காஸா சிறுவர் நிதியத்திற்கான பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0 224

காஸா மோதல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் ஸ்தாபிக்­கப்­பட்ட காஸா குழந்­தைகள் நிதி­யத்­திற்­கான (Children of Gaza Fund) நிதி நன்­கொ­டைகள் கடந்த வாரம் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

 

கல்­முனை ஹுதா ஜும்ஆ பள்­ளி­வாசல் 1,589,000 ரூபா­வையும், அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா கிண்­ணியா கிளை 5,300,000 ரூபா­வையும், கல்­முனை வலயக் கல்வி அலு­வ­லகம் 3,128,500 ரூபா­வையும், Sports First Foundation 300,000 ரூபா­வையும் சிறுவர் நிதி­யத்­திற்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளன.
முதற்­கட்­ட­மாக, இந்த ஆண்டு இப்தார் நிகழ்வை நடத்­து­வ­தற்கு அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்கள் ஒதுக்­கிய நிதியில் இருந்து கிடைத்த ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை, ஐக்­கிய நாடுகள் சபையின் உத்­தி­யோ­க­பூர்வ பிர­தி­நி­திகள் குழு மூலம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க பலஸ்­தீ­னுக்கு அண்­மையில் கைய­ளித்தார்.

அத்­துடன், “Children of Gaza Fund” நிதி­யத்­திற்கு பங்­க­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி அலு­வ­லகம் விடுத்­துள்ள வேண்­டு­கோ­ளுக்கு அமைய, அந்த நிதி­யத்­திற்கு பெரு­ம­ள­வான நிதி கிடைத்­துள்­ள­துடன், எதிர்­வரும் காலங்­களில் குறித்த பணம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பலஸ்­தீன அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

நன்­கொ­டை­யா­ளர்கள் 2024 மே 30, வரை மாத்­தி­ரமே இந்த நிதி­யத்­திற்கு தொடர்ந்து பங்­க­ளிக்க வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் நன்­கொ­டை­களை வழங்க விரும்­பு­வர்கள் இருப்பின், அந்த நன்­கொ­டை­களை மே 30 ஆம் திக­திக்கு முன்னர் இலங்கை வங்­கியின் (7010) தப்­ரோபன் கிளையில் (747) உள்ள கணக்கு இலக்­க­மான 7040016 க்கு வைப்­பீடு செய்ய வேண்டும் என்றும் அது தொடர்­பான பற்றுச் சீட்டை 077-9730396 என்ற எண்­ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்­கு­மாறும் ஜனா­தி­பதி அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

இந்த நன்கொடைகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.