திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறு விவகாரம் : சட்ட ரீதியாக தீர்வினை பெற முன்வருவோம்!

0 355

எப்.அய்னா

அண்­மையில் பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்ட போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­ட­மை­யா­னது, பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விடயம் பாரா­ளு­மன்­றத்­திலும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. எனினும் இது­வரை அம்­மா­ண­வி­களின் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டா­மையால், அவர்கள் பெறும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

உண்­மையில் இந்த விட­யத்தை சிறு விட­ய­மாக கருதி விட முடி­யாது.
இந்த விட­யத்தில் பரீட்சை மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பல நிகழ்­வுகள், புனித ஜோசப் பரீட்சை மண்­ட­பத்தின் பொறுப்­ப­தி­காரி மற்றும் மூதூரைச் சேர்ந்த மேல­திக உதவி அதி­கா­ரியின் நட­வ­டிக்கை குறித்து பாரிய சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. எனவே அது தொடர்பில் நியா­ய­மான பிரத்­தி­யேக விசா­ர­ணைகள் அவ­சி­ய­மாகும்.

திரு­கோ­ண­மலை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாட­சா­லை­களை விட, குறிப்­பாக ஸாஹிரா கல்­லூ­ரியின் பரீட்சை பெறு­பெ­று­களின் அடிப்­ப­டையில், கடந்த 10 வருட கால­மாக குறைந்­த­பட்சம் 10 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் மருத்­து­வத்­து­றை­க்கும், பொறி­யியல் துறைக்கும் தேர்­வாகி வரும் நிலையில், இந்த செயல் கல்­லூரி மீதான காழ்ப்­பு­ணர்ச்­சியின் வெளிப்­பா­டாக பாட­சாலை சமூ­கத்­தினால் நோக்­கப்­ப­டு­கின்­றது.

இம்­முறை கூட 04 மாண­விகள் பொறி­யியல் துறைக்கும், 09 இற்கும் மேற்­பட்ட மாண­விகள் மருத்­துவத் துறைக்கும் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள் என்று கல்­லூ­ரியின் அதிபர், ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்கள் எதிர்­பார்த்து காத்­தி­ருந்­த­தாக கூறப்­ப‌­டு­கின்­றது.

இத­னை­விட, இந்த விட­யத்தில் கல்வித் திணைக்­க­ளத்­தினால், கல்­லூரி அதி­ப­ருக்கும் 70 மாண­வி­க­ளுக்கும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது, மேல­திக பரீட்சை பொறுப்­ப­தி­காரி நடந்­து­கொண்ட விதம் தொடர்­பாக, மாண­விகள் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை குழு­வுக்கு முன்­வைத்­துள்­ளனர்.

பரீட்சை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது பரீட்­சார்த்­தி­க­ளுக்கு சாப்­பி­டு­வ­தற்கு கச்சான் வழங்­கி­ய­தா­கவும், பர்­தாவும் துப்­பட்­டாவும் அணிந்­தி­ருந்த மாண­விகள் அனை­வ­ரி­னதும் பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­வ­ர­மாட்­டாது என்­ப­தனை, பல சந்­தர்ப்­பங்­களில் பரீட்சை மேல­திக பொறுப்­ப­தி­காரி கூறி வந்­த­தா­கவும், இதனால் பரீட்­சையில் தோற்­றிய மாண­விகள் பெரும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருந்­த­தா­கவும், கல்வித் திணைக்­கள சட்ட நட­வ­டிக்கை குழு முன்­னி­லையில் அவர்கள் வாக்­கு­மூலம் அளித்­துள்­ள­தாக மாண­விகள் சார்பில் சொல்­லப்­ப­டு­கின்­றது.

மேலும், கல்வித் திணைக்­கள விசா­ரணை குழு­வினர், ஒவ்­வொரு மாண­வி­ய­ரி­டமும் அவர்­களின் வாக்­கு­மூ­லங்­களை எழு­து­வ­தற்கு முன்னர், திரு­மலை வலயக் கல்விப் பணி­ம­னையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்­வதை முதலில் எழுதச் சொன்­ன­தா­கவும், அதன் பின்னர், வாக்­கு­மூலம் எழுத்­து­மூலம் கொடுக்­கப்­பட்ட நிலையில், வலயக் கல்விப் பணி­ம­னையைச் சேர்ந்­த­வர்கள் அவர்கள் கூறு­வ­தையே முடி­வாக எழு­தச்­சொல்லி மாண­வி­களை பணித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பின்னர், “ஒவ்­வொ­ரு­வரும் சுய­மாக எழுத்­து­மூலம், வாக்­கு­மூலம் அளித்­துள்­ளீர்கள். இதில் சில­ருக்கு பரீட்சை பெறு­பே­றுகள் வர­மாட்­டாது” என்றும் கூறி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது மாண­வி­களால் குற்­றம்­சாட்­டப்­படும் மேல­திக பரீட்சை மண்­டப அதி­கா­ரியை பாது­காக்க எடுக்­கப்­பட்ட முயற்சி என்ற குற்­றச்­சாட்டும் பிர­தேச முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளாலும் பாட­சாலை சமூ­கத்­தி­ன­ராலும் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் இவ்­வி­டயம் தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் விஷேட கவனம் செலுத்­தி­யுள்­ள­தாக கல்வி அமைச்சின் தக­வல்கள் தெரி­வித்­தன.

குறித்த 70 மாண­வி­களின் பெறு­பே­று­களை வெளி­யி­டு­வது தொடர்பில் தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கவும் கூறப்­ப‌­டு­கின்­றது.

இந்த விட­ய­மா­னது அர­சியல் நகர்­வுகள் ஊடாக தீர்க்­கப்­பட முயற்­சிக்­கப்­படும் நிலையில், இதனை முற்­றாக அர­சி­ய­லாக்­காமல் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மையை உறுதி செய்யும் விட­ய­மாக சட்ட ரீதி­யா­கவும் அணுக முயற்­சிக்­கப்­படல் வேண்டும்.

குறிப்­பாக இத்­தனை அநீ­திகள் நடந்தும் 70 மாண­வி­களும் குறைந்­த­பட்சம் மனித உரி­மைகள் ஆணைக் குழு­வி­லேனும் முறை­யிட்டு தமது சட்ட உரி­மை­களை பயன்­ப­டுத்த முயற்­சிக்­காமை கவ­லைக்­கு­ரி­யது.

குறிப்­பாக பாட­சாலை சீரு­டை­யுடன் பரீட்சை எழு­தி­ய­வர்­களை அச்­சீ­ரு­டையின் கலா­சார அங்­கத்தை முன்­னி­றுத்தி, மன உளைச்­ச­லுக்கு உள்­ளாக்கி அவர்­க­ளது பெறு­பே­று­களை நிறுத்தி வைத்­துள்­ளமை எந்­த­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாத செயற்­பாடு. இதற்கு சட்ட ரீதி­யாக தீர்வு காணப்­ப­டாத விடத்து, அல்­லது இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு உரிய பாடம் கற்­பிக்­கப்­ப­டா­த­வி­டத்து நாளை மற்­றொரு பகு­தியில் இதனை ஒத்த விட­யங்கள் நடக்­கலாம்.

ஏனெனில் நாம் பரீட்சை காலங்­களில், இவ்­வாறு ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதும் மாண­வி­ய­ருக்கு கொடுக்­கப்­படும் இடை­யூ­றுகள் தொடர்பில் வெறும் செய்­தி­க­ளோடு நின்று விடு­கின்றோம். அப்­படி அல்­லாமல், முஸ்லிம் சமூகம் தமது கலா­சார உரி­மையை அனு­ப­விக்க‌ அவ்­வா­றான உரி­மை­க­ளுக்­காக சட்ட ரீதி­யாக கட்­ட­ளை­களை பெற்­றுக்­கொள்ளும் போது அது எதிர்­கால கசப்­பான நட­வ­டிக்­கை­களை தடுப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தும்.

எனவே தான் இந்த விவ­கா­ரத்தில், கல்வி அமைச்சர், அதி­கா­ரி­க­ளுடன் மக்கள் பிர­தி­நி­திகள் ஊடாக அல்­லது வேறு வழி­களில் பேச்­சுக்கள் நடாத்தும் அதே நேரம், இது­வரை தீர்வு கிடைக்­காத நிலையில், மனித உரிமை ஆணைக் குழுவில் முறை­யி­டவோ அல்­லது மேன் முறை­யீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்து எழுத்தாணை ஒன்றினை பெற்று பரீட்சை பெறுபேறுகளை வெளியிடச் செய்யவோ முயற்சிக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள சட்டத்தரணிகள் தயாராகவே இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க பின்னிற்கக் கூடாது.
அத்தோடு பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்பட்ட இழப்புக்களுக்காக அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் ஊடாக நிவாரணம் பெறவும் முயற்சிக்கப்படல் வேண்டும்.

அப்போது தான் நாளை இன்னுமொரு முஸ்லிம் சகோதரிக்கு அவரது கலாசார ஆடையுடன் பரீட்சை எழுதும் போது, ஆடையை மையப்படுத்தி தேவையற்ற இடையூறுகளை செய்ய இன்னுமொருவர் இரு முறை யோசிப்பார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.