ஸாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

0 109

திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியின் 70 மாண­வர்­களின் பெறு­பே­றுகள் பரீட்சை திணைக்­க­ளத்­தினால் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்ட விட­யத்தில் மாண­வர்­க­ளுக்­கான பெறு­பே­று­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் தொடர்ச்­சி­யாக பல முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­ட­மானின் தலை­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மக­ரூபின் ஏற்­பாட்டில் இது­தொ­டர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று ஆளுநர் செய­ல­கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.

திரு­கோ­ண­மலை சென்­ஜோசப் கல்­லூ­ரியில் உயர்­தரம் எழுதி பெறு­பே­றுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியின் 70 மாண­வர்­களும், கட­மையில் இருந்த அதி­கா­ரிகள்,மேற்­பார்­வை­யா­ளர்கள், ஆசி­ரி­யர்­களும் இதில் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது கருத்­து­ரைத்த ஆளுனர், கல்­வியின் முக்­கி­யத்­துவம் மற்றும் ஒவ்­வொரு மாண­வர்­களும் 13 வரு­டங்கள் எதிர்­பார்த்த கன­வுகள், பெற்­றார்­களின் எதிர்­பார்ப்­புகள் இந்த பெறு­பேற்றில் அடக்­கி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் வர வேண்­டிய சிறந்த கல்­வி­மான்கள் இலங்­கையின் உயர்­ப­த­வி­களின் வகிக்­கக்­கூ­டிய மாண­வர்­களும் இதில் இருப்­பீர்கள். மாண­வர்­க­ளா­கிய நீங்கள் உங்­க­ளு­டைய கல்வி முன்­னேற்­றத்­துக்­கான முயற்­சி­களை தொட­ருங்கள். உங்­க­ளு­டைய இடை­நி­றுத்­தப்­பட்ட பெறு­பே­று­களை விரை­வாக வெளி­யிட ஏற்­பா­டு­களை கிழக்கு ஆளுநர் என்ற அடிப்­ப­டையில் நானும் எனது முயற்­சி­களை செய்து வரு­கின்றேன். இந்த பெறு­பெ­று­களை வெளி­யிட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மக­ரூபும் ஆரம்­பத்தில் இருந்து பல முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார் என்று குறிப்­பிட்டார்.

இதன்போது தொலை­பே­சியில் பரீட்சை திணைக்­கள ஆணை­யா­ள­ரிடம் இது தொடர்­பாக பேசி விரை­வாக பெறு­பே­றுகள் வழங்­கு­மாறும் கேட்டுக் கொண்டார்.

இக்கலந்­து­ரை­யா­டலில் கிழக்கு மாகாண ஆளுநர் செய­ல­கத்தின் செய­லாளர் மத­நா­யக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்­பாளர் சுஜாதா, திரு­கோ­ண­மலை வலயக் கல்விப் பணிப்­பாளர் ரவி, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகேஸ், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் முகம்மட் நௌபர், பரீட்சை கடமை நேரத்தில் இருந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.