ மன்னன் புல்­லாங்­குழல் வாசித்­துக்­கொண்­டி­ருந்தான் என்­பார்கள். ஆனால், காஸா மீதான தாக்­கு­தலின் வலியைத் தனது ஆத்­மார்த்­த­மான இசையின் மூலம் உலக நாடு­க­ளுக்குக் கொண்டு சென்று வரு­கிறார் ரஹாஃப் ஃபதி நாசர்.

அல் அசார் பல்­க­லை­க­ழக்­கத்தின் மருத்­துவ மாண­வி­யான ரஹாஃப், காஸா – இஸ்ரேல் போரினால் பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீன மாண­வர்­களின் முக­மாக அறி­யப்­ப­டு­கிறார். இஸ்ரேல் தாக்­கு­தலால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட காஸா­வி­லி­ருந்து பலஸ்­தீ­னத்தின் பிற பகு­தி­க­ளுக்கு ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அவர்­களுள் ரஹாஃப்பும் ஒருவர்.

வான்­வழித் தாக்­கு­தலில் சிதைந்த கட்­டி­டங்­க­ளுக்கு மத்­தியில் கிடாரை வாசித்­துக்­கொண்டே ரஹாஃப் அளிக்கும் செய்தி உலக மக்கள் அனை­வ­ருக்­கு­மா­னது.

இது குறித்து ரஹாஃப், “இஸ்­ரேலின் தாக்­கு­தலால் எனது வீடும் தரை­மட்­ட­மா­கி­விட்­டது. சிறு வய­தி­லி­ருந்து நான் பயன்­ப­டுத்­திய இசைக் கரு­விகள் பலவும் சேத­ம­டைந்­து­விட்­டன. எங்­களைச் சுற்றி தினமும் நூற்­றுக்­க­ணக்கில் குண்டு மழை பொழிந்து வரு­கி­றது. அந்த அள­வுக்கு இஸ்ரேல் இடை­வி­டாது தாக்­கு­தலைத் தொடுத்­து­வ­ரு­கி­றது. உலக நாடுகள் என் இசையை கேட்­கின்­ற­னவோ இல்­லையோ நான் தொடர்ந்து வாசித்­துக்­கொண்டே இருப்பேன். என் இசை போருக்கு எதி­ரா­னது” எனத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

தொடரும் போர்:
கடந்த ஆண்டு அக்­டோபர் மாதம் பலஸ்­தீ­னத்தின் ஹமாஸ் போராளிகள் இஸ்­ரேலின் மீது தாக்­குதல் நடத்­தினர். இஸ்ரேல் -– ஹமாஸ் இடையே போர் வெடிக்க இத்­தாக்­கு­தலே வழி­வ­குத்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்­கு­தலில் இஸ்ரேல் தரப்பில் 1,500 பேர் பலி­யா­கினர். 250 பேர் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டனர்.

ஹமாஸின் தாக்­கு­த­லுக்கு எதிர்­வி­னை­யாற்­றிய இஸ்ரேல் இராணு­வத்தின் தாக்­கு­தலில் பலஸ்­தீ­னத்தில் 37,000 பேர் பலி­யா­கினர். போர் தொடர்ந்­து­வரும் சூழலில் காஸாவின் ரஃபா பகு­தியில் ஹமாஸ் நிலைகள் மீது தீவிர வான்­வழித் தாக்­கு­தலை இஸ்ரேல் தொடுத்­து­வ­ரு­கி­றது.

இந்­நி­லை­யில்தான், “காஸாவின் ரஃபாவில் இஸ்­ரேலின் தாக்­குதல் பேர­ழி­வுக்கு வழி­வ­குக்கும். உணவுப் பற்றாக்குறையின் தீவிரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் பணிகளை இந்தத் தாக்குதல் கடுமையாகப் பாதிக்கும்” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்திருந்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.