கான் யூனிஸ் மருத்துவமனையில் பாரிய மனித புதைகுழி

0 243

ஏ.ஆர்.ஏ.பரீல்

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் இது­வரை காலம் இஸ்ரேல் நடாத்தி வந்த தாக்­கு­தல்­களின் அவ­லங்கள் தற்­போது ஒவ்­வொன்­றாக அம்­ப­லத்­துக்கு வரத் தொடங்­கி­யுள்­ளன. அப்­பாவி பலஸ்­தீன மக்­களை இஸ்­ரே­லிய படை­யினர் கொடூ­ர­மாகக் கொலை செய்­துள்­ளனர். அக்­கொ­லைகள் மிருகத் தன­மா­னவை என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளன.

கான் ­யூனிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள நாஸர் மருத்­துவ கட்­டிடத் தொகு­தியில் பாரிய மனித புதை­கு­ழி­யொன்று பலஸ்­தீன சிவில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­புதைகுழி­யி­லி­ருந்து இஸ்­ரே­லிய படை­யி­னரால் மிரு­கங்­களைப் போல் புதைக்­கப்­பட்ட 180க்கும் மேற்­பட்ட ஜனா­ஸாக்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. இஸ்ரேல் கடந்த 6 மாதங்­க­ளாக தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட இப்­பி­ராந்­தியம் அழி­வினால் பாழ­டைந்து போயுள்­ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழ­மை­களில் மேற்­கெள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கை­களின் போதே இவ்­வாறு பெரும் எண்­ணிக்­கை­யி­லான பலஸ்­தீ­னர்­களின் ஐனா­ஸாக்கள் அநா­த­ர­வான நிலைக்கு உள்­ளா­கி­யி­ருந்­தன. கடந்த 7 ஆம் திகதி இஸ்­ரே­லிய இரா­ணுவம் காஸாவின் தெற்கு நக­ரான கான்­யூ­னி­ஸி­லி­ருந்தும் வெளி­யே­றி­யதன் பின்பே இந்த கோர கொலைகள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. தற்­போது கான்­யூனிஸ் நகரம் இடி­பா­டு­க­ளுடன் கூடிய பேய் நக­ர­மாகக் காட்­சி­ய­ளிக்­கி­றது.

நாஸர் வைத்­தி­ய­சாலை முன்­றலில் பாரிய புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­ஸாக்­களை பலஸ்­தீன சிவில் பாது­காப்பு பிரி­வி­னரும்,மருத்­துவ உத­வி­யா­ளர்­களும் கண்டு பிடித்­தி­ருந்­தனர். இந்த ஜனா­ஸாக்­களில் வயோ­திப பெண்கள், சிறு­வர்கள் மற்றும் இளை­ஞர்கள் உள்­ள­டங்கி­யி­ருந்­தனர் என அல் ஜெஸீரா செய்திச் சேவையைத் சேர்ந்த ஹானி மஹ்மூத் கான்­யூ­னி­ஸி­லி­ருந்து அறிக்­கை­யிட்­டி­ருந்தார். ஜனா­ஸாக்கள் இடப்­பட்­டி­ருந்த பிளாஸ்டிக் பைகளில் இஸ்­ரே­லிய ஹீபுறு மொழியில் எழுத்­துக்கள் எழு­தப்­பட்­டி­ருந்­தன.

‘எங்­க­ளது குழு­வினர் தொடர்ந்தும் கான்­யூ­னிஸில் தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்­வரும் நாட்­களில் மேலும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான தியா­கி­க­ளா­கி­விட்ட ஐனா­ஸாக்­களை எதிர்­பார்க்க முடியும்’ என பலஸ்­தீன அவ­சர சேவை தெரி­வித்­துள்­ளது. பாரிய புதை குழியில் புதைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களின் ஆள­டை­யா­ளங்கள் இது­வரை அறி­யப்­ப­ட­வில்லை.

இதே­வேளை கடந்­த­வாரம் அல்­சிபா வைத்­தி­ய­சா­லை­யிலும் பாரிய புதை­கு­ழி­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பல புதை­கு­ழி­களில் இதுவும் ஒன்­றாகும். அல் சிபா வைத்­தி­யசாலை கரை­யோ­ரத்தில் பெரும் வைத்­திய வச­திகள் கொண்ட வைத்­தி­ய­சா­லை­யாகும்.

காஸா­வுக்கு எதி­ரான இஸ்­ரேலின் யுத்­தத்­தினால் சுமார் 34 ஆயிரம் பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

கொல்­லப்­பட்­டுள்ள பலஸ்­தீ­னர்­களில் மூன்றில் இரண்டு வீத­மா­ன­வர்கள் சிறு­வர்­களும் பெண்­க­ளு­மா­வார்கள். கொல்­லப்­பட்­ட­வர்­களின் முழு­மை­யான எண்­ணிக்­கையை அறிக்­கை­யிட முடி­யா­துள்­ளது. இஸ்­ரேலின் வான் தாக்­குதல் கார­ண­மாக இடி­பா­டு­க­ளுக்­குள்­ளான கட்­டிட சிதை­வு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள ஜனா­ஸாக்­களை கண்­டு­பி­டிக்க முடி­யாத நிலைமை அங்கு காணப்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட பிர­தே­சங்­களை மருத்­துவ உத­வி­யா­ளர்­களால் அடை­ய­ மு­டி­யா­துள்­ளது.

இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் காஸாவின் தெற்கு நக­ர­மான ரபா உட்­பட கரை­யோர பகு­தி­களில் தொடர்ந்தும் இடம்­பெ­று­கி­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ரபா மீது இஸ்ரேல் மேற்­கொண்ட இரவு நேர தாக்­கு­தலில் 22 பலஸ்­தீ­னர்கள் பலி­யா­கி­யுள்­ள­தாக ஹமாஸ் சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இவர்­களில் 18 பேர் சிறு­வர்­க­ளாவர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இஸ்­ரே­லினால் மேற்­கொள்­ளப்­பட்ட முதல் தாக்­கு­தலில் கணவன், மனைவி மற்றும் அவர்­க­ளது 3 வயது பிள்ளை கொல்­லப்­பட்­டனர். மூவரின் ஜனா­ஸாக்­களும் அரு­கி­லுள்ள குவைத் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. கொல்­லப்­பட்ட பெண் கர்ப்­ப­வ­தி­யாவார். வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் பெண்ணின் குழந்­தையை மிக சிர­மத்தின் மத்­தியில் காப்­பாற்­றி­னார்கள். மேற்­கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது தாக்­கு­தலில் 19 பலஸ்­தீ­னர்கள் பலி­யா­னார்கள். இவர்­களில் 17 சிறு­வர்­களும், 2 பெண்­களும் அடங்­குவர். இவர்கள் அனை­வரும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். இந்த வான் வழித் தாக்­கு­த­லுக்கு முன்பு ரபாவில் 9 பேர் கொல்­லப்­பட்­டனர். இவர்­களில் ஆறு பேர் சிறு­வர்­க­ளாவர்.

ரபாவில் இஸ்­ரேலின் தரை­வழி ஆக்­கி­ர­மிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக அல் ஜஸீ­ராவின் ஊட­க­வி­ய­லாளர் ஹானி மஹ்மூத் குறிப்­பிட்­டுள்ளார். வீடு­க­ளுக்குள் இருக்கும் குடும்­பங்­களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்­கு­தல்­களை மேற்­கொ­ணடு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது பாதுகாப்பு கருதி ஓரிடத்திலிருந்து மற்றுமோர் இடத்துக்கு இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பு சவாலுக்குரியதாக மாறியுள்ளது.

தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் பிரயோகித்து வரும் நிலையிலும் இஸ்ரேல் எகிப்து எல்லையிலுள்ள நகர் மீது தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆறு மாத காலமாக நீடித்து வரும் யுத்தத்தை நிறுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தாலும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.