உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பிறமதத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதமாக செயற்படாதீர்

சட்டங்களை மதித்து சுகாதார வழிமுறைகளையும் பேணி நடக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

0 117

உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றும்­போது பல்­லின மக்­க­ளோடு வாழும் நாம் பிற­மத சமூ­கத்­த­வர்­களின் உணர்­வுகள் தூண்­டப்­படும் வகையில் நடந்­து­கொள்ளக் கூடாது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், இவ்­வி­வ­கா­ரத்தில் நம் நாட்டின் சட்­டத்தை கவ­னத்திற் கொண்டு, மிரு­கத்தின் உரி­மைக்­கான சான்­றிதழ், மாட்டின் அல்­லது ஆட்டின் விபரச் சீட்டு, சுகா­தார அத்­தாட்சிப் பத்­திரம், மிரு­கங்­களை எடுத்துச் செல்­வ­தற்­கான அனு­மதிப் பத்­திரம் போன்ற ஆவ­ணங்­களை முன்­கூட்­டியே தயார்­ப­டுத்திக் கொள்ளல் வேண்டும் என்றும் தெரி­வித்­துள்­ளது.

ஜம்­இய்­யத்துல் உலமா வெளி­யிட்­டி­ருக்கும் உழ்­ஹிய்யா வழி­காட்­டல்கள் வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அனு­ம­தி­யின்றி உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை வண்­டி­களில் ஏற்றி வரு­வ­தையும், அனு­மதி பெற்­றதை விட கூடு­த­லான எண்­ணிக்­கையில் எடுத்து வரு­வ­தையும் முற்­றிலும் தவிர்ந்­து­கொள்ள வேண்டும்.

குர்­பா­னிக்கு பயன்­ப­டுத்­தப்­படும் இடத்தை சுத்­த­மாக வைத்துக் கொள்­வ­தோடு, அறுவைப் பிரா­ணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழி­வுப்­பொ­ருட்­களை அகற்றும் போது சுகா­தார விதி­மு­றை­களைப் பேணிக் கொள்ள வேண்டும். அறு­வைக்­காகப் பயன்­ப­டுத்­திய இடத்தில் கிருமி நாசி­னி­களைத் தெளித்து சுத்­தத்தை உத்­த­ர­வா­தப்­ப­டுத்தல் வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், உழ்­ஹிய்­யா­வுக்­காக அறுப்புப் பிரா­ணி­களை வைத்­தி­ருக்கும் போதும் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்றும் போதும் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றி­யதன் பின்­னரும் புகைப்­ப­டங்கள் அல்­லது வீடி­யோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.