“நாடோடிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்”

அகதி முகாம்களை இலக்கு வைத்தும் தாக்கும் இஸ்ரேல்

0 212

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த வருடம் அக்­டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்­போது உச்­சத்தைத் தொட்­டுள்­ளது.
இஸ்ரேல் இரா­ணுவம் கடந்த சனிக்­கி­ழமை முதல் காஸா வட­ப­கு­தியின் ஜபா­லியா அக­திகள் முகாம் மீது தொடர்ச்­சி­யாக குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. ஹமாஸ் போரா­ளிகள் இப்­ப­கு­தியில் குழுக்­க­ளாக ஒன்­றி­ணைந்­துள்­ள­தாலே இத்­தாக்­குதல் மேற்­கொள்­ள­பட்டு வரு­வ­தாக இஸ்­ரே­லிய இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

இஸ்ரேல் இரா­ணுவ யுத்த தாங்­கிகள் ஜபா­லியா அக­திகள் முகாமை நோக்கி முன்­னேறிச் செல்­வ­தாக அப்­ப­கு­தி­யி­லி­ருந்து வெளி­யேறிக் கொண்­டி­ருக்கும் பலஸ்­தீ­னி­யர்கள் தெரி­விக்­கின்­றனர். அகதி முகா­மி­லி­ருக்கும் ஆயுதம் தரித்த பலஸ்தீன் குழுக்கள் தாமும் இஸ்ரேல் இரா­ணு­வத்தை எதிர்த்து போராடிக் கொண்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளன.

ரபா மீது இஸ்ரேல் மேற்­கொண்டு வரும் இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக கடந்த ஒரு வாரத்தில் சுமார் மூன்று இலட்­சத்து 60 ஆயிரம் பலஸ்­தீ­னர்கள் ரபா­வி­லி­ருந்தும் வெளி­யே­றி­யுள்­ளனர்.

சுமார் ஒரு மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் அக­தி­க­ளாக தஞ்சம் புகுந்­துள்ள ரபாவின் மக்­களை அங்­கி­ருந்தும் வெளி­யே­று­மாறு இஸ்ரேல் இரா­ணுவம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

ரபா­வி­லுள்ள ஹமாஸ் போரா­ளி­களை அங்­கி­ருந்தும் வெளி­யேற்­றாது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது அரா­ஜ­க­மாகும். இதனால் பொது மக்­களே பாதிப்­புக்­குள்­ளா­வார்கள் என அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் அந்­தனி பிளின்கன் இஸ்­ரேலை எச்­ச­ரித்­துள்ளார்.

ஜபா­லியா அக­திகள் முகாமைச் சேர்ந்­த­வர்­களில் அநேகர் கால்­ந­டை­யாக அங்­கி­ருந்தும் வெளி­யே­று­கி­றார்கள். ஜபா­லியா அக­திகள் முகாமை நோக்கி இஸ்­ரே­லிய யுத்த தாங்­கிகள் முன்­னேறி வரு­வ­தாலே தாம் கஷ்­டத்­துக்கு மத்­தியில் வெளி­யே­று­வ­தாக அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

‘எங்கு செல்­வது என்று எமக்குத் தெரி­யாது. நாங்கள் ஒவ்வொரு பகு­திக்கு இடம்­பெ­யர்ந்து வரு­கிறோம். நாங்கள் வீதி­களில் அச்­சத்­தினால் ஓடு­கிறோம். யுத்த தாங்­கிகள் மற்றும் புல்­டோ­சர்கள் முன்­னேறி வரு­வதை நான் என் கண்­க­ளி­னாலே பார்த்தேன்’ என்று பெண்­ம­ணி­யொ­ருவர் ராய்டர் செய்திச் சேவைக்குத் தெரி­வித்தார்.

இஸ்­ரே­லிய யுத்த விமா­னங்கள் மத்­திய காஸாவின் நுஸைரத் அக­திகள் முகாம் வீடொன்றின் மீது குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யதால் சிறுவர்கள் உள்­ள­டங்­க­லாக 14 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் வைத்­திய அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

கண்­மூ­டித்­த­ன­மாக குறிப்­பாக சிறு­வர்­களை கொல்­வதை இஸ்ரேல் உடன் நிறுத்திக் கொள்ள வேண்­டு­மென யுனிசெப் அதி­கா­ரிகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். ஐ.நா.வைச் சேர்ந்த வெளி­நாட்டுப் பணி­யாளர் ஒருவர் கொல்­லப்­பட்­டதை ஐ.நா.வின் தலைவர் அந்­தோ­னியோ குட்­டரஸ் கண்­டித்­துள்ளார். ரபாவில் ஐ.நா.வின் வாகனம் மீது இஸ்ரேல் தாக்­குதல் மேற்­கொண்­டதால் அவர் பலி­யானார். இது தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இதே­வேளை இஸ்ரேல் இரா­ணுவம் ரபா­வி­லுள்ள குவைத் வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்­களை அங்­கி­ருந்தும் வெளி­யே­று­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. இதனால் காஸாவின் சுகா­தார கட்­ட­மைப்பு பிராந்­தி­ய­மெங்கும் ஸ்தம்­பித்து விடு­மென காஸாவின் சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த வருடம் அக்­டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் கார­ண­மாக இது­வரை சுமார் 35,091 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். 78, 827 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இதே­வேளை 1,139 இஸ்­ரே­லி­யர்கள் பலி­யா­கி­யுள்­ள­துடன் நூற்­றுக்கும் மேற்­பட்டோர் பணயக் கைதி­க­ளாக உள்­ளனர்.

இஸ்­ரே­லுக்கு எதி­ராக 33 தாக்­கு­தல்கள்
ஜபா­லி­யாவில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­திற்கு எதி­ராக பலஸ்தீன் ஆயுதக் குழுக்கள் 33 தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளன. ஹமாஸ் போரா­ளி­க­ளே இவற்றில் அதிக எண்­ணிக்­கை­யி­லான தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.

நாடோ­டி­க­ளாக மாறி­யுள்ளோம்
வட காஸாவில் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தரை­வழி தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­துள்­ளது. இஸ்­ரே­லிய படை­யினர் ஐ.நா.வின் அக­திகள் கூடா­ரங்கள் மீது தாக்­குதல் நடத்­து­கின்­றனர். இதனால் அகதி முகாமில் தஞ்­ச­ம­டைந்­துள்ள பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் அங்­கி­ருந்தும் மீண்டும் தப்­பி­யோட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து நாங்கள் ஐ.நா. நடாத்தும் பாட­சா­லை­களில் தங்­கி­யி­ருக்­கிறோம். அப்­போ­தி­லி­ருந்து இஸ்­ரே­லிய சிப்­பாய்கள் பாட­சா­லை­களை முற்­று­கை­யிட்டு வந்­தார்கள். இதன்­பின்பும் எம்மால் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. எமது பிள்­ளை­க­ளுடன் நாங்கள் பல மாதங்­க­ளாக வீடு­க­ளின்றி வாழ்­கிறோம். எம்­மீது ஏவு­க­ணை­களும், குண்­டு­களும் பொழி­யப்­பட்டு வரு­கின்­றன. நாங்கள் தற்­போது இங்­கி­ருந்தும் வெளி­யே­று­வ­தற்குப் பல­வந்­தப்­ப­டுத்தப் பட்­டுள்ளோம். நாங்கள் தற்­போது நாடோ­டி­க­ளாக மாறி­யுள்ளோம் என ஜபா­லியா அகதி முகாமைச் சேர்ந்த சுவாத் அல்பிஸ் தெரி­வித்­துள்ளார்.

வட காஸாவின் நிலைமை விப­ரீ­த­மாக மாறி­யுள்­ளது. நாங்கள் பெரும் துய­ரத்தில் வாழ்­கிறோம். நாங்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயர்வதற்கு பலவந்தப்படுத்தப்பட்டு வருகிறோம். என பெண்மணியொருவர் தெரிவித்தார். அவர் தனது பிள்ளைகள் மற்றும் உடமைகளுடன் இடம்பெயர்வதற்கு தயாரான நிலையில் உலகம் இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்களது பிள்ளைகள் குண்டுத் தாக்குதல்களால் இறப்பதை விட பசியினாலும், நோயினாலும் இறக்கிறார்கள். உலகம் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும். யுத்த நிறுத்தம் மூலம் இக்கொடிய யுத்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.