உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் விசாரணைகளை முறையாக நடத்தவில்லை

ஜனாதிபதியையும் சாடுகிறார் முஜிபுர்

0 170

(எஸ்.என்.எம்.சுஹைல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை உரி­ய­மு­றையில் நடத்தும் தேவை இந்த அர­சாங்­கத்­திற்கும் ஜனா­தி­ப­திக்கும் இல்லை என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பிரதிச் செய­லா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாதிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ, கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஐக்­கிய மக்கள் சக்­தியால் மாத்­தி­ரமே நீதியை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

விடி­வெள்­ளிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­காணல் ஒன்­றின்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­குதல் தொடர்­பி­லான உரிய விசா­ர­ணை­களை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வில்லை. அதற்கு மாற்­ற­மாக வெவ்­வேறு கதை­களை கூறி பிரச்­சி­னை­களை திசை திருப்பிக் கொண்­டி­ருக்­கி­றது.

இவர்­களின் செயற்­பா­டு­களை பார்க்­கும்­போது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ரதா­ரி­களை காப்­பாற்றும் அல்­லது மறைக்கும் செயற்­பா­டு­க­ளையே செய்து வரு­வ­தாக தோன்­று­கி­றது.

அத்­தோடு, விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்­களை வைத்து பிர­தான சூத்­தி­ர­தா­ரியார் என்­பதை வெளிக்­கொ­ணர முடியும். ஆனால், அதை இந்த அர­சாங்கம் செய்­வ­தாக தெரி­ய­வில்லை.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சாரா ஜெஸ்மின் என்­கிற புலஸ்­தினி மஹேந்­திரன் தொடர்பில் அர­சாங்கம் அவ்­வப்­போது மாறு­பட்ட விட­யங்­களை தெரி­வித்து வரு­கின்­றது. இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் அர­சாங்கம் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தயா­ராக இல்லை என தெரி­கி­றது.

ஐக்­கிய மக்கள் சக்தி அர­சாங்கம் உரு­வாக்­கப்­ப­டும்­போது நாம் உரிய முறையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம். 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்ச ஆட்சிக்கு வந்த பிறகு விசா­ர­ணையில் தேக்க நிலை காணப்­ப­ட்டது.

எனவே, அதற்கு முன்னர் விசாரணைகள் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டதோ அதிலிருந்து நாம் விசாரணைகளை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.