மௌலவி ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம்

வெற்றிடங்கள் குறித்த விபரம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு அமைச்சரவை அனுமதியின் பின் நியமனங்களை வழங்க தீர்மானம்

0 252

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் மெள­லவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வது தொடர்பில் கல்வி அமைச்சின் விட­யத்­துக்குப் பொறுப்­பான பிரிவு கவனம் செலுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நாட்டில் சில மாகாண பாட­சா­லை­களில் மெள­லவி ஆசி­ரி­யர்கள் தேவைக்கு மேல­தி­க­மான எண்­ணிக்­கையில் கட­மையில் இருப்­பதால் அது தொடர்­பான விப­ரங்­களை கல்வி விட­யத்­துக்குப் பொறுப்­பான பிரிவு சேக­ரித்து வரு­வ­தாக கல்வி அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இதே­வேளை கல்வி அமைச்சின் ஆசி­ரிய நிய­மன பிரிவு தற்­போது பட்­ட­தாரி ஆசி­ரியர் நிய­ம­னங்­களை வழங்கி வரு­வ­தா­கவும் இந் நிய­ம­னங்­களில் இஸ்லாம் பயின்ற பட்­ட­தா­ரி­களும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர்­களால் இஸ்லாம் போதிக்க முடி­யு­மெ­னவும் அவர் கூறினார்.

முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் மெள­லவி ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் கணக்­கி­டப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் பின்பே நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­வது சாத்­தியம் என்றும் அவர் கூறினார்.

தசாப்த கால­மாக மெள­லவி ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­ப­டா­மை­யினால் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பாடசாலைகளில் இஸ்லாம் போதிக்கப்படுவது சவாலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.