திருகோணமலை சாஹிரா மாணவிகளின் பெறுபேறு விவகாரம்: சபையில் பூதாகரமானது

கடும் அதிருப்தி வெளியிட்டனர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

0 191

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
திரு­கோ­ண­மலை சாஹிரா பாட­சா­லையில் 2023 ஆம் கல்வி ஆண்­டுக்­கான உயர்­தர பரீட்­சைக்கு தோற்­றிய 70 மாண­வி­களின் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டாமை தொடர்­பான விவ­காரம் நேற்றும் நேற்று முன்­தி­னமும் பாரா­ளு­மன்­றத்தில் பூதா­க­ர­மாக வெடித்­தது.

பர்தா அணிந்து பரீட்சை மண்­ட­பத்தில் இருந்­த­மையால் ஆள் அடை­யாளத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாது என அதி­கா­ரிகள் குற்றம் சாட்­டி­யுள்­ள­மையால் குறித்த மாண­வி­களின் பெறு­பேற்றை வெளி­யி­டாமை பெரும் அநீதி என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் இது விட­ய­மாக உரை­யாற்­றி­ய­துடன் கல்­வி­ய­மைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த இதற்கு பதி­ல­ளித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்ற நாட்டின் கல்வி நட­வ­டிக்­கைகள் குறித்த பிரச்­சினை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் போதும் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற பெண்­களின் வலு­வூட்டல் சட்­ட­மூலம் மீதான விவா­தத்தின் போதும் இவ்­வி­வ­காரம் பேசப்­பட்­டது.

ரவூப் ஹக்கீம்
நேற்­றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உரை­யாற்­று­கையில், தலையை மறைத்து ஹிஜாப் அணிந்து பரீட்சை எழு­திய திரு­கோ­ண­மலை சாஹிரா பாட­சாலை மாண­வி­களின் பரீட்சை பெறு­பேறு இடை நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. ஹிஜாப் அணிந்து பரீட்சை எழு­து­வ­தற்கு தடை எதுவும் இல்லை. பரீட்சை மண்­ட­பத்தில் அவர்கள் தங்­களின் காது­களை வெளிப்­ப­டுத்த வேண்டும் என கேட்­டுக்­கொண்டால் அந்த நேரத்தில் அதனை வெளிப்­ப­டுத்­தி­விட்டு பரீட்­சையை எழு­தலாம். மாறாக தலை மறைப்பை முழு­மை­யாக அகற்­றி­விட தேவை­யில்லை.

அதனால் இந்த விடயம் தொடர்­பாக முறை­யான சுற்று நிருபம் ஒன்றை வெளி­யிட நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் குறித்த மாண­வி­களின் பரீட்சை பெறு­பேற்றை வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன் என்றார்.

இஷாக் ரகுமான்
அத்­துடன் இஷாக் ரகுமான் எம்பி. உரை­யாற்­று­கையில்,
திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூ­ரியின் 70 மாண­வி­களின் பெறு­பே­றுகள் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அதனை வெளி­யி­டு­வ­தற்கு அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என அநு­ரா­த­புர மாவ­ட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இஷாக் ரகுமான் தெரி­வித்தார்.

அந்த 70 மாண­வி­களும் எந்­த­வி­த­மான குற்­றமும் இழைத்­த­வர்கள் அல்லர். அவர்கள் மத அடிப்­ப­டையில் பர்தா அணிந்து பரீட்சை மண்­ட­பத்தில் இருந்­ததே குற்­றச்­சாட்­டாக கூறப்­ப­டு­கின்­றது. இது இன­வா­தத்தை அதி­கா­ரிகள் முன்­னெ­டுப்­ப­தையே மிகத் தெளி­வாக காட்­டு­கி­றது. அதற்கு இட­ம­ளிக்க வேண்டாம். உட­ன­டி­யாக இதற்கு தீர்வை முன்­வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதே­வேளை நேற்­று­முன்­தி­னமும் இவ்­வி­வ­காரம் பாரா­ளு­மன்­றத்தில் பேசப்­பட்­டது.

ரிஷாத் பதி­யுதீன்
பர்தா அணிந்து பரீட்சை எழு­தி­ய­மைக்­காக திரு­கோ­ண­மலை மாவட்ட ஸாஹிரா கல்­லூரி மாண­வி­களின் பரீட்சை பெறு­பேறு நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து பெறு­பே­று­களை வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். அத்­துடன் இதற்கு கார­ண­மான அதி­கா­ரிகள் தொடர்­பா­கவும் விசா­ரணை நடத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

மேலும், குறித்த மாண­விகள் பரீட்சை எழு­தும்­போது, பரீட்சை மண்­ட­பத்­துக்கு பொறுப்­பாக இருந்த அதி­காரி ஒருவர் அவர்­க­ளிடம் வந்து, காதுகள் தெரியும் வகையில் பர்­தாவை அணிந்­து­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்ளார். அதன் பிர­காரம் அந்த மாண­வி­களும் அவ்­வாறு செயற்­பட்­டுள்­ளனர். ஆனால் பரீட்சை எழு­திக்­கொண்­டி­ருக்­கும்­போதே அந்த மண்­ட­பத்தில் இருந்த அதி­கா­ரிகள் சிலர், அந்த மாண­வி­க­ளுக்கு கேட்­கும்­வ­கையில், உங்கள் பரீட்சை பெறு­பே­றுகள் வரு­வதை நாங்கள் பார்த்­துக்­கொள்வோம் என பல தட­வைகள் அங்கு வந்து தெரி­வித்­துள்­ளார்கள் என சுட்­டிக்­காட்­டினார்.

அதே­நேரம் மாண­வி­களை விசா­ரணை நடத்­திய அதி­கா­ரிகள் மற்றும் பரீட்சை மண்­ட­பத்தில் இருந்­த­வர்­களின் பெயர்­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். இவர்கள் துவேச அடிப்­ப­டை­யி­லேயே நடந்­து­கொண்­டுள்­ளனர். எனவே பரீட்சை ஆணை­யா­ள­ருடன் இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யாடி உட­ன­டி­யாக அந்த மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­று­களை வெளி­யிட நட­வ­டிக்­கை­ எ­டுக்­கு­மாறு கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்­தவை கேட்­டுக்­கொள்­கிறேன் என்றார்.

எஸ்.எம்.எம்.முஸர்ரப்
திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூ­ரியைச் சார்ந்த முஸ்லிம் மாண­விகள் பரீட்­சையில் தோற்­று­கின்­ற­போது, அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரியம் அதனைத் தொடர்ந்து பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­வந்­த­போது ஏற்­பட்ட அசௌ­க­ரியம், பெறு­பே­றுகள் வெளி­வ­ராத விட­ய­மெல்லாம் சாதா­ரண விட­ய­மல்ல என திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஸர்ரப் தெரி­வித்தார்.

பரீட்சை எழுத வந்த மாண­வி­க­ளுக்கு பர்தா அணிய முடி­யாது என்று ஏதா­வது சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டதா? அவ்­வாறு பர்தா அணிய முடி­யாது, மத சுதந்­தி­ரத்தை பின்­பற்ற முடி­யாது என்று ஏதா­வது சட்டம் இருந்­ததா? என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

ஒரு முஸ்லிம் மாணவி பர்தா அணிந்து பரீட்சை எழுத முடி­யாது என்று ஒரு அதி­காரி தீர்­மானம் எடுத்தால், அந்த அதி­கா­ரிக்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு மேல­தி­கா­ரிகள், மாகாண கல்­வித்­தி­ணைக்­களம், ஆளுநர், கல்வி அமைச்சின் அதி­கா­ரிகள் என்ன செய்­தனர் என்­ப­தெல்லாம் கடந்து செல்லக் கூடிய ஒரு விட­ய­மல்ல என்றார்.

எம்.எஸ்.தௌபீக்
திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூ­ரியில் பரீட்­சைக்கு தோற்­றிய 70 மாண­வி­க­ளுக்கும் இழைக்­கப்­பட்­டது பெரும் அநீ­தி­யாகும். கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக பெரும் பொரு­ளா­தார சுமை­க­ளுக்கு மத்­தியில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு செல்ல வேண்டும் என்ற அவாவில் கற்று பரீட்­சைக்கு தோற்­றி­னார்கள் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குறிப்­பிட்டார்.

பர்தா அணிந்து பரீட்­சைக்கு சென்­றார்கள் என்ற அடிப்­ப­டை­யிலும் ஆள் அடை­யாளம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனம் குற்­றச்­சாட்­டிலும் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது பாரிய அநீ­தி­யாகும்.

பரீட்சை திணைக்­க­ளத்­திற்கு சென்று சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் பேசி­ய­போது இன்னும் ஓரிரு வாரங்­களில் பெறு­பேற்றை வெளி­யிட எதிர்ப்­பார்ப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார். எனவே அவ­ச­ர­மாக பெறு­பேற்றை வெளி­யி­ட­வேண்டும் என்று இந்த உய­ரிய சபையில் கல்வி அமைச்­சுக்கும் அரசாங்கத்திற்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.