காஸா சிறுவர்களுக்கான நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா நன்கொடையளிப்பு

0 120

காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு இலங்கை நன்­கொ­டை­யா­ளர்கள் மற்றும் பல்­வேறு அமைப்­புக்­க­ளினால் கடந்த திங்­கட்­கி­ழமை வரை 127 மில்­லியன் ரூபா நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் எண்­ணக்­க­ரு­வில் கடந்த மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­துடன் கைகோர்த்த அனைத்து நன்­கொ­டை­யா­ளர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி அலு­வ­லகம் நன்றி தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், நாளை 31 வரை பங்­க­ளிப்பு வழங்க கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

காஸாவில் காணப்­படும் யுத்த சூழ்­நிலை கார­ண­மாக அப்­ப­கு­தியில் சிக்­கி­யுள்ள சுமார் ஒரு மில்­லியன் சிறு­வர்­களின் அவ­ல­நிலை, குறிப்­பாக தண்ணீர், உணவு மற்றும் மருத்­துவ வச­திகள் இன்மை கார­ண­மாக அவர்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு சிர­மங்­களைக் கருத்தில் கொண்டு, அவர்­களின் அத்­தி­யா­வ­சிய செல­வு­களை ஈடு­கட்ட மனி­தா­பி­மான உதவி வழங்­கு­வ­தற்­காக நிதி­ய­மொன்றை ஆரம்­பிக்க அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­தது.

அதற்­க­மைய காஸா­வி­லுள்ள சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக நிதி­ய­மொன்றை ஆரம்­பிப்­ப­தற்­காக, கடந்த இப்தார் நிகழ்­வுக்­காக ஜனா­தி­பதி அலு­வ­லகம், பிர­தமர் அலு­வ­லகம் மற்றும் அரச நிறு­வ­னங்கள் என்­ப­வற்­றினால் ஒதுக்­கப்­பட்ட ஒரு மில்­லியன் டொலர் நிதி முதற்­கட்­ட­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் நிவா­ரண மற்றும் பணி முகவர் நிறு­வ­னத்தின் (UNRWA) ஊடாக 04.01.2024 ஆம் திகதி பலஸ்­தீன அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

அத்­துடன், இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொ­டைக்கு மேல­தி­க­மாக, காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு பங்­க­ளிக்­கு­மாறு வர்த்­தக நிறு­வ­னங்கள், பல்­வேறு நிறு­வ­னங்கள் மற்றும் பொது­மக்­க­ளிடம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­ விடுத்த வேண்­டு­கோ­ளுடன் இலங்­கையின் நன்­கொ­டை­யா­ளர்கள் மற்றும் பல்­வேறு நிறு­வ­னங்கள் என்­பன கைகோர்த்­தன.

இதன்­படி, காஸா பகு­தியில் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு உள்­ளாகும் குழந்­தை­களின் அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக அந்த நிதி எதிர்­கா­லத்தில் ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி முகவர் அமைப்­பிடம் வழங்­கப்­பட உள்­ளது.

மேலும், பல்­வேறு தரப்­பி­னரும் முன்­வைத்த கோரிக்­கை­களை கருத்தில் கொண்டு மே 31ஆம் திகதி வரை இதற்­காக பொது­மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு, மேற்கண்ட தொகையுடன், அதுவரை பெறப்பட்ட முழு நன்கொடைகளும் துரிதமாக ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.