காதி நீதிபதிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 2025 பட்ஜட்டில் உள்வாங்கப்படும்

ஹக்கீமுக்கு நீதியமைச்சின் செயலாளர் அறிவிப்பு

0 75

நாடெங்­கிலும் சேவையில் ஈடு­பட்­டுள்ள காதி நீதி­ப­தி­க­ளுக்­கான மாதாந்தக் கொடுப்­ப­னவு அதி­க­ரிப்பு 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீ­முக்கு நீதி அமைச்சின் செய­லாளர் அறி­வித்­துள்ளார்.

நாட்டின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மேல் நீதி­மன்ற வல­யங்­க­ளுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தின்  பிர­காரம், முஸ்­லிம்­களின் விவாகப் பிணக்­கு­களை விசா­ரித்து தீர்­வு­களை வழங்­கு­வ­தற்­கென நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, அவர்­க­ளுக்கு மாதாந்தக் கொடுப்­ப­ன­வாக பதி­னைந்­தா­யி­ரத்­துக்கும் குறை­வா­கவே வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஜூரி (நடுவர்) சபை, விவாக பிணக்­குகள் சம்­பந்­த­மான கவுன்ஸில் உறுப்­பி­னர்கள் ஆகி­யோரின் ஒத்­து­ழைப்­புடன் இது பகு­தி­நேரப் பணி­யாக இருந்த போதிலும், வாரந்­தோறும் இதற்­காகப் பல நாட்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்றும் காதி நீதி­ப­தி­க­ளுக்கு இது­கால வரை வழங்­கப்­பட்­டு­வரும் கொடுப்­ப­னவு எவ்­வி­தத்­திலும் போது­மா­ன­தல்ல என்­ப­தனால், காதி நீதி­ப­தி­க­ளு­க­ளுக்­கான மாதாந்த கொடுப்­ப­னவை தற்­போது வழங்­கப்­ப­டு­கின்ற தொகையை விடவும் மூன்று மடங்­கு­க­ளாக அதி­க­ரித்து வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் நீதி, சிறைச்­சாலை மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மறு சீர­மைப்பு அமைச்­சுக்குக் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அதற்­க­மை­வா­கவே நீதி­ய­மைச்சின் செய­லா­ளரால் பிரஸ்­தாப காதி நீதி­ப­தி­க­ளுக்­கான மாதாந்தக் கொடுப்­ப­ன­வுகள் 2025 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவுத் திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்டு, அதற்­கான உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் காதி நீதி­ப­தி­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களை அதிகரித்து வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காதி நீதிபதிகள் அமைப்பின் (Quazi Judges Forum) ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.