ஹஜ் யாத்திரிகர்களின் நலனில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சவூதி

0 460

காலித் ஹமூத் அல்கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சேவை செய்­வது என்­பது சவூதி அரே­பிய இராச்­சி­யத்தின் தலை­மைத்­து­வத்தின் முக்­கிய முன்­னு­ரி­மை­களில் ஒன்­றாகும். சவூதி அரே­பி­யாவின் அனைத்து மன்­னர்­களும் இதை தமக்குக் கிடைத்த சிறப்­பாகக் கருதி வரு­கின்­றனர்.

சவூதி அரே­பிய இராச்­சியம், அதன் தலை­மையின் வழி­காட்­டு­தலின் கீழ், அதி­க­ரித்து வரும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரி­கர்­களின் தேவை­களை பூர்த்தி செய்ய, இரண்டு புனிதத் தலங்­களின் விரி­வாக்கத் திட்­டத்தை மேற்­கொண்டு வரு­கி­றது. இந்த திட்­டத்தின் கீழ், புனிதத் தலங்­களின் பரப்­ப­ளவை அதி­க­ரித்து, உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்தி, நவீன வச­திகள் மற்றும் மேம்­பட்ட போக்­கு­வ­ரத்து அமைப்­பு­களை வழங்­கு­வதைக் குறிக்­கோ­ளாகக் கொண்­டுள்­ளது. இது யாத்­தி­ரி­கர்­களின் நட­மாட்­டத்தை எளி­தாக்­கு­வ­தோடு, அவர்­களின் வச­தி­க­ளையும் உறுதி செய்­கி­றது.

பட்­டத்து இள­வ­ர­சரும் பிர­தம மந்­தி­ரி­யு­மான இள­வ­ரசர் முக­மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் அறி­வித்த “விஷன் 2030” யின் கீழ், சவூதி அரே­பியா இறை­வனின் விருந்­தி­னர்­க­ளுக்கு சேவை செய்ய பல திட்­டங்­களை வடி­வ­மைத்­துள்­ளது, அதில் முக்­கி­ய­மா­னது “இறை­வனின் விருந்­தா­ளிகள்” திட்டம். இந்த திட்டம், ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரி­கர்­களின் அனு­ப­வங்­களின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தையும், அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சேவை­களை ஒழுங்­கு­ப­டுத்தி வலுப்­ப­டுத்­து­வ­தையும் நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது, இதன் மூலம் அதிக எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்கள் இந்த சேவை­களின் பயனைப் பெற முடியும்.

நவீன தொழில்­நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலம் ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு அதி சிறந்த சேவை­களை வழங்­கு­வதை நோக்­க­மாகக் கொண்ட பல முயற்­சி­களை இந்த “விஷன் 2030” உள்­ள­டக்­கி­யுள்­ளது. திறன்­பே­சி­களின் பயன்­பா­டு­களைப் பயன்­ப­டுத்தி, யாத்­தி­ரி­கர்கள் கிரி­யைகள் மற்றும் கிடைக்­கக்­கூ­டிய சேவைகள் பற்­றிய துல்­லி­ய­மான மற்றும் நிகழ்­நேர தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். மேலும், மின்­னணு ஹஜ் மற்றும் உம்ரா விசா வழங்­குதல் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா நடை­மு­றை­களை நெறிப்­ப­டுத்த மின்­னணு முன்­ப­திவு முறையை உரு­வாக்­குதல் ஆகி­யவை இதில் அடங்கும்.

உயர்­மட்ட பாது­காப்பு மற்றும் சுகா­தார சேவை­களை வழங்­கு­வதன் மூலம் யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக சவூதி அரே­பிய இராச்­சியம் அதிக முன்­னு­ரிமை அளிக்­கி­றது. மருத்­து­வ­ம­னைகள் மற்றும் சுகா­தார மையங்கள் என்­பன அதி­ந­வீன உப­க­ர­ணங்­க­ளுடன் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவ்­வாறே, எந்­த­வொரு அவ­ச­ர­நி­லை­யையும் கையாளத் தயா­ராக பயிற்சி பெற்ற மருத்­துவக் குழுக்­க­ளுடன் பணி­யா­ளர்கள் உள்­ளனர். மேலும் , யாத்­தி­ரி­கர்­களைப் பாது­காக்­கவும், கிரி­யைகள் சீரா­கவும் பாது­காப்­பா­கவும் நடை­பெ­று­வதை உறு­தி­செய்ய பாது­காப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

புனித தலை­ந­கரின் நகர சபை, 2024 ஆம் ஆண்­டிற்­கான ஹஜ் திட்­டத்தை தயா­ரித்­துள்­ளது. இது 11,800 ஊழி­யர்கள் மற்றும் தொழி­லா­ளர்­களால் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அவர்கள் புனிதப் பிர­தே­சங்கள் முழு­வதும் 28 நக­ராட்சி சேவை மையங்­களை நிறு­வி­யுள்­ளனர். இந்த மையங்கள் 24/7 செயல்­படும் மற்றும் தேவை­யான மனி­த­வளம் மற்றும் தள­வாட ஆத­ர­வுடன் முழு­மை­யாகத் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வாறே, அவ­ச­ர­கால சூழ்­நி­லை­களைக் கையாள மத்­திய குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. சந்­தைகள், உணவுக் கடைகள், உண­வ­கங்கள் மற்றும் தூய்மை மற்றும் சுற்­றுச்­சூழல் சுகா­தா­ரத்தை மேற்­பார்­வை­யிட பல்­வேறு குழுக்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

சுகா­தாரத் துறையைப் பொறுத்­த­வ­ரையில், சுகா­தார அமைச்­சகம் 16 மருத்­து­வ­ம­னைகள் மற்றும் 123 சுகா­தார மையங்­க­ளையும், மக்கா மற்றும் புனித தளங்­களில் 5 பரு­வ­கால சுகா­தார மையங்­க­ளையும் தயார் செய்­துள்­ளது. இம்­மை­யங்­க­ளுக்கு, அஜ்யாத் அவ­சர மருத்­து­வ­மனை, அல்-­ஹராம் மருத்­து­வ­மனை மற்றும் மக்­காவில் உள்ள புனித மசூ­தியின் தாழ்­வா­ரத்தில் அமைந்­துள்ள 3 சுகா­தார மையங்கள் மற்றும் மக்­காவில் உள்ள புனித மசூ­தியின் மையப் பகு­திக்கு அரு­கி­லுள்ள இரண்டு சுகா­தார மையங்கள் தேவை­யான உத­வி­களை வழங்கி வரு­கி­றது.

அவ­ச­ர­கால நிலை­மை­களைப் பொறுத்­த­வ­ரையில், நிம்ரா பள்ளி , அர­பாத்தின் ஜபல் அல்-­ரஹ்மா மற்றும் மினாவில் உள்ள ஜமாரத் பகுதி ஆகி­ய­வற்றில் 33 துணை ஆம்­புலன்ஸ் குழுக்­க­ளுடன் 155 உயர் வச­திகள் கொண்ட ஆம்­பு­லன்ஸ்கள் தயார் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த ஏற்­ப­டுகள் யாத்­ரீ­கர்­க­ளுக்கு சேவை செய்ய 24/7 தயார் நிலையில் இருக்கும்.

யாத்­தி­ரி­கர்­களின் போக்­கு­வ­ரத்தை கண்­கா­ணிக்கும் உச்ச ஆணையம், இறை­வனின் விருந்­தி­னர்­களை ஏற்றிச் செல்ல 3,500 பேருந்­து­களை ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்த பேருந்­துகள் ஹஜ் பருவ காலத்தில் 12 மில்­லியன் பய­ணங்­களை மேற்­கொள்ளும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது “மஸ்ஜித் அல்­ஹரம்” ஐச் சுற்­றி­யுள்ள ஒன்­பது நிலை­யங்கள் வழி­யாக போக்­கு­வ­ரத்துச் சேவை­களை வழங்­கு­கி­றது. “அய்­யாமுத் தஷ்ரீக்” நாட்­களில் மினா­விற்கும் “மஸ்ஜித் அல்­ஹரம்” இற்கும் இடையில் யாத்­தி­ரி­கர்கள் செல்­வ­தற்கு வச­தி­யாக 12 வழிகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

சவூதி உணவு மற்றும் மருந்து ஆணை­யத்தைப் பொறுத்­த­வ­ரையில், அது தற்­போ­தைய ஹஜ் பருவ காலத்தில் யாத்­தி­ரி­கர்­களின் உணவு, மருந்­துகள் மற்றும் மருத்­துவப் பொருட்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­கான விரி­வான திட்­டத்தை தயா­ரித்­துள்­ளது.

இந்த ஹஜ் பருவ காலத்தின் முன்­மு­யற்­சி­களின் ஒரு பகு­தி­யாக, மஸ்ஜித் அல்­ஹரம் மற்றும் நபிகள் நாய­கத்தின் மதீனாப் பள்­ளி­க­ளுக்­கான மத விவ­கா­ரங்­களை தலை­மை­யகம் “மனி­தா­பி­மானம்” என்ற ஒரு முன்­மு­யற்­சியைத் தொடங்­கி­யுள்­ளது. இறை­வனின் விருந்­தி­னர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சேவை­களை மனி­தா­பி­மா­ன­மாக்­கு­வதன் மூலம் அவர்­களின் அனு­ப­வத்தை வளப்­ப­டுத்­து­வதே இதன் நோக்­க­மாகும். யாத்­தி­ரி­கர்­களில் நோயுற்றோர், முதியோர், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஆகி­யோரைப் பரா­ம­ரித்தல், அவர்­க­ளுக்குப் பொருத்­த­மான வழி­பாட்டுச் சூழலை உரு­வாக்­குதல் ஆகி­யவை இதில் உள்­ள­டங்கும்.

சவூதி உள்­துறை அமைச்­சகம், இறை­வனின் விருந்­தி­னர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான பல முன்­மு­யற்­சி­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில், ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்­டிற்­கான ஹஜ் விசாவில் சவூதி அரே­பி­யா­வுக்குள் வரு­ப­வர்­க­ளுக்­கான டிஜிட்டல் அடை­யாள சேவை மிகவும் முக்­கி­ய­மா­னது. சவூதி அரே­பிய இறைச்­சி­யத்தின் “விஷன் 2030” இன் இலக்­கு­க­ளுடன் இணங்கி, மனி­த­கு­லத்­திற்கு சேவை செய்ய, டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சாங்­கத்தின் முயற்­சி­களின் ஒரு பகு­தி­யாக இந்த முன்­மு­யற்சி உள்­ளது.

இரண்டு புனிதத் தலங்­களின் பாது­கா­வலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத், 88 நாடு­களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்­களை உள்­ள­டக்­கிய 4,300 யாத்­தி­ரி­கர்­களை தனது விருந்­தி­னர்­க­ளாக அழைக்க உத்­த­ர­விட்­டுள்ளார். இதில் 2,000 யாத்­தி­ரி­கர்கள் தியா­கிகள், கைதிகள், காய­ம­டைந்த பலஸ்­தீ­னி­யர்­களின் குடும்­பங்­க­ளையும், சவூதி அரே­பி­யாவில் பிரிக்­கப்­பட்ட சியாமி இரட்­டை­யர்­களின் குடும்­பங்­க­ளையும் சேர்ந்த 22 யாத்­தி­ரி­கர்­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளனர். இது ஹஜ் மற்றும் உம்­ரா­வுக்­கான இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரின் விருந்தினர்களுக்கான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும்.

இறைவனுடைய புனித பள்ளிவாயில்களின் யாத்திரிர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சவூதி அரேபிய இராச்சியம் மேற்கொண்டு வரும் விரிவான திட்டங்கள் மற்றும் நவீன முன்னேற்றங்கள் அதன் அர்ப்பணிப்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இப்பணியை முன்னெடுக்கும் இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோருக்காக யாத்திரிகர்கள் பிரார்த்திக்கின்றனர். அவ்வாறே, சவூதி அரேபியா பாதுகாப்பும் செழிப்பும் நிரம்பி, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கலங்கரை விளக்கமாக நீடிக்கவும் பிரார்த்திக்கின்றோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.