வெப்பநிலை உயர்வுக்கு மத்தியில் ஹஜ் யாத்திரை நிறைவுக்கு வந்தது

நூற்றுக்கணக்கானோர் மரணித்ததாக வெளியான செய்திகளை சவூதி உறுதிப்படுத்தவில்லை

0 120

(எம்.ஐ.அப்துல் நஸார்)
இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை கடு­மை­யான வெப்­ப­நிலை உயர்­வுக்கு மத்­தியில் நிறை­வுக்கு வந்­துள்­ளது.

கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக குறைந்­தது 550 யாத்­தி­ரி­கர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்ள போதிலும் உயி­ரி­ழப்­பு­களின் எண்­ணிக்­கையை சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் நேற்று மாலை வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­ட­வில்லை.

உயி­ரி­ழந்­த­வர்­களுள் குறைந்­தது 323 பேர் எகிப்­தி­யர்கள் என்றும் அவர்­களில் பெரும்­பாலோர் வெப்பம் தொடர்­பான நோய்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர் என்றும் தத்­த­மது நாடு­களை ஒருங்­கி­ணைக்கும் இரண்டு அரபு நாடு­களின் தூது­வர்­களை மேற்­கோள்­காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

‘சிறு சன நெரிசல் கார­ண­மாக ஆபத்­தான காயங்­க­ளுக்கு ஆளான ஒரு­வரைத் தவிர,  உயி­ரி­ழந்த எகிப்­தி­யர்கள் அனை­வரும் வெப்பம் கார­ண­மா­கவே இறந்­தனர்’ எனவும் இறந்­த­வர்­களின் மொத்த எண்­ணிக்கை மக்­காவின் அல்-­மு­யிசம் சுற்­றுப்­பு­றத்தில் உள்ள வைத்­தி­ய­சாலை பிரேத அறை­யி­லி­ருந்து பெறப்­பட்­ட­தா­கவும் இரா­ஜ­தந்­தி­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

குறைந்­தது 60 ஜோர்தான் நாட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்ளர், இந்த எண்­ணிக்கை முன்னர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக 41 பேர் என செவ்­வா­யன்று தலை­நகர் அம்­ம­னா­னி­லி­ருந்து அந் நாடு அறி­வித்­தி­ருந்­தது.

ஏ.எப்.பி செய்தி நிறு­வ­னத்தின் கணக்­கீட்­டின்­படி, உயி­ரி­ழந்­த­வர்கள் தொடர்பில் பல நாடு­களால் இது­வரை அறி­விக்­கப்­பட்ட மொத்த எண்­ணிக்கை 577 ஆகக் காணப்­ப­டு­கின்­றன.

மக்­காவில் உள்ள மிகப்­பெ­ரிய அல்-­மு­யி­செமில் அமைந்­துள்ள பிரேத அறையில் 550 உடல்கள் இருப்­ப­தாக இரா­ஜ­தந்­தி­ரிகள் தெரி­வித்­தனர்.
இதற்கு முன்னர் கடந்த செவ்­வா­யன்று, ஹஜ்ஜின் போது காணாமல் போன எகிப்­தி­யர்­களைத் தேடும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு சவூதி அரே­பிய அதி­கா­ரி­க­ளுக்கு எகிப்தின் வெளி­வி­வ­கார அமைச்சு, ஒத்­து­ழைத்து வரு­வ­தாகக் எகிப்து தெரி­வித்­தி­ருந்­தது.

எகிப்தின் வெளி­வி­வ­கார அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்றில் ‘குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான இறப்­புகள்’ நிகழ்ந்­த­தாகக் கூறி­னாலும், அவர்­களுள் எகிப்­தி­யர்­களும் இருக்­கி­றார்­களா என்­பதைக் குறிப்­பி­ட­வில்லை.

வெப்­பத்­தினால் பாதிக்­கப்­பட்ட 2,000 க்கும் மேற்­பட்ட யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் சிகிச்சை அளித்­துள்­ளனர், ஆனால் ஞாயிற்­றுக்­கி­ழமை தொடக்கம் அந்த எண்­ணிக்­கையை புதுப்­பிக்­க­வில்லை என்­ப­தோடு உயி­ரி­ழப்­புகள் பற்­றிய தக­வல்கள் எவையும் வழங்­கப்­ப­ட­வில்லை.
கடந்த வருடம் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த குறைந்­தது 240 யாத்­தி­ரி­கர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் எனக் கூறப்­ப­டு­கி­றது, அவர்­களில் பெரும்­பாலோர் இந்­தோ­னே­சி­யர்­க­ளாவர்.

கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்ட சவூதி ஆய்­வின்­படி, ஒவ்­வொரு பத்து ஆண்­டு­க­ளிலும் ஹஜ் கடமை நிறை­வேற்­றப்­படும் காலப்­ப­கு­தியில் வெப்­ப­நிலை 0.4 செல்­ஷியெஸ் (0.72 பரனைட்) இனால் அதி­க­ரித்து வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளது.
கடந்த திங்­க­ளன்று மக்­காவில் உள்ள பெரிய பள்­ளி­வா­சலின் வெப்­ப­நிலை 51.8 செல்­ஷி­யெ­ஸினை எட்­டி­ய­தாக சவூதி அரே­பிய தேசிய வானிலை அவ­தான நிலையம் தெரி­வித்­தி­ருந்­தது.

யாத்­தி­ரி­கர்கள் தங்கள் தலைக்கு மேல் போத்­தலில் அடைக்­கப்­பட்ட தண்­ணீரை ஊற்­று­வதைக் கண்­ட­தா­கவும், தொண்­டர்கள் குளிர் பானங்கள் மற்றும் விரை­வாக உருகும் சொக்லேட் ஐஸ்­கி­ரீம்­களை வழங்­கி­ய­தா­கவும் திங்­க­ளன்று மக்­கா­விற்கு வெளியே உள்ள மினாவில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த ஏ.எப்.பி செய்தி நிறு­வ­னத்தின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தெரி­வித்­தனர்.

யாத்­தி­ரி­கர்கள் குடை­களைப் பயன்­ப­டுத்த வேண்டும் எனவும், அதி­க­மாக தண்ணீர் அருந்த வேண்டும் எனவும், வெப்பம் நில­வு­கின்ற பகல் பொழுதில் வெயிலில் வெளியில் செல்­வதைத் தவிர்க்­கு­மாறும் சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால் சனிக்­கி­ழ­மை­யன்று நடந்த அரபாத் மலையில் பிரார்த்­த­னைகள் உட்­பட பல ஹஜ் செயற்­பா­டுகள் பகல் நேரத்தில் பல மணி­நேரம் வெளியில் இருந்­த­வாறே யாத்­தி­ரி­கர்­களால் நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யி­ருந்­தது.

வீதி­யோ­ரங்­களில் அசை­வற்ற உடல்­களைப் பார்த்­த­தா­கவும், நோயாளர் காவு வண்டிச் சேவைகள் அதி­க­மாக இடம்­பெற்­றதைக் காணக்­கூ­டி­ய­காக இருந்­த­தா­கவும் சில யாத்­தி­ரி­கர்கள் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

இந்த ஆண்டு ஹஜ்ஜில் சுமார் 1.8 மில்­லியன் யாத்­திரி­கர்கள் பங்­கேற்­றுள்­ளனர், அவர்­களில் 1.6 மில்­லியன் பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­துள்­ள­தாக சவூதி அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஒவ்­வொரு ஆண்டும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாத்­தி­ரி­கர்கள் பணத்தைச் சேமிப்­ப­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ ஹஜ் விசாவைப் பெறாமல் ஹஜ் செய்ய முயல்­கின்­றனர், இது மிகவும் ஆபத்­தான செய­லாகும், ஏனெனில் இந்த பதிவு செய்­யப்­ப­டாத யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் கட­மை­யின்­போது சவூதி அதி­கா­ரி­களால் வழங்­கப்­படும் குளி­ரூட்­டப்­பட்ட வச­தி­களை பெற முடி­யாது.

செவ்­வா­யன்று ஏ.எப்.பி இடம் கருத்துத் தெரி­வித்த இரா­ஜ­தந்­தி­ரி­களுள் ஒருவர், எகிப்­தி­யர்­களின் அதிக எண்­ணிக்­கை­யி­லான இறப்­புக்கு ‘முற்­றிலும்’ கார­ண­மாக அமைந்­தி­ருப்­பது பதிவு செய்­யப்­ப­டாத எகிப்­திய யாத்­தி­ரி­கர்­க­ளாவர் எனத் தெரி­வித்தார்.

இந்த மாத ஆரம்­பத்தில், சவூதி அதி­கா­ரிகள், ஹஜ்­ஜுக்கு முன்னர் மக்­கா­வி­லி­ருந்த பதிவு செய்­யப்­ப­டாத ஆயி­ரக்­க­ணக்­கான யாத்­தி­ரி­கர்­களை வெளி­யேற்­றி­யி­ருந்­தனர்.

இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது உயி­ரி­ழப்புகள் தொடர்பில் முறைப்­பா­டு­களை மேற்­கொள்ளும் ஏனைய நாடு­களுள் இந்­தோ­னே­சியா, ஈரான் மற்றும் செனகல் ஆகி­யவை உள்­ள­டங்கும்.

வெப்பம் கார­ண­மாக எத்­தனை உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ளன என்­பதை பெரும்­பா­லான நாடுகள் குறிப்­பி­ட­வில்லை.

வரு­டாந்தம் ஹஜ்ஜை நடத்­து­வது மக்கா மற்றும் மதீனா நக­ரங்­களில் உள்ள ‘இரண்டு புனித மசூ­தி­களின் பாது­கா­வலர்’ என்ற பட்­டத்­தினைக் கொண்­டுள்ள மன்னர் சல்மான் மற்றும் சவூதி அரச குடும்­பத்­திற்கு ஒரு கௌர­வ­மாகும்.

சவூ­தியின் சுகாதார அமைச்சர், பஹ்த் பின் அப்துல் ரஹ்மான் அல்-ஜலாஜெல், ஹஜ்ஜுக்கான சுகாதாரத் திட்டங்கள் ‘வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன’ என கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தார். இது பெரிய அளவிலான நோய்கள் மற்றும் ஏனைய பொது சுகாதார அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையாகும் என உத்தியோகபூர்வ சவூதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மெய்நிகர் வைத்தியசாலை 5,800 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு மெய்நிகர் ஆலோசனைகளை வழங்கியது, முதன்மையாக வெப்பம் தொடர்பான நோய்களுக்கு, உடனடியாகத் தலையிட்டு செயற்பட்டதோடு நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரிப்பதனையும் தடுத்துள்ளது என ஏ.எப்.பி. செய்தித் தாபனம் தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.