நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல்

0 135

கடந்த ஜூன் 8 சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய படைகள் நுஸைரத் அக­திகள் முகா­முக்கு அருகில் ஹமா­ஸுடன் மோதலில் ஈடு­பட்­டதில் 274 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. இதில் குழந்­தை­களும் அப்­பாவிப் பொது­மக்­களும் அடங்­குவர் என்று அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

ஆனால் இஸ்ரேல் இராணுவம் இந்த மோதலில் 100-க்கும் குறை­வா­ன­வர்­களே கொல்­லப்­பட்­டனர் என்று கூறி­யி­ருக்­கி­றது.

இந்த மோத­லை­ய­டுத்து ஹமாஸின் பிடியில் இருந்த நான்கு பண­யக்­கை­தி­களை இஸ்ரேல் மீட்­டி­ருக்­கி­றது. பண­யக்­கை­தி­களை மீட்க இஸ்ரேல் இராணுவம் சிறப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. அதே­ச­மயம், இஸ்ரேல் பணயக் கைதி­களை மீட்க மேற்­கொண்ட நட­வ­டிக்­கையில் ஏரா­ள­மான பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக பலஸ்­தீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.
மறு­புறம் ஹமாஸால் சிறை­பி­டிக்­கப்­பட்ட இஸ்­ரே­லி­யர்கள் சனிக்­கி­ழ­மை­யன்று மீட்­கப்­பட்­டதை தொடர்ந்து பின்னர் தங்கள் குடும்­பத்­தி­னரை சந்­தித்­தனர். நோவா அர்­க­மனி (27), அல்மோக் மிர் (22), ஆண்ட்ரி கோஸ்லோவ் (27), சலோமி ஜீவ் (41) ஆகி­யோரே இவ்­வாறு மீட்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

கடந்­தாண்டு ஒக்­டோபர் 7ஆம் திகதி அன்று நோவா இசை விழாவில் ஹமாஸ் தலை­மை­யி­லான தாக்­கு­தலில் இஸ்­ரே­லியர் கடத்­தப்­பட்­டனர். பணயக் கைதி­க­ளாக வைக்­கப்­பட்ட அவர்­களை மீட்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட நட­வ­டிக்கை மிகவும் ஆபத்து நிறைந்­த­தாக இருந்­தது என இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

இந்த மீட்பு நட­வ­டிக்­கையின் போது, நுஸைரத் பகு­தியில் இஸ்ரேல் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும், ஹமாஸ் போரா­ளி­க­ளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்­பட்­டது. இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் வான்­வழித் தாக்­குதல் நடத்­தினர். இந்த நட­வ­டிக்­கையில் ஏரா­ள­மானோர் கொல்­லப்­பட்­ட­தாக பலஸ்­தீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காஸாவின் அல்-­அக்ஸா மற்றும் அல்-­அவ்தா ஆகிய இரண்டு மருத்­து­வ­ம­னை­களில் 70 சட­லங்கள் இருந்­த­தாக அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
இந்த மோதலில் அல்­நு­ஸைரத் அக­திகள் முகாமைச் சுற்றி இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தலில் 274 பேர் கொல்­லப்­பட்­ட­தாக காஸா சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

இந்தத் தாக்­கு­தலில் 100 பேர் பலி­யா­கி­யி­ருக்­கலாம் என இஸ்ரேல் இரா­ணுவ செய்தித் தொடர்­பாளர் டேனியல் ஹகாரி தெரி­வித்­துள்ளார். இந்தப் பகு­தி­களில் இருந்து வெளி­யாகும் புகைப்­ப­டங்கள் தீவி­ர­மான குண்­டு­வெ­டிப்­புகள் நடந்­த­தற்­கான தட­யங்­களைக் காட்­டு­கின்­றன. மருத்­து­வ­ம­னைகள் படு­காயம் அடைந்­த­வர்­களால் நிரம்­பி­யுள்­ளன. இறந்த சட­லங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

இந்தத் தாக்­கு­தலில் குழந்­தை­களும் அதிக அளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
காய­ம­டைந்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­ததால், சிகிச்சை அளிப்­பதில் சிரமம் ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. மக்கள் தங்கள் உற­வி­னர்­களின் மர­ணத்­திற்கு இரங்கல் தெரி­விக்கும் புகைப்­ப­டங்­களும் இந்த பகு­தி­களில் அதிகம் பகி­ரப்­பட்­டது.

உள­வுத்­துறை துல்­லி­ய­மாக வழங்­கிய தக­வலின் அடிப்­ப­டையில் இந்த மீட்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக இஸ்ரேல் இரா­ணுவ செய்தித் தொடர்­பாளர் டேனியல் ஹகாரி தெரி­வித்­துள்ளார். அதன் கீழ், நுஸை­ரத்தில் உள்ள இரண்டு வெவ்­வேறு கட்­டி­டங்­களில் இருந்து பண­யக்­கை­திகள் மீட்­கப்­பட்­டனர்.
இந்தத் தாக்­கு­தலில் காய­ம­டைந்த ஓர் இஸ்­ரே­லிய இரா­ணுவ வீரர், மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.

மீட்­கப்­பட்ட பண­யக்­கை­திகள் நல­மாக இருப்­ப­தாக இஸ்ரேல் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து வெளி­யான புகைப்­ப­டங்­களில் அவர்கள் தங்­களின் குடும்­பங்­களைச் சந்­திக்கும் காட்­சிகள் காட்­டப்­பட்­டுள்­ளது.
இந்த நட­வ­டிக்கை துணிச்­ச­லுடன் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக நெதன்­யாகு பாராட்­டி­யுள்ளார். “உயி­ருடன் இருந்­தாலும் சரி, இறந்­தி­ருந்­தாலும் சரி, கடைசி பண­யக்­கை­தியை மீட்கும் வரை நாங்கள் போரா­டுவோம். அவர்­க­ளுக்­காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்,” என்றார்.

இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளும் படைகள் ஹமாஸின் கடு­மை­யான துப்­பாக்கிச் சூட்டை எதிர்­கொள்ள வேண்டி இருந்­தது என்று பாது­காப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறினார்.

இஸ்ரேல் இரா­ணு­வத்தால் மீட்­கப்­பட்ட பண­யக்­கை­தி­களில், நோவா அர்­க­மணி (சீன வம்­சா­வ­ளியைச் சேர்ந்த இஸ்­ரே­லிய பிரஜை) ஒக்­டோபர் 7 அன்று நோவா திரு­வி­ழாவில் இருந்து கடத்­தப்­பட்டார்.

ரஷ்­யாவை பூர்­வி­க­மாக கொண்ட கோஸ்லோவ் 2022 இல் இஸ்­ரே­லுக்கு வந்தார்.
ஜீவ் என்­ப­வரும் ஒரு ரஷ்யர். இரு­வரும் நோவா திரு­வி­ழாவில் பாது­கா­வ­லர்­க­ளாக வேலை பார்த்து வந்­தனர். அந்த நேரத்தில் அவர்கள் கடத்­தப்­பட்­டனர்.
மிர் ஜான் என்­பவர் கடத்­தப்­பட்­ட­தற்கு மறுநாள் ஒரு பெரிய தொழில்­நுட்ப நிறு­வ­னத்தில் வேலைக்கு சேர இருந்தார். ஆனால் அதற்குள் ஹமாஸால் கடத்­தப்­பட்டார்.

மீட்­கப்­பட்ட பண­யக்­கை­தி­களின் குடும்­பங்கள் இது ஒரு அசாத்­திய நட­வ­டிக்கை என்று கூறி­யுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும், ஹமாஸ் பிடியில் உள்ள 120 பண­யக்­கை­தி­க­ளையும் மீட்க வேண்டும் என்று இந்த குழு இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. மேலும், உயி­ருடன் இருக்கும் பண­யக்­கை­தி­க­ளுக்கு மறு­வாழ்வு அளித்து, இறந்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும் என்றும் கோரி­யுள்­ளது.

ஒரு­புறம், பண­யக்­கை­தி­களை விடு­வித்­ததில் இஸ்­ரேலில் கொண்­டாட்டச் சூழல் நில­வு­கி­றது, ஆனால் மறு­புறம், இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்ட காஸா பகு­தி­களில் இருந்து மக்­களின் சட­லங்கள், கோரத் தாக்­கு­தலின் சுவ­டு­களின் புகைப்­ப­டங்கள் வெளி­யா­கின்­றன.

மத்­திய காஸாவில் உள்ள பல இலக்­கு­களை இஸ்ரேல் தாக்­கி­ய­தாகத் தெரிய வந்­துள்­ளது. ஆனால் நுஸைரத் பகுதி மிகவும் கடு­மை­யாக தாக்­கப்­பட்­டுள்­ளது. மீட்­கப்­பட்ட நான்கு பண­யக்­கை­தி­களும் அங்கு தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
அல்-­அக்ஸா மருத்­து­வ­மனை வெளி­யிட்­டுள்ள காணொ­ளியில், காய­ம­டைந்­த­வர்கள் மருத்­து­வ­ம­னையின் தரையில் படுத்துக் கிடப்­பதைக் காண முடி­கி­றது. மேலும் ஏரா­ள­மானோர் காயங்­க­ளுடன் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றனர்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தப் பகு­தியில் 400 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தாக ஹமாஸ் ஊடகம் தெரி­வித்­துள்­ளது.

இஸ்­ரேலின் மீட்பு நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து ஐக்­கிய நாடுகள் சபையின் அவ­சர கூட்­டத்தை கூட்­டு­மாறு பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்பாஸ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அல்-­நு­ஸைரத் மற்றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் ‘இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தால் நடத்­தப்­படும் இனப்­ப­டு­கொலை’ பற்றி ஐக்­கிய நாடுகள் சபை விவா­திக்க வேண்டும் என்று அவர் கூறி­யுள்ளார்.

“காஸாவில் அரங்­கேறி வரும் மற்­றொரு படு­கொலைச் சம்­பவம் பற்­றிய செய்­திகள் நெஞ்சை பதற வைக்­கின்­றன. நாங்கள் அதை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். இது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும்” என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வெளி­யு­றவுப் பிர­தி­நிதி ஜோசப் போரல் பதி­விட்­டி­ருக்­கிறார்.

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதி­களை விடு­விப்­ப­தற்­கான ஒப்­பந்­தத்தை எட்­டு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட நேரத்தில் பணயக் கைதி­களை விடு­விக்கும் கடு­மை­யான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

பிரச்சி­னை­களை முடி­வுக்குக் கொண்டு வரும் ஒப்­பந்­தத்தை அமுல்­ப­டுத்த முயற்­சிக்­கு­மாறு இஸ்ரேல் பிர­தமர் நெதன்­யா­கு­விடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. ஆனால், பணயக் கைதி­களை விடு­விக்க இரா­ணுவ நட­வ­டிக்கை மட்­டுமே ஒரே வழி என்று தீவிர வல­து­சா­ரிகள் கூறினர்.

இஸ்­ரே­லிய இரா­ணுவம் இது­வரை மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களில் சனிக்­கி­ழமை நடந்த மீட்பு நட­வ­டிக்கை மிகவும் வெற்­றி­க­ர­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது, மேலும் இது அழுத்­தத்தில் இருக்கும் நெதன்­யா­கு­வுக்கு அடுத்­தகட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க எளி­தாக்­கி­யுள்­ளது.

நுஸைரத் முகா­முக்கு அருகே இஸ்­ரே­லிய பண­யக்­கை­திகள் மீட்­கப்­பட்ட செய்­தியை அமெ­ரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்­மா­னுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் ஆகியோர் வர­வேற்­றுள்­ளனர்.

நுஸை­ரத்தில் இஸ்­ரேலின் மீட்பு நட­வ­டிக்­கைக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக பேசிய ஹமாஸ் அர­சியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். அனைத்து பலஸ்தீனியர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதிக்காது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பணயக் கைதிகளாக சிறைப் பிடிக்கப்பட்டனர்.
இந்த பணயக்கைதிகளில் 116 பேர் இன்னும் பலஸ்தீனத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வார போர் நிறுத்தத்திற்கு ஈடாக 105 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இன்னும் 240 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று, காஸா சுகாதார அமைச்சகம் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,800 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.