இந்திய தூதுவர் ஒலுவில் துறைமுகம் விஜயம்

0 220

(எம்.ஏ.றமீஸ்)
ஒலுவில் துறை­முகம் அமைந்­துள்ள பிர­தே­சத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்கும், அதன் அபி­வி­ருத்தி தொடர்பில் மேல­தி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கும் நேற்று(01) இந்­திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஒலுவில் பிர­தே­சத்­திற்கு விஜயெமொன்றை மேற்­கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யின்­த­லை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீமின் வேண்­டு­கோளின் பேரிலே,அவ­ரது ஒலுவில் விஜயம் அமைந்­தது.

ஒலுவில் துறை­மு­கத்­தையும் அதை சூழ­வுள்ள பிர­தே­சங்­க­ளையும் அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பிலும், அப்­பி­ர­தே­சத்தில் ஏற்­படும் கட­ல­ரிப்பு தொடர்­பிலும் விரி­வான கலந்­து­ரை­யா­ட­லொன்று அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்தில் இடம் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஷல் காசிம், முன்னாள் மாகாண அமைச்­சர்­க­ளான எம்.எஸ்.உது­மா­லெவ்வை எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் மீனவர்கள் துறை சார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.