இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு உலக உணவு திட்டத்திற்கு சவூதி அரேபியா 300 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

0 109

மன்னர் சல்மான் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்­க­ளுக்­கான மையத்­தினால் இலங்­கையின் பல பிராந்­தி­யங்­களில் விநி­யோ­கிப்­ப­தற்கு தேவை­யான 300 தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை உலக உணவுத் திட்­டத்­திடம் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை கைய­ளிக்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்வில் இலங்­கைக்­கான சவூதி அரே­பியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-­கஹ்­தானி மற்றும் இலங்­கையில் உள்ள சர்­வ­தேச உணவுத் திட்­டத்தின் துணைப் பணிப்­பாளர் ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்­க­ளுக்­கான மையத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் பின் அப்­துல்லா அல்-­கலாஃப் போன்றோர் பங்­கேற்­றனர்.

உலக உணவுத் திட்­ட­மா­னது இப்­பே­ரீத்தம் பழங்­களை 200,000க்கும் அதி­க­மான பய­னா­ளி­க­ளுக்கு விநி­யோ­கிக்கும் நோக்­கோடு, இப்­பே­ரீத்தம் பழங்­களை, KSrelief இட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டது.

சவூதி அரே­பிய இராச்­சி­யத்தின் மனி­தா­பி­மான மற்றும் முன்­னோடி பாத்­தி­ரத்தின் ஒரு பகு­தியை உள்­ள­டக்­கிய இந்த தாராள நன்­கொ­டைக்­காக, இரண்டு புனிதத் தலங்­களின் பாது­கா­வலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்­டத்து இள­வ­ர­சரும் பிர­தம மந்­தி­ரி­யு­மான இள­வ­ரசர் முக­மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகி­யோ­ருக்கு தூதுவர் அல்­கஹ்­தானி தனது நன்­றி­யையும் பாராட்­டு­த­லையும் தெரி­வித்­துக்­கொண்டார்.

மேலும், தேவை­யு­டை­யோர்­களின் துன்­பத்தைப் போக்கும் நோக்­கோடு மேற்­கொள்­ளப்­படும் இது­போன்ற மனி­தா­பி­மானத் திட்­டங்­களை அமுல்படுத்தப்படுவதை நேர­டி­யாக மேற்­பார்­வை­யிட்டு வரும் மன்னர் சல்மான் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ரண மையத்­திற்கும் தூதுவர் தனது நன்­றியைத் தெரி­வித்­துக்­கொண்டார்.

இது தொடர்­பாக, உலக உணவுத் திட்­டத்தின் இலங்­கைக்­கான பிர­தி­நிதி ஜெரார்ட் ரெபெல்லோ, “இந்தத் தாரா­ள­மான பங்­க­ளிப்­பிற்கு தனது நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­வ­தோடு, இவ் உலக உணவுத் திட்­டத்­திற்கு, மிகப் பெரிய நன்­கொடை வழங்கும் நாடு­களில் சவூதி அரே­பியா இராச்­சி­யமும் ஒன்­றாகும்” என்றார்.

இரண்டு புனிதத் தலங்­களின் பாதுகாவலரின் அரசாங்கத்தால் உலகின் பல்வேறு சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு அங்கு வாழும் மிகவும் தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கும் உதவித் திட்டங்களுக்குள் இதுவும் உள்ளடங்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.