அடுத்தடுத்து இரு தடவை தீப்பற்றி எரிந்த வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி!

0 419

எஸ்.என்.எம்.சுஹைல்

‘வெலி­கம’ என்ற சிங்­கள பெயர்­கொண்டு அழைக்­கப்­படும் தென்­னி­லங்­கையின் பாரம்­ப­ரிய முஸ்லிம் கிரா­மம்தான் வெலி­காமம். 2008 ஆம் ஆண்­டு­முதல் தென்­னி­லங்­கையில் தீனொளி பரப்பும் கல்விக் கூட­மாக திகழ்­கி­றது வெலி­கம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்­லூரி. வெலி­கம பிர­தேச செய­ல­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டட சமூக சேவை அமைப்­பான வெலி­கம அல் இஹ்ஷான் நலன்­புரி சங்­கத்­தினால் நடத்­தப்­படும் குறித்த அர­புக்­கல்­லூரி, முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் MRCA13/1/PSA/137 எனும் இலக்­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது அங்கு 120 மாண­விகள் கல்வி பயில்­வ­துடன் 10 ஆசி­ரி­யர்­களும் கற்­பிக்­கின்­றனர். மேலும், மார்க்கக் கல்­வி­யுடன் பாட­சாலை பாடத்­திட்­டத்­திற்­க­மைய போத­னை­களும் இடம்­பெ­று­கின்­றன.

கடந்த இரண்டு மாத இடை­வெ­ளிக்குள் இரண்டு தட­வைகள் இந்த பெண்கள் அரபுக் கல்­லூ­ரி­யா­னது தீப்­பற்றி எரிந்த சம்­பவம் பல­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. இத் தீ விபத்­து­க­ளால் மத்­ர­ஸாவின் விடுதி முற்­றாக நாச­மா­கி­யுள்­ளது. எனினும் இதற்­கான காரணம் இது­வரை கண்­டறியப்­ப­ட­வில்லை என அர­புக்­கல்­லூ­ரியின் பணிப்­பாளர் எம்.ஒ.பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி) தெரி­வித்தார்.

கடந்த திங்கட் கிழமை 29 ஆம் திகதி மாலை 4.45 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் வெலி­கம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியின் மூன்றாம் மாடியில் தீப் பரவல் ஏற்­பட்­டுள்­ளது. இதன்­போது, மாண­வர்கள் அனை­வரும் பாட­சாலை கல்வித் திட்­டத்­திற்கு அமைய இடம்­பெறும் வகுப்­பு­களில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். எனினும், ஆசி­ரி­யை ஒரு­வரும் விடுதி மேற்­பார்­வை­யா­ளரும் அங்கு தங்­கி­யி­ருந்­தனர். விடு­தியின் பின் அறை­யி­லுள்ள அடுக்கு கட்­டிலின் மெத்தை பற்றி எரி­வதை கண்ட விடுதி மேற்­பார்­வை­யா­ளரும் ஆசி­ரி­ய­ரொ­ரு­வரும் பத­றிய­டித்­துக்­கொண்டு கீழ் மாடிக்கு ஓடி வந்து தீயை அணைக்கு­மா­று உதறு கோரி ஏனை­யோரை அழைத்­துள்­ளனர். அதற்குள் தீ கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு முழு­மை­யாக பற்­றிக்­கொண்­டுள்­ளது.

உட­ன­டி­யாக பிர­தே­ச­வா­சிகள் ஒன்­றி­ணைந்து குறித்த தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளனர். எனினும், அரபுக் கல்­லூ­ரியின் மூன்றாம் மற்றும் இரண்டாம் மாடிகள் முற்­றாக எரிந்து சேத­ம­டைந்­துள்­ளன.

இதன்­போது, குறித்த விடுதிக் கட்­ட­டத்­திற்குள் இருந்த மாண­வர்­களின் உடைகள் ஏனைய உட­மைகள், தள­பா­டங்கள் என்­பன முழு­மை­யாக எரிந்து நாச­ம­டைந்­துள்­ளன. இதனால் பெரு­ம­ளவு நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக கல்­லூ­ரியின் பணிப்­பாளர் மேலும் கூறினார்.

அத்­தோடு, ‘கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திக­தியும் இது போன்ற பேர­னர்த்தம் குறித்த மத்­ர­ஸாவில் இடம்­பெற்­றது. இதன்­போது, ஏற்­பட்ட சேதங்­களை திருத்­திய பின்னர் கடந்த 25 ஆம் திக­தியே மாண­வர்­களை கல்­லூ­ரிக்கு மீள அழைத்து விரி­வு­ரை­களை 26 ஆம் திகதி ஆரம்­பித்தோம். எனினும், சில தினங்­க­ளுக்குள் மீண்டும் இவ்­வா­றா­ன­தொரு அசம்­பா­விதம் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த மார்ச்சில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்­பி­லான பகுப்­பாய்வு அறிக்­கையை கடந்த வாரம் நாம் கோரி­யி­ருந்தோம். அத்­தோடு விசா­ரணை அறிக்கை தொடர்­பா­கவும் பொலி­ஸா­ரிடம் வின­வி­யி­ருந்தோம். எமக்கு எந்­த­வொரு பதிலும் தரப்­ப­ட­வில்லை. இதற்­கி­டையில், கடந்த திங்­க­ளன்று ஏற்­பட்ட தீ பர­வ­லை­ய­டுத்து உட­ன­டி­யாக பொலிஸார் ஸ்தலத்­துக்கு வந்­தனர். எம்­மிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். கொழும்­பி­லி­ருந்து இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­கள அதி­கா­ரி­களும் வருகை தந்து தீ பரவ ஆரம்­பித்த இடத்­தி­லி­ருந்து மாதி­ரி­களை எடுத்துச் சென்­றுள்­ளனர்” என்றார் பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி).

இத­னி­டையே, கடந்த திங்கட் கிழமை மதியம் ஹப்ஸா அர­புக்­கல்­லூரி வான் பரப்பில் ட்ரோன் கெம­ரா­வொன்று பறந்­துள்­ளதை விடுதி மேற்­பார்­வை­யாளர் அவ­தா­னித்­துள்ளார். இது குறித்து மத்­ரஸா நிர்­வாகம் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளது. எனினும், குறித்த ட்ரோன் கெம­ர­வா­னது அப்­ப­கு­தியில் தங்­கி­யி­ருக்கும் ஜேர்­ம­னியைச் சேர்ந்த சுற்­றுலா பிர­யாணி ஒரு­வ­ரு­டை­யது என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இத­னி­டையே, அடுத்­தடுத்து இரு­ த­ட­வைகள் குறித்த மத்­ர­ஸாவில் தீப்­ப­ரவல் ஏற்­பட்­டுள்­மை­யா­னது பிர­தேச மக்­க­ளி­டையே ஒரு­வித சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக, கடந்த திங்­க­ளன்று 29 ஆம் திகதி வெலி­கம பகு­தியில் முழு­மை­யாக மின்­துண்­டிப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் இவ்­வாறு தீ அனர்த்தம் நிகழ்ந்­துள்­ளமை பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இச்­சம்­பவம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த மத்­ரஸா கட்­ட­டத்­திற்­குள இன,மத பேத­மின்றி அனைத்து தரப்­பி­னரும் சென்று தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­த­மை­யா­னது பிர­தே­சத்தின் இன ஐக்­கி­யத்தை காட்­டு­வ­தா­கவும் பணிப்­பாளர் குறிப்­பிட்டார். மேலும், இயக்க, கொள்கை வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ள­தையும் அவர் ஞாப­க­மூட்­டினார்.

அத்­தோடு, ஸ்தலத்­துக்கு வருகை தந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் வெலி­கம அமைப்­பாளர், ஜனா­தி­பதி அலு­வ­லக பிர­தா­னியும், ஜனா­தி­ப­தியின் தேசிய பாது­காப்பு தொடர்­பி­லான ஆலோ­சகர் சாகல ரத்­னா­யக்­கவை தொடர்பு கொண்டு விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். இத­போது, இவ்­வி­டயம் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் ஒத்­து­ழைப்பு வழங்கும் எனவும் அவர் இதன்­போது உறு­தி­ய­ளித்­துள்ளார்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விரைந்த வெலி­கம நக­ர­சபை முன்னாள் நகர பிதா எச்.எம்.முஹம்மத், சபா­நா­ய­க­ருக்கு இது­வி­ட­ய­மாக தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

தீ விபத்தை அடுத்து அங்கு கற்கும் மாண­விகள் சில­ரது பெற்­றோரும், அந்த பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் சிலரும் அறி­வித்­ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் அன்று நள்­ளி­ரவு 12 மணி­ய­ளவில் வெலி­க­மைக்குச் சென்று தீ பர­வலால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள பிரஸ்­தாப மகளிர் அரபிக் கல்­லூ­ரியை பார்­வை­யிட்­ட­தோடு, அங்­கி­ருந்­த­வர்­க­ளிடம் நிலைமையைக் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 60 இலட்சம் ருபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனவந்தர்களும், ஊர் மக்களும், பழைய மாணவிகளும் ஒத்துழைப்புடன் மத்ரஸா திருத்தப்பட்டு மீள கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் மீண்டும் அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து, அரபுக் கல்லூரியில் பயிலும் 120 மாணவிகளும் தத்தமது ஊர்களுக்கு பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்­ளதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பில் பொலிசார் நியா­ய­மா­ன­தொர விச­ார­ணையை நடத்தி தீ விபத்­துக்­கான உண்­மை­யான கார­ணத்தை கண்­ட­றிய வேண்­டி­யது அவ­சிய­மாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.