பஸ் கட்டணமானது நான்கு சதவீதத்தால் குறைவடையுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைகள், பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட நிலையில், பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில், இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை, நிதியமைச்சில் இடம்பெற்றது.
ஒரு லீற்றர் டீசலின் விலையை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவினாலும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பஸ் கட்டணமானது நான்கு சதவீதத்தால் குறைவடையுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் ஆரம்ப பஸ் கட்டணத்தில் எவ்விதமான மாற்றங்களுமில்லையென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதுவரை டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதிபலனை பயணிகளுக்குப் பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும், சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
-விடிவெள்ளி