இஸ்ரேலின் அராஜகத்தை கண்டித்து குரல் எழுப்பாமல் இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடுகிறது

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கடும் அதிருப்தி

0 83

(பேரு­வளை பீ.எம்.முக்தார்)
பலஸ்­தீனம் மீது இஸ்ரேல் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றது. இந்த அரா­ஜ­கத்தை பல ஐரோப்­பிய நாடுகள் கண்­டித்து வரு­கின்ற நிலையில் இலங்கை அர­சாங்கம் இரட்டை வேடம் போட்டு இஸ்­ரே­லுடன் தேனி­லவு கொண்­டா­டு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் அதி­ருப்தி வெளி­யிட்டார்.

அத்­துடன், பலஸ்­தீனில் பச்­சிளம் பால­கர்கள் உட்­பட கொத்து கொத்­தாக அப்­பாவி மக்கள் படு­கொலை செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்றும் (செவ்­வா­யன்று) கூட அக­திகள் முகாம் ஒன்றில் ஒரே நேரத்தில் 65 அப்­பாவி உயிர்கள் காவுகொள்ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இது தினந்­தோறும் இடம்­பெறும் சோக நிகழ்­வாக வர­லாற்றில் கரும்­புள்­ளியைப் பதிவு செய்து கொண்­டி­ருக்­கின்­றது என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

பேரு­வளை மரு­தா­னையில் இடம் பெற்ற கூட்­ட­மொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இன்று உலகில் எங்கும், எவ­ராலும் இழைக்­கப்­ப­டாத மாபெரும் கொடு­மைகள் இஸ்­ரேலால் பலஸ்­தீ­னுக்கு திணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. மனி­தா­பி­மா­னமே வெட்கித் தலை குனியும் அள­வுக்கு பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள், பள்­ளி­வா­சல்கள், அகதி முகாம்கள், மக்கள் குடி­யி­ருப்­புகள் என்­றெல்லாம் தினந்­தோறும் குண்டு மழை பொழி­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. பலஸ்­தீன காஸாவை கப­ளீ­கரம் செய்ய காட்டு தர்பார் அரங்­கேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. சொந்த மண்­ணிலே காலூன்ற முடியா வண்ணம் பலஸ்­தீ­னத்தை மண்­மூடி மறைக்­கப்­பார்க்கும் இஸ்ரேல் விரைவில் மண் கவ்வும் காலம் வெகு தூரத்தில் இருக்­காது.

உலகில் சமா­தா­னத்தை நிலை நாட்ட வேண்­டிய ஐக்­கிய நாடுகள் சபை­யையும் இஸ்­ரேலை தடவிக் கொடுக்கும் வல்­ல­ரசுகள் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனால் நீதி, நியாயம் சாக­டிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

இஸ்­ரேலின் அரா­ஜ­கத்தை உலகின் ஏரா­ள­மான நாடுகள் கண்­டித்த வண்ணம் இருக்­கின்­றன. ஐரோப்­பிய சம்­மே­ளன நாடு­களும் தம் கண்­டனக் கணைகளை வெளி­யி­டு­கின்­றன. அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே இஸ்ரேல் தன் பேர­ழிவை பலஸ்­தீ­னுக்கு இழைத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

இதிலும் கவலை என்­ன­வென்றால் எமது இலங்கை நாடு பெரும் இரட்டை வேடத்­திலும் கேவ­ல­மான முறையில் இஸ்­ரேலின் அரா­ஜ­கத்தை கண்­டித்து குரல் எழுப்­பாமல் இருக்­கி­றது. இதிலும் மேலும் கேவலம் என்­ன­வென்றால் இஸ்­ரே­லுடன் தேனி­லவு நடத்திக் கொண்­டி­ருக்­கி­றது. எமது வாலி­பர்­களை அங்கு வேலைக்கு அனுப்ப தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது. இது வெந்த புண்­ணிலே வேல் பாய்ச்சும் செய­லாகும். அல்­லது எரியும் நெருப்பில் சுருட்டுப் பற்ற வைக்கும் கபட நாட­க­மா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

ரஷ்யா –உக்ரேன் போர்க்­க­ளத்­துக்கு எமது ஓய்வு பெற்ற இரா­ணுவ வீரர்­களை பணிக்கு அனுப்பி அதனால் ஏற்­பட்ட உயிர் பலி­யான விப­ரீத விளை­வுகள் பற்றி அண்மையில் பாராளுமன்றத்தில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் பிரஸ்தாபித்ததை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே உலகில் நீதி, நியாயம் நிலைநாட்டப்பட இஸ்ரேலின் காட்டு தர்பாரை நிறுத்தும் படி மக்கள் அரசை கோர வேண்டும் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.