ஆளுநராக நஸீர் அகமதை நியமித்தமைக்கு பிக்குகள் எதிர்ப்பு

0 238

சிங்­க­ளத்தில் : புஷ்­ப­கு­மார ஜய­ரத்­ன
தமி­ழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
நன்றி: லங்­கா­தீ­ப

இதே­வேளை வெற்­றி­ட­மா­கிய வடமேல் மாகாண சபையின் ஆளுநர் பத­விக்கு முன்னாள் அமைச்­ச­ரான நஸீர் அஹமட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து அர­சாங்­கத்தின் இந்தத் தீர்­மா­னத்தை வடமேல் மாகாண திரைய் நிக்­காய பிக்­குகள் ஒன்­றியம் எதிர்த்து பலத்த கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது.
அத்­தோடு வடமேல் மாகாண திரைய் நிக்­காய (மூன்று நிக்­கா­யாக்­களின்) பிக்­குகள் ஒன்­றி­யத்தின் தேரர்கள் குழு­வொன்று வடமேல் மாகாண ஆளு­நரின் செய­லாளர் இந்­திக இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிர­தம செய­லாளர் தீபிகா குண­ரத்ன ஆகி­யோரை கடந்த மாதம் 30ஆம் திகதி சந்­தித்து இந்­நி­ய­மனம் தொடர்பில் தங்­க­ளது எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர்.

என்­கந்த ரஜ­மகா விகாரை அதி­பதி அஸ்­கி­ரிய பிரிவு அநு­நா­யக்க ஆன­ம­டுவே தம்­ம­தஸ்ஸி தேரரின் கையொப்பம் மற்றும் வடமேல் மாகாண பிர­தான தேரர்கள் பலரின் கையொப்­பங்கள் அடங்­கிய, நஸீர் அஹ­மட்டின் நிய­ம­னத்­துக்கு எதி­ரான மக­ஜ­ரொன்று வடமேல் மாகாண ஆளு­நரின் செய­லாளர் மற்றும் வடமேல் மாகாண பிர­தம செய­லாளர் ஆகி­யோ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

குறிப்­பிட்ட மக­ஜரை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கு­மாறு தேரர்­களால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் குரு­நாகல் மாவட்ட புத்­த­சா­சன பாது­காப்பு சபையின் பிர­தம செய­லாளர் வடு­கெ­தர சாரா­நந்த தேரர் கருத்து வெளி­யிட்டார். அவர் அங்கு உரை­யாற்­று­கையில், ‘எமது நாட்டின் மிகவும் முக்­கிய பெளத்த மர­பு­ரி­மை­க­ளுக்கு வடமேல் மாகாணம் சொந்­த­மாக உள்­ளது. இவ்­வா­றான பெளத்த மர­பு­ரி­மை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் பெற்­றுள்ள வடமேல் மாகா­ணத்தின் முக்­கிய அரச பத­வி­யொன்­றுக்கு பெளத்தர் அல்­லாத வேற்று மத­த்­தவர் ஒரு­வரை ஜனா­தி­பதி நிய­மித்­தி­ருப்­பதை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். எதிர்க்­கிறோம். வடமேல் மாகாண ஆளுநர் பத­விக்கு வடமேல் மாகா­ணத்தைச் சேர்ந்த ஒரு­வரோ அல்­லது வடமேல் மாகா­ணத்­துக்கு வெளியில் தகு­தி­யான ஒரு­வரோ நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென நாங்கள் கோரிக்கை விடுக்­கிறோம்.

பெளத்த வர­லாற்­றுக்கு உரிமை கோரும் வடமேல் மாகா­ணத்தின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்கு பெளத்த தலைவர் ஒரு­வரே அங்கு ஆளு­ந­ராகக் கடமை புரிய வேண்டும். பெளத்தர் அல்­லாத ஒருவர் வடமேல் மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால் அங்கு பல பிரச்­சி­னைகள் உரு­வாக கார­ண­மாக அமையும். அதனால் வடமேல் மாகா­ணத்தில் பிரச்­சி­னைகள் உரு­வா­கா­ம­லி­ருப்­ப­தற்கு அங்கு தகு­தி­யான ஒரு­வரை ஆளு­ந­ராக நிய­மிக்­கும்­படி அர­சாங்­கத்தைக் கோரு­கிறோம்.

அவ்­வாறு தகு­தி­யான ஒருவர் வடமேல் மாகா­ணத்­துக்கு ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­டா­விட்டால் வடமேல் மாகாண மூன்று நிக்­கா­யாக்­களின் பிர­தி­நி­தி­க­ளான தேரர்கள் நாம் கடு­மை­யான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யேற்­படும்’’ என சாரா­நந்த தேரர் தெரி­வித்தார்.

இதற்கு முன்பும் வடமேல் மாகா­ணத்­துக்கு ஆளு­ந­ராக எம்.ஜே.எம். முஸம்மில் நிய­மிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும் இது போன்றே தேரர்கள் எதிர்ப்­பினை வெளி­யிட்­டார்கள்.இறு­தியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து எதிர்ப்புகளையும் முன்னாள் ஆளுநர் முஸம்மில் வெற்றிகொண்டு தேரர்களுடன் இணைந்து தனது கடமைகளை முன்னெடுத்து வந்தார். தேரர்களின் நம்­பிக்­கை­யை அவர் பெற்­றிருந்தார். பெளத்த மத விவகாரங்களைக் கையாள்வதற்காக அவர் பிரத்தியேகமாக செயலாளர் ஒருவரையும் நியமித்திருந்தமையும் குறிப்­பி­டத்­தக்­க­து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.