கட்­டாரில் இடம்­பெற்ற சர்­வ­மத கலந்து­ரை­யாடல் மாநா­டு

0 378

றிப்தி அலி

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திக­தி­களில் கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹாவில் இடம்­பெற்­றது. கட்டார் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு மற்றும் மாநா­டு­களை ஏற்­பாடு செய்­வ­தற்­கான நிரந்­தரக் குழு ஆகி­ய­வற்­றுடன் இணைந்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடு­களைச் சேர்ந்த 300 பேர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா மாநாடு கடந்த 2003ஆம் ஆண்டு கட்­டாரில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டது. கட்­டாரின் அப்­போ­தைய ஆட்­சி­யா­ள­ரான ஷேக் ஹம்மாத் பின் கலீபா அல் தானியின் வழி­காட்­டலில் இந்த மாநாடு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இம்­முறை நடை­பெற்­றது 15ஆவது மாநா­டாகும்.
அன்­றி­லி­ருந்து இன்று வரை இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை இந்த மாநாடு தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. குறிப்­பாக இஸ்லாம், கிறிஸ்­தவம் மற்றும் யூதம் ஆகிய சம­யங்­க­ளுக்கு இடையில் நல்­லெண்­ணத்­தினை உரு­வாக்­கக்­கூ­டிய கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ளும் வகை­யி­லேயே இந்த மாநாடு நடத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த சர்­வ­தேச மாநாட்டின் விளை­வாக கட்டார் அரசின் அனு­ச­ர­ணை­யுடன் கடந்த 2007ஆம் ஆண்டு சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா சர்­வ­தேச நிலையம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

மதங்­க­ளுக்கு இடை­யி­லான கலந்­து­ரை­யாடல், கலாச்­சா­ரங்­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்­பினை முன்­னெ­டுத்தல் மற்றும் திறன் மேம்­பாடு போன்­ற­வற்­றினை சர்­வ­தேச ரீதியில் மேற்­கொள்­வ­தற்­காக கட்­டா­ரினைத் தள­மாகக் கொண்டு இந்த நிறு­வனம் செயற்­ப­டு­கின்­றது.

மூன்று சம­யங்­களின் சமயத் தலை­வர்­களும் இதன் சர்­வ­தேச ஆலோ­சனை சபையின் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இலங்­கை­யினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இக்­கட்­டு­ரை­யா­ள­ருடன் சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான செயற்­பட்­டாளர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர், பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் விரி­வு­ரை­யாளர் அஷ்ஷெய்க் அர்கம் ரசாக் ஆகியோர் இந்த வரு­ட மாநாட்டில் பங்­கேற்­றி­­ருந்­தனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் முன்னாள் பணிப்­பாளர் மர்ஹூம் கலா­நிதி எம்.ஏ.எம். சுக்ரி, அதன் தற்­போ­தைய முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ அகார் முஹம்மத், சமூக செயற்­பட்­டா­ளர்­க­ளான பாதில் பாக்கீர் மாக்கார் மற்றும் ஹிசாம் முஹம்மத் போன்றோர் கடந்த காலங்­களில் இலங்­கை­யினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இந்த மாநாட்டில் பங்­கேற்­றுள்­ளனர்.

கட்­டாரின் பிர­தம மந்­தி­ரியும், வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசீம் அல் தானியின் ஆத­ர­வுடன் “மாறி­வரும் உலகில் குடும்ப கட்­ட­மைப்பு: மதக் கண்­ணோட்டம்” எனும் தலைப்பில் இந்த வரு­டத்­திற்­கான மாநாடு இடம்­பெற்­றது. இதன் உப தலைப்­பாக குடும்­பங்­களின் ஒருங்­கி­ணைப்பு, நம்­பிக்கை, மதிப்­புக்கள் மற்றும் கல்வி ஆகி­யன காணப்­பட்­டன.

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா சர்­வ­தேச நிலை­யத்தின் பணிப்­பாளர் பேரா­சி­ரியர் இப்­றாஹீம் சாலே அல் நையிமி தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாடு கட்டார் வெளி­வி­வ­கார அமைச்சின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புக்­கான இரா­ஜாங்க அமைச்சர் லோல்வா பின்த் ராசித் அல் ஹக்­த­ரினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

இதன்­போது 5ஆவது தட­வை­யாக வழங்­கப்­படும் சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா சர்­வ­தேச விரு­திற்­கான வெற்­றி­யா­ளர்­களும் அறி­விக்­கப்­பட்­டனர்.

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­காக உழைக்­கின்ற தனி­ந­பர்­க­ளிற்கும் அமைப்­புக்­க­ளிற்கும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த வருடம் தனி­நபர் பிரிவின் கீழ் காஸாவில் மனித நேயப் பணியில் ஈடு­பட்டு வரு­கின்ற வைத்­திய நிபு­ண­ரான பேரா­சி­ரியர் மேட்ஸ் கில்பர்ட் மற்றும் ஜேர்­தானின் அபி­வி­ருத்தி மற்றும் பயிற்­சிக்­கான இள­வ­ரசி தாக்ரிட் நிலை­யத்தின் பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி அகதீர் ஜெவீஹான் ஆகி­யோ­ருக்கு விரு­துகள் வழங்­கப்­பட்­டன.

அதே­வேளை, சீனாவின் அமித்தி பவுண்­டேசன் மற்றும் ஜப்­பானின் இஸ்­லா­மிய மன்றம் ஆகி­ய­வற்­றுக்கு அமைப்பு பிரிவின் கீழ் விரு­துகள் வழங்­கப்­பட்­டன.
இதே­வேளை, காஸாவில் வாழும் குடும்­ப­மொன்­றுக்கும் இந்த விரு­தினை அர்ப்­ப­ணிப்புச் செய்ய விருதுக் குழு தீர்­மா­னித்­தி­ருந்­தமை சிறப்­பம்­ச­மாகும்.

பலஸ்­தீன மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக வழங்­கப்­படும் உத­வியின் ஒரு பகு­தி­யாக வழங்­கப்­பட்ட இந்த விரு­தினை கட்டார் செரிட்­டியின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான யூசுப் பின் அஹமத் அல் குவாரி பெற்­றுக்­கொண்டார்.
இதே­வேளை, காஸா­வினைச் சேர்ந்த சிறுவன் ரமதான் மஹ்மூத் அபு ஜஸார் இந்த மாநாட்டில் நிகழ்த்­திய உரை, பங்­கு­பற்­று­னர்கள் அனை­வ­ரையும் கண் கலங்கச் செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு பல்­வேறு சிறப்­பம்­சங்­களைக் கொண்ட இந்த மாநாட்டில் 25க்கு மேற்­பட்ட குழுக் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. உல­க­ளா­விய ரீதியில் முக்­கி­யத்­து­வ­மிக்க தலைப்­புக்­களில் இடம்­பெற்ற குழுக் கலந்­து­ரை­யா­டல்­களில் புகழ்­பெற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பேரா­சி­ரி­யர்கள், செல்­வாக்குமிக்க சமயத் தலை­வர்கள் மற்றும் சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான செயற்­பட்­டா­ளர்கள் எனப் பல்­வேறு தரப்­பினர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இந்த மாநாட்டின் நிறைவு அமர்வில் புகழ்­பெற்ற இஸ்­லா­மிய பிர­சா­ரக­ரான டாக்டர் சாகிர் நாயிக் மற்றும் வத்­தி­கானின் ஆயர் யூஜின் மார்ட்டின் நுஜென்ட் ஆகியோர் சிறப்­பு­ரை­யாற்­றினர்.

இவ்­வாறு சிறப்பு மிக்க இந்த மாநாட்டின் போது இஸ்லாம், கிறிஸ்­தவம் மற்றும் யூதம் ஆகிய சமயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களுக்கான தெளிவுகள் பங்குபற்றுனர்களுக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமல்லாமல், பல்வேறு சமயத்தவர்களுடன் தனிப்பட்ட தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், அவர்களிடமிருந்து பல கேள்விகளுக்கு விளக்கங்களும் கிடைக்கப் பெற்றன. இது போன்ற மாநாடுகளை தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யுமாறு இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பங்குபற்றுனர்கள் அனைவரும் கட்டார் அரசாங்கத்திடமும் சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா சர்வதேச நிலையத்திடமும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.